Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்னுடைய மத நம்பிக்கைகளைப் பற்றி பேச ஏன் பயப்படுகிறேன்?

என்னுடைய மத நம்பிக்கைகளைப் பற்றி பேச ஏன் பயப்படுகிறேன்?

இளைஞர் கேட்கின்றனர்

என்னுடைய மத நம்பிக்கைகளைப் பற்றி பேச ஏன் பயப்படுகிறேன்?

“பள்ளியில் என் மத நம்பிக்கைகளைப் பற்றிப் பேசுவதற்கு நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், நான் அந்த வாய்ப்பையெல்லாம் நழுவவிட்டுவிட்டேன்.”—கேலப். *

“பரிணாமத்தைப் பற்றி நாங்கள் என்ன நினைக்கிறோமென டீச்சர் கேட்டார். என் நம்பிக்கைகளைப் பற்றிச் சொல்ல அது அருமையான வாய்ப்பென என் மனம் சொன்னது. ஆனால், நான் வாயே திறக்காமல் சிலைபோல் உட்கார்ந்திருந்தேன். அதன் பிறகு, அப்படிச் செய்ததற்காக என் மனம் அடித்துக்கொண்டது.”—ஜாஸ்மின்.

நீங்கள் ஒரு கிறிஸ்தவ இளைஞரா? அப்படியென்றால், கேலபையும் ஜாஸ்மினையும் போல் நீங்களும் நினைத்திருக்கலாம். அவர்களைப் போலவே நீங்களும், கற்றிருக்கும் பைபிள் சத்தியங்களை நெஞ்சார நேசிக்கலாம், அவற்றை மற்றவர்களுக்குச் சொல்லவும் ஆசைப்படலாம். ஆனால், மற்றவர்களிடம் பேசுவதை நினைத்தாலே உங்களுக்குக் குலைநடுங்கலாம். என்றாலும், நீங்கள் அதிக தைரியத்தை வளர்த்துக்கொள்ள முடியும். எப்படி? பின்வரும் படிகளை எடுப்பதன் மூலம்.

1. பயத்தை இனங்கண்டுகொள்ளுங்கள். உங்கள் நம்பிக்கைகளைப் பற்றிப் பேசுவதை நினைத்த மாத்திரத்திலேயே படுபயங்கரமான சம்பவம் நடப்பதுபோல் நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்! சிலசமயங்களில், உங்கள் பயத்தை எழுத்தில் வடித்தாலே போதும், அவற்றைச் சமாளித்துவிடலாம்.

பின்வரும் வாக்கியத்தை நிறைவு செய்யுங்கள்.

பள்ளியில் என் மத நம்பிக்கைகளைப் பற்றிப் பேசினால் ஒருவேளை இப்படி நடக்கலாம்:

.....

கிறிஸ்தவ இளைஞர்கள் பலர் உங்களைப் போலவே பயப்படுகிறார்கள் என்பதை அறிவது உங்களுக்கு ஆறுதலாய் இருக்கலாம். உதாரணத்திற்கு, 14 வயது கிறிஸ்டஃபர் இவ்வாறு ஒப்புக்கொள்கிறான்: “பசங்கள் என்னைக் கேலிகிண்டல் செய்வார்களோ, நான் ஒரு விநோதப் பிறவியென மற்றவர்களிடம் சொல்வார்களோ என்று பயப்படுகிறேன்.” ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட கேலப் இவ்வாறு சொல்கிறான்: “யாராவது ஏதாவது கேள்வி கேட்டு, என்னால் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று நினைத்துத்தான் பயப்பட்டேன்.”

2. சவாலைச் சந்தியுங்கள். காரணமே இல்லாமல் நீங்கள் பயப்படுகிறீர்கள் எனச் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல முடியாது. “சிலர் என் மத நம்பிக்கைகளில் ஆர்வம் காட்டுவதுபோல் நடித்தார்கள். ஆனால், நான் சொன்னதை வைத்தே என்னைக் கவிழ்க்கப் பார்த்தார்கள். மற்றவர்கள் முன்பாகக் கேலியும் செய்தார்கள்” என்று ஆஷ்லி சொல்கிறாள். 17 வயது நிக்கோலின் அனுபவம் இதுதான்: “ஒரு பையன் தன்னுடைய பைபிளிலுள்ள ஒரு வசனத்தை என்னுடைய பைபிளோடு ஒப்பிட்டு, வார்த்தைகள் வித்தியாசமாக இருந்ததைக் காட்டினான். என்னுடைய பைபிள் மாற்றப்பட்டிருப்பதாகச் சொன்னான். எனக்குப் பேரதிர்ச்சியாய் இருந்தது! என்ன சொல்வதென்றே தெரியவில்லை.” *

இதுபோன்ற சூழ்நிலைகள் வயிற்றில் புளியைக் கரைக்கலாம்! சவால்களைக் கண்டு பயந்து ஓடுவதற்குப் பதிலாக அவற்றைச் சந்தியுங்கள். கிறிஸ்தவ வாழ்க்கையில் அவை சகஜமென ஏற்றுக்கொள்ளுங்கள். (2 தீமோத்தேயு 3:12) “இயேசு தம்முடைய சீடர்கள் துன்புறுத்தப்படுவார்கள் எனச் சொன்னார்; எனவே, எல்லாருக்கும் நம்மைப் பிடிக்கும் என்றோ, எல்லாரும் நம் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது” என்கிறான் 13 வயது மேத்யூ.—யோவான் 15:20.

3. பலன்களை எண்ணிப் பாருங்கள். மோசமான அனுபவமென நீங்கள் நினைக்கிற ஒன்றிலிருந்து நன்மைகளை எதிர்பார்க்க முடியுமா? முடியுமென 21 வயது ஆம்பர் சொல்கிறாள். “பைபிளை மதிக்காத ஆட்களிடம் நம் நம்பிக்கைகளைப் பற்றிப் பேசுவது ரொம்பக் கஷ்டம். ஆனாலும், நம் நம்பிக்கைகளை நாமே நன்கு புரிந்துகொள்ள அது உதவுகிறது” என்று அவள் சொல்கிறாள்.—ரோமர் 12:2.

படி 1-ல் நீங்கள் விவரித்திருக்கும் சூழ்நிலையை மீண்டும் எண்ணிப் பாருங்கள். அந்தச் சூழ்நிலையால் விளையும் இரண்டு நன்மைகளையாவது யோசித்து, அவற்றைக் கீழே எழுதுங்கள்.

1 .....

2 .....

உதவிக் குறிப்பு: உங்கள் மத நம்பிக்கையைப் பற்றிப் பேசுவது எப்படிச் சக மாணவர்களின் தொல்லையைக் குறைக்கலாம்? அப்படிப் பேசுவது உங்கள் தன்னம்பிக்கையை எப்படி பாதிக்கும்? யெகோவா தேவன் மீதுள்ள உங்கள் உணர்ச்சிகளை எப்படிப் பாதிக்கும்? அவருக்கு உங்கள் மீதுள்ள உணர்ச்சிகளை எப்படிப் பாதிக்கும்?—நீதிமொழிகள் 23:15.

4. தயாராய் இருங்கள். “நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள்” என்று நீதிமொழிகள் 15:28 (ஈஸி டு ரீட் வர்ஷன்) சொல்கிறது. என்ன சொல்லப்போகிறீர்களெனச் சிந்திப்பதோடு, என்னென்ன கேள்விகளை மற்றவர்கள் கேட்கலாமெனவும் சிந்தியுங்கள். அந்த விஷயங்களின் பேரில் ஆராய்ச்சி செய்யுங்கள், எப்படிப் பதிலளிப்பது உங்களுக்குச் சுலபமாய் இருக்குமென யோசித்து வையுங்கள்.—பக்கம் 27-ல், “ பதிலளிக்கத் தயாராகுங்கள்” என்ற அட்டவணையைப் பாருங்கள்.

5. பேச ஆரம்பித்துவிடுங்கள். உங்கள் மத நம்பிக்கைகளைப் பற்றிப் பேசத் தயாராகிவிட்டால், எப்படி ஆரம்பிக்க வேண்டும்? இரண்டு வழிகள் இருக்கின்றன. மத நம்பிக்கைகளைப் பற்றிப் பேசுவது நீச்சலடிப்பதைப் போன்றது. சிலர், மெல்ல மெல்ல தண்ணீருக்குள் இறங்கி நீச்சலடிப்பார்கள்; இன்னும் சிலர், நேரடியாகத் தண்ணீருக்குள் குதித்து நீச்சலடிப்பார்கள். அதேபோல, நீங்கள் பொதுவான விஷயங்களைப் பேச ஆரம்பித்து, அந்த நபர் ஆர்வம் காட்டுகிறாராவென மெல்ல மெல்ல தெரிந்துகொள்ளலாம். ஆனால், எக்குத்தப்பாக ஏதாவது பேசிவிடுவோமோ என நீங்கள் அளவுக்கதிகமாகக் கவலைப்பட்டால், நேரடியாக விஷயத்துக்கு வருவதுதான் நல்லது. (லூக்கா 12:11, 12) “என் நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களிடம் எப்படிப் பேசுவது என மண்டையைப் போட்டு உடைத்து யோசிப்பதைவிட நேரடியாகப் பேசிவிடுவது எப்போதும் எளிதாக இருந்தது” என்று 17 வயது ஆன்ட்ரூ சொல்கிறான். “பேச ஆரம்பிப்பதுதான் எனக்குக் கஷ்டமாக இருந்தது, ஆரம்பித்துவிட்டால் நான் நினைத்தளவுக்கு அது கஷ்டமில்லை என்பது புரிந்தது!” என்றும் சொல்கிறான். *

6. விவேகமாய் நடந்துகொள்ளுங்கள். நீச்சலடிக்க நீங்கள் எப்படி ஆழமற்ற இடத்தில் குதிக்க மாட்டீர்களோ, அதுபோல விதண்டாவாதங்களில் ‘குதிக்காதபடி’ கவனமாய் இருங்கள். பேச ஒரு காலமுண்டு, மௌனமாயிருக்க ஒரு காலமுண்டு என்பதை நினைவில் வையுங்கள். (பிரசங்கி 3:1, 7) சில சமயங்களில், கேள்விகளுக்குப் பதிலளிக்க இயேசுவே மறுத்தார். (மத்தேயு 26:62, 63) இந்த நியமத்தை மனதில் வையுங்கள்: “விவேகமுள்ளவர்கள் ஆபத்து வருவதைக் கண்டு அதைத் தவிர்க்கிறார்கள்; யோசனையற்றவர்களோ நேராகப் போய் மாட்டிக்கொண்டு, பின்னர் வருந்துகிறார்கள்.”—நீதிமொழிகள் 22:3, டுடேஸ் இங்லீஷ் வர்ஷன்.

எனவே, ஏதேனும் வாக்குவாதம் தலைதூக்குமென நீங்கள் நினைத்தால், ‘நேராகப் போய் மாட்டிக்கொள்ளாதீர்கள்.’ அதற்கு மாறாக, சுருக்கமாகவும் புத்திசாலித்தனமாகவும் பதிலளியுங்கள். உதாரணத்திற்கு, சக மாணவன் ஒருவன் ‘நீ ஏன் சிகரெட் குடிக்க மாட்டேன் என்கிறாய்?’ என்று ஏளனமாய்க் கேட்டால், ‘என் உடம்பைக் கெடுத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை!’ என்று மட்டும் நீங்கள் பதிலளிக்கலாம். அதற்கு அவன் சொல்கிற பதிலை வைத்து உங்கள் மத நம்பிக்கையைப் பற்றித் தொடர்ந்து பேசலாமா, வேண்டாமாவெனத் தீர்மானிக்கலாம்.

உங்கள் நம்பிக்கையைக் குறித்துக் கேட்பவர்களிடம் ‘பதில் சொல்ல எப்போதும் தயாராயிருப்பதற்கு’ மேற்குறிப்பிடப்பட்ட படிகள் உங்களுக்கு உதவலாம். (1 பேதுரு 3:15) நீங்கள் தயாராக இருந்தால் பயப்படவே மாட்டீர்கள் என்று சொல்ல முடியாதுதான். ஆனால், 18 வயது அலேனா இவ்வாறு சொல்கிறாள்: “பயப்பட்டாலும் உங்கள் நம்பிக்கையைப் பற்றிப் பேசும்போது, பயத்தைச் சமாளித்து துணிந்து செயல்பட்ட சாதனை உணர்வு உங்களுக்கு ஏற்படும்; ஒருவேளை நல்ல பலன் கிடைக்கும்போது அதைவிட அதிகமான சாதனை உணர்வு ஏற்படும்! தைரியத்தைத் திரட்டிப் பேசியதற்காகச் சந்தோஷப்படுவீர்கள்.” (g 7/09)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்புகள்]

^ இந்தக் கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பைபிள் மொழிபெயர்ப்புகள் வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. ஆனால், சில மொழிபெயர்ப்புகள் பைபிளின் மூலமொழிகளோடு அதிகமாய் ஒத்திருக்கின்றன.

^ பக்கம் 28-லுள்ள  “உரையாடலைத் துவங்க” என்ற பெட்டியைப் பாருங்கள்.

சிந்திப்பதற்கு

உங்கள் பள்ளியிலுள்ள ஒருவன் இப்படி நினைத்துக்கொண்டிருப்பானோ?

‘நீ ஒரு யெகோவாவின் சாட்சியென எனக்குத் தெரியும். நான் உன்னைக் கேலிசெய்யப் போகிறேனென நீ நினைக்கலாம், ஆனால் உன்மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. உலகமே பிரச்சினைகளில் தத்தளிக்கும்போது நீ எப்படிப் பதட்டப்படாமல் ரொம்ப அமைதியாக இருக்கிறாய்? எனக்கு எதை நினைத்தாலும் பயமாக இருக்கிறது. நம்முடைய நாட்டில் போர் வருமா? என் அப்பா அம்மா பிரிந்து போய்விடுவார்களா? பள்ளியில் யாராவது என்னை அடித்துவிடுவார்களா? இப்படி எனக்கு எத்தனை எத்தனையோ கேள்விகள். ஆனால், உனக்கு எந்தக் குழப்பமும் இல்லை, தெளிவாக இருக்கிறாய். அதுக்கு உன் மதம்தான் காரணமா? அதைப் பற்றி உன்னிடம் பேச விரும்புகிறேன், ஆனால் பேச பயமாக இருக்கிறது. நீயே அதைப் பற்றிச் சொல்லேன்.’

[பக்கம் 28-ன் பெட்டி/படம்]

உங்களைப் போன்றவர்கள் சொல்கிறார்கள்

என் மத நம்பிக்கைகளைப் பற்றிப் பேசும்போது சில பிள்ளைகள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய கேலிகிண்டலுக்கு நான் மசியாதது புரிந்ததும் அவர்கள் பொதுவாக என்னைவிட்டுப் போய்விடுகிறார்கள். ஃபிரான்ச்சேஸ்கா, லக்ஸம்பர்க்.

நீங்கள் கிறிஸ்தவர் என்பதை மற்றவர்களிடம் சொல்லாவிட்டால் அதை நீங்களே மறந்துவிட்டு மற்றவர்களைப் போல நடந்துகொள்ள ஆரம்பிப்பீர்கள். நீங்கள் மற்றவர்களைப் பின்பற்றக்கூடாது; நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். செமன்தா, அமெரிக்கா.

நான் சின்ன பையனாக இருந்தபோது, மற்ற பிள்ளைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் பிற்பாடு, என்னுடைய மதம் நல்ல வாழ்க்கை வாழ உதவுவதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அது அசைக்க முடியாத நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்தியது. என் மதத்தை நினைத்துப் பெருமைப்பட ஆரம்பித்தேன்.—ஜேஸன், நியுஜிலாந்து.

 [பக்கம் 28-ன் பெட்டி]

உரையாடலைத் துவங்க

“விடுமுறையில் என்னென்ன செய்யப்போகிறாய்?” [பதிலளித்த பிறகு, வணக்கம் சம்பந்தமாக நீங்கள் என்னென்ன செய்யப் போகிறீர்களெனச் சொல்லுங்கள். உதாரணத்திற்கு, மாநாட்டிற்குப் போகப்போவதைப் பற்றி அல்லது இன்னுமதிக ஊழியம் செய்யப்போவதைப் பற்றிச் சொல்லுங்கள்.]

◼ செய்திகளில் ஒன்றைச் சொன்ன பிறகு, இவ்வாறு கேளுங்கள்: “இதை நீ கேள்விப்பட்டாயா? இதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

“உலகப் பொருளாதார நிலையில் [அல்லது வேறொரு பிரச்சினையில்] முன்னேற்றம் ஏற்படுமென நினைக்கிறாயா? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] நீ ஏன் அப்படி நினைக்கிறாய்?”

“மதத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

“ஐந்து வருடத்திற்குப் பிறகு உன் வாழ்க்கை எப்படியிருக்குமென நினைக்கிறாய்?” [பதிலளித்த பிறகு, உங்களுடைய ஆன்மீக லட்சியங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.]

[பக்கம் 28-ன் அட்டவணை]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

 பதிலளிக்கத் தயாராகுங்கள் இங்கே வெட்டுங்கள்!

ஆலோசனை: இந்த அட்டவணையை உங்கள் பெற்றோருடனும் நண்பர்களுடனும் சிந்தியுங்கள். இதில் காலியாக உள்ள பெட்டிகளை நிரப்புங்கள். பின்பு, வேறு என்னென்ன கேள்விகளை உங்கள் வகுப்பு மாணவர்கள் கேட்பார்களென யோசியுங்கள்.

கேள்வி பதில்

ஓரினச் சேர்க்கை பற்றி அந்தப் பழக்கமுடையவர்களை நான்

ஒழுக்கம் நீ என்ன நினைக்கிறாய்? வெறுப்பதில்லை, ஆனால் அந்தப்

பழக்கத்தை வெறுக்கிறேன்.

டேட்டிங் நீ ஏன் டேட்டிங் இன்னும் கொஞ்சம் வயதான பிறகுதான்

செய்யக்கூடாது? டேட்டிங் என முடிவு

செய்திருக்கிறேன்.

நடுநிலைமை நீ ஏன் கொடி வணக்கம் என் நாட்டை மதிக்கிறேன், ஆனால்

செய்வதில்லை? அதை வணங்க மாட்டேன்.

நீ ஏன் இரத்தம் எய்ட்ஸ் போன்ற பக்கவிளைவுகளை

இரத்தம் ஏற்றிக்கொள்ள மாட்டாய்? ஏற்படுத்தாத நல்ல மருந்துகளை நான்

ஏற்றிக்கொள்வேன். ஆனால்,

இரத்தத்திற்கு விலகியிருக்கும்படி

பைபிள் சொல்வதால், அதை

ஏற்றிக்கொள்ள மாட்டேன்.

அவனும் உன் மதத்தைச் கடவுள் என்னென்ன எதிர்பார்க்கிறாரென

தீர்மானங்கள் சேர்ந்தவன்தான், ஆனால் எங்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

அவன் அதைச் செய்தான். ஆனால், எதையும் செய்யும்படி

நீ ஏன் செய்யக்கூடாது? நாங்கள் வற்புறுத்தப்படுவதில்லை!

எல்லாவற்றையும் நாங்களே

சொந்தமாகத் தீர்மானிக்க வேண்டும்.

 

படைப்பு நீ ஏன் பரிணாமத்தை நான் ஏன் அதை நம்ப வேண்டும்?

நம்புவதில்லை? நிபுணர்களாகக் கருதப்படுகிற

விஞ்ஞானிகளே அதைப்

பற்றி விவாதிக்கிறார்கள்!

அடுத்த கேள்வி ஆராய்ச்சிக்கு பதில்

உனக்குப் பரந்த 1 கொரிந்தியர் 6:9, 10; அப்படியில்லை, ஒழுக்கம் மனப்பான்மை இளைஞர் கேட்கும் அந்தப் பழக்கத்தை

இல்லாததால்தானே கேள்விகள்—பலன்தரும் மட்டுமல்ல,

அதை வெறுக்கிறாய்? விடைகள், தொகுதி 2, எல்லா விதமான

அதிகாரம் 28. * ஒழுக்கக்கேடுகளையும்

நான் வெறுக்கிறேன்.

அதற்கு உன் மதம்தான் உன்னதப்பாட்டு 8:4; ஆமாம். கல்யாணம் டேட்டிங் காரணமா? இளைஞர் கேட்கும் செய்துகொள்ளும்

கேள்விகள்—பலன்தரும் எண்ணத்தோடுதான்

விடைகள், தொகுதி 2, டேட்டிங் செய்வோம்;

அதிகாரம் 1. எனக்கு இன்னும்

கல்யாண வயது

ஆகவில்லையென

எனக்கே தெரியும்!

அப்படியென்றால் உன் ஏசாயா 2:4; மாட்டேன்; அதேபோல்,

நடுநிலைமை நாட்டுக்காக நீ போர் யோவான் 13:35; மற்ற நாடுகளில்

செய்ய மாட்டாயா? பைபிள் உண்மையிலேயே வாழும் லட்சக்கணக்கான

என்ன கற்பிக்கிறது? யெகோவாவின் சாட்சிகளும்

பக்கங்கள் 148-151. * இந்த நாட்டுக்கு

எதிராகப் போர்

செய்யவே

மாட்டார்கள்.

ஒருவேளை உயிர்போகும் அப்போஸ்தலர் 5:28, 29; →பைபிள் உண்மையிலேயே இரத்தம் நிலை ஏற்பட்டால்? எபிரெயர் 11:6; என்ன கற்பிக்கிறது?

கடவுள் மன்னிக்க மாட்டாரா? பக்கங்கள் 129-131.

அப்படியென்றால் .....

தீர்மானங்கள் ஆளாளுக்கு

இஷ்டம்போல் நடப்பீர்களா?

படைப்பு ..... ...... .....

[அடிக்குறிப்பு]

^ யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

^ யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 26-ன் படம்]

மத நம்பிக்கைகளைப் பற்றிப் பேசுவது நீச்சலடிப்பதைப் போன்றது. நீங்கள் மெல்ல மெல்ல தண்ணீருக்குள் இறங்கலாம் அல்லது நேரடியாகத் தண்ணீருக்குள் குதிக்கலாம்!