Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தண்ணீர் ஒட்டாத தாமரை இலை

தண்ணீர் ஒட்டாத தாமரை இலை

யாருடைய கைவண்ணம்?

தண்ணீர் ஒட்டாத தாமரை இலை

பயன்படுத்திய பிறகும் சுத்தமாகவே இருக்கும் பிளாஸ்டிக் கப்புகள்! மழைக்காலத்திலும் காய்ந்தே இருக்கும் ஜன்னல்கள்! மக்கர் பண்ணாமல் இயங்கும் மைக்ரோஸ்கோப்பிக் மெஷின்கள்! இந்தக் கனவுகள் நனவாகுமா? தாமரை இலையில் மறைந்துள்ள இரகசியங்களை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் போதும் கப்புகள், ஜன்னல்கள், மெஷின்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனை எத்தனையோ சாதனைகள் படைக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சிந்தனைக்கு: தாமரை இலையின் மேற்பரப்பை ஒரு மைக்ரோஸ்கோப் கீழ் வைத்துப் பார்த்தால் நிறைய நுண்ணிய மேடுகள் இருப்பது தெரியும். மெழுகுபோன்ற படிகங்கள் இவற்றை மூடியிருப்பதையும் நம்மால் பார்க்க முடியும். இலைமீது நீர்த்துளிகள் விழுகையில் முதலில் அவை இந்த நுண்ணிய மேடுகள் மேல் படுகின்றன. இந்த மேடுகள் இலைமீது நீர் படாதவாறு பாதுகாக்கின்றன. நீர்த்துளிகள் இலைகளைத் தொடாமல் இருப்பதற்கு இலையின் வடிவமும் ஒரு காரணம். பொதுவாகவே தாமரை இலைகளின் ஓரம் சரிந்திருப்பதால் அதன்மீது நீர்த்துளிகள் விழுந்தவுடன் அவை சரிந்து கீழே விழுந்துவிடுகின்றன. அதனால்தான் தாமரை இலை நனையாமல் இருக்கிறது; அதோடு, உருண்டு ஓடும் நீர்த்துளிகள் அழுக்கையும் மண் துகள்களையும் எடுத்துச் செல்வதால் இலை சுத்தமாகவும் இருக்கிறது.

தண்ணீர் ஒட்டாத தாமரை இலையின் சூட்சுமத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்; பிறகு அதன் அடிப்படையில் பல பொருள்களை உண்டாக்க வேண்டும்—இதுதான் விஞ்ஞானிகளின் ஆசைக் கனவு. மைக்ரோஸ்கோப்பிக் மெஷின்கள் தண்ணீர் பட்டால் கெட்டுவிடும் தன்மையுள்ளவை என்பதால் அதற்கும் தாமரை இலையின் இரகசியம் பயனுள்ளதாய் இருக்குமென நினைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் “அதன் பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம்” என்கிறது ஸையன்ஸ் டெய்லி.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தாமரை இலை தானாக வந்துவிட்டதா? அல்லது படைப்புக்கு அத்தாட்சியா? (g 4/09)