Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவுக்காகவே நான் வாழ்வேன்!

யெகோவாவுக்காகவே நான் வாழ்வேன்!
  1. 1. ஆனந்த வாழ்க்கை இதே! அதில் வண்ணக் கனவுகளே!

    கனவு நனவாக எந்தப் பாதையில் நான் நடப்பேன்?

    என் வாழ்க்கையிலே, என்னதான் வந்தாலுமே

    யெகோவாவுக்காகவே நான் வாழ்வேனே!

    (பல்லவி)

    ஆயிரம் சொந்தங்களே எனக்கிருந்தாலும்

    யெகோவா எந்தன் இணை இல்லா தோழன்!

    அவர் இதயம் தினமும் மகிழச் செய்வேனே!

    எல்லாமே அள்ளித் தந்தார்; மறவேன் என் வாழ்வில்,

    என்னை முழுதாய் தந்தேன் அவர் கையில்.

    அவர் பாதையில் நாளும் நான் நடை போடுவேனே!

  2. 2. என்னை வசீகரிக்க உலகம் தூண்டில் போடலாமே!

    லட்சங்கள் சம்பாதிக்க லட்சிய பாதை மாறுவேனோ?

    யெகோவாவுக்கே என்னையே தந்துவிட்டேன்!

    அவர் பக்கம் உறுதியாய் நிற்பேனே!

    (பல்லவி)

    ஆயிரம் சொந்தங்களே எனக்கிருந்தாலும்

    யெகோவா எந்தன் இணை இல்லா தோழன்!

    அவர் இதயம் தினமும் மகிழச் செய்வேனே!

    எல்லாமே அள்ளித் தந்தார்; மறவேன் என் வாழ்வில்,

    என்னை முழுதாய் தந்தேன் அவர் கையில்.

    அவர் பாதையில் நாளும் நான் நடை போடுவேனே!

    (பிரிட்ஜ்)

    என் வாழ்வு வற்றாத நதி போலவே

    என்றும் ஓடிடுமே தேவன் துணையோடே!

    எந்நாளும் அவரை மகிழ செய்தால்

    எந்தன் வாழ்க்கையே தேனாய் இனித்திடுமே!

    (பல்லவி)

    ஆயிரம் சொந்தங்களே எனக்கிருந்தாலும்

    யெகோவா எந்தன் இணை இல்லா தோழன்!

    அவர் இதயம் தினமும் மகிழச் செய்வேனே!

    எல்லாமே அள்ளித் தந்தார்; மறவேன் என் வாழ்வில்,

    என்னை முழுதாய் தந்தேன் அவர் கையில்.

    அவர் பாதையில் நாளும் நான் நடை போடுவேனே!

    அவர் பாதையில் நாளும் நான் நடை போடுவேனே!