Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முத்தைத் தேடி

முத்தைத் தேடி
  1. 1. சத்யம் ஒரு முத்து போல

    விலைமதிப்பில்லா சொத்து!

    அலையலையாக கேள்விகள் நெஞ்சில்

    அலைந்தோம் பதில் தேடி!

    (பல்லவிக்கு முன்)

    சத்யம் கிடைக்கும் என்று நம்பினோம்.

    நல் முத்தை தேடிடும் மனிதர்போல் தேடினோம்!

    (பல்லவி)

    தேடி, தேடி அலைந்தோம்

    மனதை குடையும்

    கேள்விக்கெல்லாம் பதில் எங்கே?

    நம் உயிரின் தோற்றம், தேவராஜ்யம் பற்றி அறியும் நாள் என்றோ?

    தேடியலைந்தோம்

  2. 2. தேவன் பெயரை பார்த்தபோது,

    சிலிர்த்தது எங்கள் இதயம்!

    ஜெபங்களை கேட்கின்றவர்

    யெகோவா ஒருவரே!

    (பல்லவிக்கு முன்)

    சத்யம் கிடைக்கும் என்று நம்பினோம்.

    முக்யமான கேள்விக்கெல்லாம் பதில்கள் கண்டோமே!

    (பல்லவி)

    தேடி, தேடி அலைந்தோம்

    மனதை குடைந்த

    கேள்விக்கெல்லாம் பதில் இங்கே!

    நம் உயிரின் தோற்றம், நல்அரசாங்கத்தாலே பூமியில் வரும் மாற்றம்

    கண்டுபிடித்தோம்!

    (பிரிட்ஜ்)

    சத்யத்தை தேடுவோரை நாம் தேடியே போவோம்.

    சத்ய முத்தை காட்டுவோம்

    கேள்வி என்ற அலைகடலையே

    தாண்ட வழி காட்டுவோம்

    முத்தை பரிசாய் கொடுப்போம்

    (பல்லவி)

    தேடி, தேடி அலைந்தோம்.

    மனதை குடைந்த

    கேள்விக்கெல்லாம் பதில் இங்கே!

    நம் உயிரின் தோற்றம், தேவாட்சியாலே எங்கும் வரும் முன்னேற்றம்!

    கண்டுபிடித்தோம்!