Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனப்பூர்வமாய் மன்னியுங்கள்

மனப்பூர்வமாய் மன்னியுங்கள்

டவுன்லோட்:

  • லீட்ஷீட்

  1. 1. கண்ணீரிலே என் பாதையெல்லாம்,

    நிழல் போலவே என் காயமே,

    வாழ்க்கை கானல் நீரானதே.

    மன்னிக்கத்தான் நான் யோசித்தாலும்

    என் நெஞ்சம் இன்னும் குத்திக்காட்டுதே,

    காயம் என்னில் நியாயம் கேட்குதே.

    (பல்லவிக்கு முன்)

    நான் உதவி கேட்டு ஜெபிப்பேனே!

    என் வேதனை உணர்வார் என் தந்தையே!

    யெகோவாவின் துணையால்

    (பல்லவி)

    நான் மனதார

    விரல்கள் கோர்ப்பேன் அன்பாலே.

    நாளும் உதவி கேட்பேனே

    எல்லாம் மன்னிக்கவே,

    நான் யெகோவாவைப் போல்

    மனப்பூர்வமாய் மன்னித்திடவே.

    நாளும் உதவி கேட்பேனே

    எல்லாம் மன்னிக்கவே,  

    மறக்கவே.

  2. 2. காலங்கள்தான் கரைந்தாலுமே

    காயங்கள் எட்டி பார்க்குதே.

    நாளும் என்னுள் போராடுகிறேன்.

    சோகங்களை புதைத்தாலுமே

    நினைவு சூழுதே மேகங்கள் போல்,

    என் நெஞ்சில் பாரம் கூடுதே.

    (பல்லவிக்கு முன்)

    நான் உதவி கேட்டு ஜெபிப்பேனே!

    என் வேதனை உணர்வார் என் தந்தையே!

    யெகோவாவின் துணையால்

    (பல்லவி)

    நான் மனதார

    விரல்கள் கோர்ப்பேன் அன்பாலே.

    நாளும் உதவி கேட்பேனே

    எல்லாம் மன்னிக்கவே,

    நான் யெகோவாவைப் போல்

    மனப்பூர்வமாய் மன்னித்திடவே.

    நாளும் உதவி கேட்பேனே

    எல்லாம் மன்னிக்கவே,

    மறக்கவே,

    மன்னிக்கவே,

    மறக்கவே,

    மன்னிக்கவே.