Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாற்றங்கள் செய்தேன்!

மாற்றங்கள் செய்தேன்!
  1. 1. ஓர் எந்திரம் போல தினந்தினம்

    நான் சேவை செய்கின்றேன்,

    உற்சாகமில்லாமலே!

    இலக்கு இல்லாமல் நான் ஓடுகின்றேன்.

    எந்தன் கூட்டிலிருந்து நானும்

    சிறகை விரிப்பேன்!

    (பல்லவி)

    வாழ்வில் மாற்றங்களை இன்று செய்கின்றேன்.

    நல் உள்ளங்களை தேடி போகின்றேன்.

    யெகோவாவே, உங்களை நம்பினேன்.

    நான் மாற்றங்கள் செய்ய தொடங்கிவிட்டேன்!

  2. 2. ஆம்! தைரியம் வேண்டும், தீர்மானிக்க!

    துணிந்திறங்கினால், உற்சாகம் ஊற்றெடுக்கும்!

    நல் வாய்ப்புகள் கண் முன்னால் நிற்கின்றது!

    புது வாசல்கள் உள்ளதிங்கே,

    நுழைந்து நான் பார்க்கின்றேன்.

    (பல்லவி)

    வாழ்வில் மாற்றங்களை இன்று செய்கின்றேன்.

    நல் உள்ளங்களை தேடி போகின்றேன்.

    யெகோவாவே, உங்களை நம்பினேன்.

    நான் மாற்றங்கள் செய்ய தொடங்கிவிட்டேன்!

    (பிரிட்ஜ்)

    வாழ்வின் லட்சியங்கள் எல்லாம்

    கானல் நீராகுமோ?

    நெஞ்சின் காயங்கள் ஆற

    வழியில்லையோ?

    ஆனால், எந்தன் பாரமெல்லாம்

    தேவன் தோளில் வைத்தேன்.

    ஆசீர்வாதங்கள் அளவில்லாமல்

    நான் பெற்றேன்.

    (பல்லவி)

    வாழ்வில் மாற்றங்களை தினம் செய்கின்றேன்.

    நல் உள்ளங்களை தேடி போகின்றேன்.

    யெகோவாவே, உங்களை நம்பினேன்.

    வாழ்வில் மாற்றங்கள் செய்தேன், உம் ஆசி பெற்றேன்!

    (பல்லவி)

    வாழ்வில் மாற்றங்களை இன்று செய்கின்றேன்.

    நல் உள்ளங்களை தேடி போகின்றேன்.

    யெகோவாவே, உங்களை நம்பினேன்.

    நான் மாற்றங்கள் செய்தேன்.

    (பல்லவி)

    வாழ்வில் மாற்றங்களை இன்று செய்கின்றேன்.

    நல் உள்ளங்களை தேடி போகின்றேன்.

    யெகோவாவே, உங்களை நம்பினேன்.

    நான் மாற்றங்கள் செய்ய தொடங்கிவிட்டேன்!

    தொடங்கிவிட்டேன்!