Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வீழ்ந்தாலும் கற்றுக்கொள்

வீழ்ந்தாலும் கற்றுக்கொள்

டவுன்லோட்:

  1. 1. வழி மாறிச் சென்றாயோ

    என் கண்ணே நீ எங்கே

    மண்ணில் வீழ்ந்தாலும்

    என் மடி சாயும் பிள்ளை நீ

    உன் கையைத் தா இன்று

    பாவம் இன்றி யார் இங்கு

    தோல்வி வந்து போகட்டும்

    உன் காயம் யாவும் பாடம் ஆகட்டும்

    (பல்லவி)

    நீ வரும் பாதையை

    கண்களால் தேடியே

    தந்தையின் நெஞ்சமே

    ஏங்குதே செல்வமே

    போனது போகட்டும்

    உன் தோல்வியும் நன்மையே

    நீ பாடம் கற்றதால்

    இன்னும் ஞானம் ஆகிறாய்

    வீழ்ந்தாலும் கற்றுக்கொள்

  2. 2. அன்றாடம் காலை வானம்

    விடியல் உன்னில் தேடும்

    விழுந்தாலும் மீண்டும் தான்

    எழுந்தே ஓடி வா

    தேவன் வார்த்தையாலே

    உன் வாழ்க்கை மாற வேண்டும்

    யெகோவா தாங்கும்போது

    உன் சோகத்தில் ஏன் மூழ்கிட வேண்டும்

    (பல்லவி)

    நீ வரும் பாதையை

    கண்களால் தேடியே

    தந்தையின் நெஞ்சமே

    ஏங்குதே செல்வமே

    போனது போகட்டும்

    உன் தோல்வியும் நன்மையே

    நீ பாடம் கற்றதால்

    இன்னும் ஞானம் ஆகிறாய்

    (பிரிட்ஜ்)

    உன் நெஞ்சம் கொல்லும்போதும்

    நம் யெகோவா பாசம் வெல்லும்

    உன் விழி நீரில் தீங்கெல்லாம் நீங்கட்டுமே

    வா வீட்டுக்கு

    (பல்லவி)

    நீ வரும் பாதையை

    கண்களால் தேடியே

    தந்தையின் நெஞ்சமே

    ஏங்குதே செல்வமே

    போனது போகட்டும்

    உன் தோல்வியும் நன்மையே

    நீ பாடம் கற்றதால்

    இன்னும் ஞானம் ஆகிறாய்

    வீழ்ந்தாலும் கற்றுக்கொள்

    வீழ்ந்தாலும் கற்றுக்கொள்