Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

சூழலியல் சரணாலயம் “பன்டனல்—சாந்தம் தவழும் சரணாலயம்” (செப்டம்பர் 8, 1999) என்ற கட்டுரைக்கு நன்றி. கற்பனை உலகில் நானும் எழுத்தாளருடன் சாந்தம் தவழும் அந்த இடத்திற்குச் சென்று அங்கு நிலவிவரும் சமாதானத்தையும் அமைதியையும் அனுபவித்து மகிழ்ந்தேன். கடவுள் முழு பூமியையும் இதே நிலைக்கு மாற்றப்போகும் அந்நாளை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

எம்.ஏ., இத்தாலி

சர்க்கரை வியாதி “உங்க மகளுக்கு சர்க்கரை வியாதி!” (செப்டம்பர் 22, 1999) என்ற கட்டுரையை இப்போதுதான் இரண்டாம் முறை வாசித்து முடித்திருக்கிறேன். பத்து மாதங்களுக்கு முன்பு எனக்கு டைப் 1 நீரிழிவு நோய் இருப்பதை அறிந்தேன். என்னுடைய 17-வது வயதிலிருந்தே முழுநேர ஊழியம் செய்து வருகிறேன். அப்போதெல்லாம் நல்ல ஆரோக்கியமுள்ளவளாகத்தான் இருந்தேன். இந்த நோயால், கடந்த சில மாதங்களில் என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை செய்ய வேண்டியதாயிற்று. நான் இன்சுலின் பம்பை பயன்படுத்த வேண்டியுள்ளது. மேலும் மருத்துவச் செலவு அதிகமாக இருந்ததால் பயனியர் சேவையை நிறுத்திவிட்டேன். ஆனால், இதுபோன்ற சோதனைகளை மற்றவர்களும் அனுபவிக்கிறார்கள் என்பதை எங்களுக்கு இக்கட்டுரை உணர்த்தியது, எனவே இதை பிரசுரித்ததற்கு நன்றி.

பி.எஃப்., ஐக்கிய மாகாணங்கள்

என்னுடைய நான்கு வயது மகன் இரண்டு வயதிலிருந்தே நீரழிவு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான். சோனியாவும் அவளுடைய குடும்பத்தினரும் பட்ட அவஸ்தையை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. நாங்களும் இப்பிரச்சினையை சமாளிப்பதற்கு அன்பான கிறிஸ்தவ சகோதரத்துவம் கைகொடுத்ததை எங்களால் மறக்க முடியாது.

சி.ஆர்., மால்டோவா

கொஞ்ச நாட்களாகவே இந்த விஷயத்தின்பேரில் உற்சாகமூட்டும் கட்டுரையை வாசிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஐந்து வயதிலிருந்தே எனக்கு நீரழிவு நோய் இருக்கிறது. இப்போது எனக்கு 17 வயது. சில சமயங்களில் இந்த நீரழிவு நோயை சமாளிப்பது பெரும் போராட்டம்தான். ஆனால் இந்த எளிய கட்டுரையை பெற்றதில் அதிக மகிழ்ச்சியடைந்தேன். இதை என்னுடைய வீட்டிலும் எல்லா நண்பர்களிடமும் காட்டுகிறேன். இதனால் நீரழிவு நோயைப் பற்றிய அவர்களுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும், அதைப் பற்றிய அவர்களுடைய அறிவும் விருத்தியாகும்.

கே.டபிள்யு., கனடா

பாதுகாப்பற்றதா? “மகளிரின் மாபெரும் பங்கு” (ஜூன் 22, 1999) என்ற அருமையான கட்டுரையை வாசித்தேன். கட்டுமான பணியில் இருக்கும் பெண்கள் தங்கள் கண்களுக்குப் பாதுகாப்பாக எதையும் அணியாதிருப்பதை பார்ப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஆர்.எல்., ஐக்கிய மாகாணங்கள்

இந்த வாலண்டியர்கள் வேலை செய்கையில் கண் பாதுகாப்பு கவசங்களை உண்மையில் அணிந்திருந்தார்கள் என்பதை எமது வாசகர்களுக்கு தெரிவிக்கிறோம். அவர்கள் போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுக்கையில் முகங்கள் பளிச்சென்று தெரிவதற்கு கண் பாதுகாப்பு கவசங்களை நீக்கிவிட்டனர்.—ED.

அநீதி “இளைஞர் கேட்கின்றனர் . . . அநியாயத்தை நான் எப்படி சமாளிப்பது?” (செப்டம்பர் 22, 1999) என்ற கட்டுரைக்கு நான் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். நான் இளைஞனாக இருந்தாலும்கூட வாழ்க்கையில் ஏகப்பட்ட அநியாயத்திற்கும் வன்முறைக்கும் ஆளாகியிருக்கிறேன். அவை ஆழமான உணர்ச்சிப்பூர்வ காயங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த எட்டு வருடங்களாக செய்துவரும் பயனியர் வேலைக்கு இது ஒரு தடையாக நிற்கிறது. “அநீதியைச் சமாளிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் என்னுடைய நம்பிக்கையை உயிர்ப்பித்தன. இந்த வார்த்தைகள் அன்பை வெளிப்படுத்துகின்றன. ஆகவே இக்கட்டுரைக்கு உள்ளப்பூர்வமாக என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

ஏ.ஜி., இத்தாலி

இசை நான் பல வருடங்களாகவே கிறிஸ்தவ சபையில் மூப்பராக சேவை செய்து வருகிறேன். இளைஞர்கள் மீது எனக்கு எப்போதுமே அதிக அக்கறையுண்டு. ஆனால் சமீபத்தில் நவீனகால இசையின் அபாயத்தைக் குறித்து ஆலோசனை கூற முயன்றபோது அவர்கள் செவிகொடுக்காமல் போனது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும், “ஆ()ட்டி வைக்கும் இசை” (அக்டோபர் 8, 1999) என்ற தொடர் கட்டுரைகள் தக்க சமயத்தில் எனக்கு கைகொடுத்தன. சிலவகை இசையின் எதிர்மறையான பாதிப்புகளைப் பற்றி பல்வேறு புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பது ரொம்ப பிரமாதம். இந்த கருத்துக்களையெல்லாம் எங்கள் சபையிலுள்ள இளைஞருடன் பகிர்ந்துகொள்வேன்.

டி.எச்., பொலிவியா

ஒரு பாடகியாகவும், தொடக்கப் பள்ளியில் பாட்டு டீச்சராகவும் இருக்கும் எனக்கு சமீபத்தில் வந்த இசையைப் பற்றிய கட்டுரைகள் மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தன. மிக்க நன்றி!

கே.எஃப்., ஐக்கிய மாகாணங்கள்