Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முதுமைக்கு முடிவுகட்ட முடியுமா?

முதுமைக்கு முடிவுகட்ட முடியுமா?

முதுமைக்கு முடிவுகட்ட முடியுமா?

‘நாம் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும். பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம். . . . திடீரென, நம் வாழ்க்கை முடிவுறும்!’​—⁠சங்கீதம் 90:10, ஈஸி டு ரீட் வர்ஷன்.

நீங்கள் என்றென்றும் இளமைத் துடிப்புடன் வாழ்ந்தால் எப்படியிருக்கும்? அதுவும் ஆரோக்கியத் துள்ளலுடன்! துருதுரு சிந்தனையுடன்! ‘கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா!’ என்கிறீர்களா? இதோ உங்களுக்கொரு விந்தையான விஷயம்: சில வகை கிளிகள் நூறு வருடங்கள்வரை வாழ்கின்றன, ஆனால் சுண்டெலிகளோ மூன்று வருடங்கள் தாக்குப்பிடிப்பதே பெரிய விஷயம். இப்படி உயிரினங்களின் ஆயுட்காலம் வேறுபடுவதைக் கவனித்த சில உயிரியல் நிபுணர்கள் என்ன முடிவுக்கு வந்திருக்கிறார்கள் தெரியுமா? முதுமைக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும், அப்படி காரணம் இருந்தால் அதற்கு நிவாரணமும் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வந்திருக்கிறார்கள்.

முதுமைக்குச் சிறந்த நிவாரணியைத் தேடும் படலம் தீவிரமடைந்து இருக்கிறது; மருந்துக் கம்பெனிகள் நிறைய பணத்தை அதில் முதலீடு செய்திருக்கின்றன. அதோடு, முதுமையின் பாதையில் காலடி வைத்திருப்பவர்கள் இவ்விஷயத்தில் ரொம்பவே அக்கறை காண்பிக்கிறார்கள்.

மரபியல், மூலக்கூறு-உயிரியல், விலங்கியல், மூப்பியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த எத்தனையோ நிபுணர்கள்கூட, முதுமையைப் பற்றிய ஆராய்ச்சிக்குத்தான் இப்போது முதலிடம் தருகிறார்கள். ஏன் முதுமை அடைகிறோம்? என்ற ஆங்கில புத்தகத்தில் ஸ்டீவன் ஆஸ்டாட் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “மூப்பியல் நிபுணர்களின் கூட்டங்கள் இப்போதெல்லாம் மிகவும் களைகட்டியிருக்கின்றன. முதுமையின் ரகசியங்களை நாங்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.”

எதனால் முதுமை அடைகிறோம் என்பதற்கு விளக்கங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. செல்கள் ‘தேய்மானம்’ அடைவது முதுமைக்குக் காரணமென ஒரு சாரார் சொல்கிறார்கள்; ஆனால் மரபியலே முதுமைக்குக் காரணமென இன்னொரு சாரார் சொல்கிறார்கள். இந்த இரு சாராருடைய விளக்கங்களுமே சரியென சொல்கிறவர்களும் உண்டு. ஆக மொத்தத்தில், முதுமையின் ரகசியங்களை நாம் எந்தளவுக்குப் புரிந்திருக்கிறோம்? முதுமைக்குச் சிறந்த நிவாரணி கிடைக்குமென நாம் எதிர்பார்க்கலாமா?

[பக்கம் 2, 3-ன் அட்டவணை/படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

APPROXIMATE LIFE SPANS

தேனீ

90 நாட்கள்

சுண்டெலி

3 வருடங்கள்

நாய்

15 வருடங்கள்

குரங்கு

30 வருடங்கள்

அலிகேட்டர்

50 வருடங்கள்

யானை

70 வருடங்கள்

மனிதன்

80 வருடங்கள்

கிளி

100 வருடங்கள்

ராட்சஸ ஆமை

150 வருடங்கள்

ராட்சஸ செக்கோயா மரம்

3,000 வருடங்கள்

ப்ரிஸில்கோன் பைன் மரம்

4,700 வருடங்கள்

[பக்கம் 3-ன் படம்]

சில வகை கிளிகள் 100 வருடங்கள் வாழ்கின்றன, மனிதர்களின் ஆயுளோ சுமார் 80 வருடங்கள்தான். “எதனால் முதுமை அடைகிறோம்?” என ஆராய்ச்சியாளர்கள் கேட்கிறார்கள்