Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிறு பிள்ளை போலே

சிறு பிள்ளை போலே

டவுன்லோட்:

  • லீட்ஷீட்

  1. 1. க்றிஸ்து சொல்லைக் கேட்டு

    நாம் சிறு பிள்ளை போலே,

    நம் உள்ளத்தையே மாற்றும் போதுதான்,

    நாம் யாரையுமே குறைவாய்

    நினைக்க மாட்டோம், நம் கண்கள் பார்க்காதே பாரபட்சம்தான்.

    (பல்லவி)

    பிள்ளையைப் போல் அன்பு காட்ட ஆசை கொண்டோம்.

    கண்களால் குற்றத்தை அல்ல குணம் கண்டோம்.

    பிள்ளையைப் போல் இரக்கம்தான் கற்றுக் கொண்டோம்.

    கண்களால் குடும்பம் போன்ற பந்தம் கண்டோம்.

  2. 2. இன்றெங்கும் தயவில்லை,

    நெஞ்சில் ஈரம் கானல் நீரே.

    நம் கண்களில் உயர்ந்தோர் என்றுதான்

    நாம் எல்லாரையும் பார்ப்போமா?

    இவ்வெண்ணம் உள்ளோர் நாம் இக்காலத்தில் காண்பது கஷ்டம்.

    (பல்லவி)

    பிள்ளையைப் போல் அன்பு காட்ட ஆசை கொண்டோம்.

    கண்களால் குற்றத்தை அல்ல குணம் கண்டோம்.

    பிள்ளையைப் போல் இரக்கம்தான் கற்றுக் கொண்டோம்.

    கண்களால் குடும்பம் போன்ற பந்தம் கண்டோம்.

    பிள்ளையாய் ஆனோம்

    (பிரிட்ஜ்)

    தேவனின் வீட்டில்

    நாளும் வளர்வோம்.

    ஆணவம் மட்டும்

    வரக் கூடாதே.

    தந்தை யெகோவா

    சேவையில் என்றுமே

    பிள்ளையைப் போல் தாழ்மை வேண்டுமே.

    (பல்லவி)

    பிள்ளையைப் போல் அன்பு காட்ட ஆசை கொண்டோம்.

    கண்களால் குற்றத்தை அல்ல குணம் கண்டோம்.

    பிள்ளையைப் போல் இரக்கம்தான் கற்றுக் கொண்டோம்.

    கண்களால் குடும்பம் போன்ற பந்தம் கண்டோம்.

    பிள்ளையாய் ஆனோம்.