பூஞ்சோலை பார்ப்போம் வா!
டவுன்லோட்:
1. கண்கள் மூடி நான் பார்க்கின்றேன்
கண் கவரும் வண்ண பூமியை!
போலாம் வா,
பூஞ்சோலை
பார்ப்போம் வா!
2. தோட்டா சத்தம் ஓய்ந்துபோனது!
பூந்தோட்டமாய் பூமி ஆனது!
தந்தையின்
ஆசைபோல்
பூஞ்சோலை!
(பல்லவி)
சந்தோஷம்
நம் வாழ்வெல்லாமே வழிந்தோடும்!
புன்னகை
புதிய பூமியில் மொழியாகும்!
3. மண்ணின் மடியில் கண் மூடிய
கண்மணிகள், இதோ கண்
முன்னாலே!
போலாம் வா,
பூஞ்சோலை
பார்ப்போம் வா!
4. முட்கள் நிறைந்த நம் வாழ்விலே,
முல்லை மலர்கள், இனி பூத்திடும்!
போலாம் வா,
பூஞ்சோலை
பார்ப்போம் வா!
(பல்லவி)
சந்தோஷம்
நம் வாழ்வெல்லாமே வழிந்தோடும்!
புன்னகை
புதிய பூமியில் மொழியாகும்!
5. யெகோவாவின் வார்த்தை போதுமே!
போகும் பாதை அது காட்டுமே!
(பிரிட்ஜ்)
வானவில் காலங்கள்
அருகிலே!
வண்ணங்கள் வந்து சேரும்
வாழ்வில்!
6. கண்கள் மூடி நீயும் பார்,
கண் கவரும் வண்ண பூமியை!
போலாம் வா,
பூஞ்சோலை
பார்ப்போம் வா!