Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

ஆபாசம் ஆபாசம்​—⁠தீங்கற்றதா தீங்கானதா? (ஆகஸ்ட் 8, 2003) என்ற அட்டைப்பட தொடர் கட்டுரைகளுக்கு நன்றி. இந்த நேரடியான ஆலோசனை எனக்கு தேவையாக இருந்தது. நான் ஒரு கிறிஸ்தவனாக ஆவதற்கு முன்பு பல காலமாக ஆபாச காட்சிகளை பார்த்து வந்தேன். இது எந்தளவு தீங்கானது என்பதையும், இதன் பலமான ஈர்ப்பு சக்தியிலிருந்து விடுபட என்னென்ன உறுதியான படிகளை எடுப்பது அவசியம் என்பதையும் முன்பைவிட தெள்ளத் தெளிவாக காண்பதற்கு இந்தக் கட்டுரைகள் உதவின.

இ. பி., ஐக்கிய மாகாணங்கள் (g04 3/22)

எனது 22 வருட மகிழ்ச்சியான மண வாழ்க்கை இரண்டு வருடங்களுக்கு முன் மணவிலக்கில் முடிவடைந்தது. அருமையான கணவனும் அன்பான தகப்பனுமாக இருந்த அவரை எங்களிடமிருந்து பிரிப்பதற்கு காரணமாக இருந்தது ஆபாசம்தான். படுபயங்கரமான இந்தக் கெட்டப் பழக்கம் அவருடைய சுபாவத்தையே மாற்றிவிட்டது. அன்பாகவும் பாசமாகவும் இருந்த அவர் கோபக்காரராகவும், பொய் புளுகராகவும், மூர்க்கராகவும் மாறிவிட்டார். ஆபாசத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஆளானவள் நான் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் என்னை மட்டுமல்ல அநேகரை இந்த பிரச்சினை பாதிக்கிறது என்பதை இப்போது அறிந்துகொண்டேன். அருமையாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளுக்கு நன்றி.

எல். டி., ஐக்கிய மாகாணங்கள் (g04 3/22)

பைபிளைப் படிப்பதற்கு முன்பு பத்து வருடங்களுக்கு மேல் நான் ஆபாசம் எனும் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன். அதை ஆதரிப்பவர்கள் என்ன சொன்னாலும்சரி அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறுவதற்கு முன்பு என்னென்ன போதைப்பொருட்கள் உண்டோ அவற்றையெல்லாம் உபயோகித்தேன். என்னுடைய எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டுவிட்டாலும், ஆபாசத்தின் பிடியிலிருந்து விடுபடுவதுதான் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தயவுசெய்து இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து பிரசுரியுங்கள்.

ஜெ. ஏ., ஐக்கிய மாகாணங்கள் (g04 3/22)

சர்க்கரை வியாதி “சர்க்கரை வியாதியோடு காலம் தள்ளுதல்” (ஜூன் 8, 2003) என்ற அட்டைப்பட தொடர் கட்டுரைகளுக்கு நன்றி. 12 வருஷமாக எனக்கு வகை-1 சர்க்கரை வியாதி இருந்திருக்கிறது; இன்சுலின் ஊசி அடிக்கடி போட்டு எனக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது. என் மனைவி எனக்கு ரொம்பவே ஆதரவாக இருக்கிறாள். இந்த வியாதியைப் பற்றி நாங்கள் இருவரும் இன்னும் அதிகமாக தெரிந்துகொண்டு வருகிறோம், நாங்கள் இருவருமாக டாக்டரை போய் சந்திக்கிறோம். நம்பிக்கையான மனநிலையை வளர்க்க முயலுகிறேன். வாழ்க்கையின் சவால்களை சமாளிக்க ஒரு நோயாளிக்கு உதவுவதற்கு அவரிடம் சாந்தமாகவும் பொறுமையாகவும் நடந்துகொள்வது அவசியம் என்ற விழிப்புணர்வு சக கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்னுமதிகமாக ஏற்பட்டிருப்பதை ஒரு பயண கண்காணியாக நான் கவனித்திருக்கிறேன். அப்படிப்பட்ட மனநிலை சபைகளுக்கு தொடர்ந்து ஊழியம் செய்ய எனக்கு உதவுகிறது. இந்தக் கட்டுரைகள் தக்க சமயத்தில் எனக்கு உதவின. மீண்டும் என் நன்றியை தெரிவிக்கிறேன்.

டபிள்யு. பி., போலந்து (g04 3/8)

எனக்கு 28 வருஷமாக இந்த சர்க்கரை வியாதி இருக்கிறது. என்னுடைய குடும்பத்தில் பத்து பேர் இந்த வியாதியால் அவஸ்தைப்படுகிறார்கள். நான் இதுவரை பார்த்ததில், உங்களுடைய கட்டுரைகள்தான் இந்த வியாதியைப் பற்றி விலாவாரியாக அலசியிருக்கின்றன. இந்தக் கட்டுரைகளில் நம் படைப்பாளரின் அன்பை காண முடிகிறது​—⁠இந்த விஷயத்தைப் பற்றி பேசும் உலகப்பிரகாரமான கட்டுரைகளில் இப்படிப்பட்ட அன்பைக் காண முடியாது. நான் என்னுடைய குடும்பத்தை முழுமையாக சார்ந்திருக்க விரும்பாததால், மற்றவர்களுக்கு முன்பாக வியாதி எதுவும் இல்லாதவளைப் போல காட்டிக்கொள்ள முயன்றேன். மற்றவர்களுடைய தேவைகளை கவனித்துக் கொள்வதன் மூலம் நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், மற்றவர்களை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள வேண்டுமானால் நான் என்னை கவனித்துக்கொள்வது அவசியம் என்பதை தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவியது.

எல். பி., பிரான்சு (g04 3/8)

ஆன்மீக தாகம் “என் ஆன்மீக தாகம் தணிந்தது” (ஜூலை 8, 2003) என்ற கட்டுரையை படித்ததும் என் கண்கள் குளமாயின. நான் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்தவள்; எட்டு வருஷம் கத்தோலிக்க ஸ்கூலில் படித்தேன். எங்களுடைய ஸ்கூலிலோ பூசை நடக்கும் போதோ நாங்கள் பைபிளை வாசித்ததே கிடையாது; ஆனால் பைபிள் மீது எனக்கு ஒரு தனிப் பிரியம் இருந்ததால் ஒவ்வொரு நாள் இரவிலும் நான் பைபிளை வாசித்தேன். லூச்சீயா மூசாநெட்டைப் போல, பைபிள் சொல்கிறபடியே காரியங்களை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் இருந்தது. ஆனால் எப்படி செய்வதென்று தெரியாமல் இருந்தேன். யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்தபோது என்னுடைய ஆன்மீக தாகம் தணிந்தது. இதுபோன்ற மனதைத் தொடும் வாழ்க்கை சரிதைகளுக்காக மிக்க நன்றி!

கே. எஃப்., ஐக்கிய மாகாணங்கள் (g04 2/22)