Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தனிமையில் விடமாட்டார்!

தனிமையில் விடமாட்டார்!
  1. 1. அநாதை பிள்ளை போல்,

    தனியாய் வாடினேன்.

    தனிமையே துணையாய்,

    கண்ணீர் கடலில் நீந்தினேன்.

    என் காயம் ஆற்றிட,

    என் நெஞ்சம் தேற்றிட,

    என் கண்ணீரை துடைக்க,

    ஓர் ஜீவன் இங்கே இல்லையே!

    (பல்லவி)

    என் கூடவே யெகோவாவே

    இருக்கிறார் எந்நாளுமே!

    என் வேதனை பார்க்கின்றாரே!

    என் வேண்டுதல் கேட்கின்றாரே!

    என்னை விட மாட்டார்,

    தனிமையிலே!

  2. 2. என் வாழ்வே போனாலும்,

    உம் பாதை நடப்பேன்.

    யார் என்னை கைவிட்டாலும்,

    நீங்கள் விடுவதில்லையே.

    யெகோவா தேவனே,

    நீர் எந்தன் தோழனே!

    என் நம்பிக்கை ஒளியே!

    என்றும் நீர் என்னருகிலே!

    (பல்லவி)

    என் கூடவே யெகோவாவே

    இருக்கிறார் எந்நாளுமே!

    என் வேதனை பார்க்கின்றாரே!

    என் வேண்டுதல் கேட்கின்றாரே!

    என்னை விட மாட்டார், தனிமையிலே!

    யெகோவாவே

    இருக்கிறார் எந்நாளுமே!

    என் வேதனை பார்க்கின்றாரே!

    என் வேண்டுதல் கேட்கின்றாரே!

    என்னை விட மாட்டார்,

    தனிமையிலே!