Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாறாத அன்பு

மாறாத அன்பு

கிசெத் என்ற எபிரெய வார்த்தை பெரும்பாலும் இப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடமையுணர்ச்சி, உத்தம குணம், உண்மைத்தன்மை, பற்று ஆகியவற்றால் தூண்டப்பட்ட அன்பை இது குறிக்கிறது. மனிதர்கள்மீது கடவுள் வைத்திருக்கும் அன்பைப் பற்றிச் சொல்வதற்கு இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களுக்கு இடையே காட்டப்படுகிற அன்பையும் இது குறிக்கிறது.—யாத் 34:6; ரூ 3:10, அடிக்குறிப்பு.