Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் உள்ளத்தை நான் காத்துக்கொள்வேன்

என் உள்ளத்தை நான் காத்துக்கொள்வேன்

டவுன்லோட்:

  • லீட் ஷீட்

  1. 1. என் உள்ளத்தில் வெண்மேகம் போல்

    என் எண்ணங்கள் அலைந்தாடும்.

    நன்மைகள் நான் யோசிப்பேன்

    ஏனோ சோர்ந்து போகின்றேன்.

    கெஞ்சுகிறேன் என் தேவனே

    நீர் என்னை ஆராய்ந்து என் உள்ளத்தில்

    வீண் சிந்தனை உண்டென்றால்

    நான் காண செய்யும் யெகோவா

    (பல்லவி)

    என் உள்ளத்தையே நான் காத்துக்கொள்வேன்

    வைப்பேன் அதை நன்மைகள் மேல்

    வீண் சிந்தையில் விழாமல் நின்று

    என் உள்ளத்தையே நான் காத்துக்கொள்வேன்

  2. 2. உம் சேவைக்கே நான் ஏங்குவேன்

    ஆனாலும் என்னுள் போராட்டம்.

    உள்ளேனோ உம் அன்பிலே

    என்றே உள்ளம் யோசிக்கும்.

    தடை எல்லாம் நான் தாண்டுவேன்

    பூஞ்சோலை நற்செய்தி எங்கும் சொல்வேன்.

    உம் கைகள் தாங்கும்போது

    என் பாரம் நீங்கும் யெகோவா

    (பல்லவி)

    என் உள்ளத்தையே நான் காத்துக்கொள்வேன்

    வைப்பேன் அதை நன்மைகள் மேல்

    வீண் சிந்தையில் விழாமல் நின்று

    என் உள்ளத்தையே நான் காத்துக்கொள்வேன்.

    காத்துக்கொள்வேன்

    (பிரிட்ஜ்)

    வீண் சிந்தனை சூழ்ந்து நின்றும்

    வீழாதே என் ஓட்டம் என்றும்.

    தோற்பேன் என்ற பயம் இல்லையே

    யெகோவா உம்மால் பாதை ஒன்று காண்பேன்.

    பாதை ஒன்று காண்பேன்

    (பல்லவி)

    என் உள்ளத்தையே நான் காத்துக்கொள்வேன்.

    வைப்பேன் அதை நன்மைகள் மேல்.

    வீண் சிந்தையில் விழாமல் நின்று

    என் உள்ளத்தையே நான் காத்துக்கொள்வேன்.