Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் சத்தியம் இவர்களை விடுவித்தது

பைபிள் சத்தியம் இவர்களை விடுவித்தது

பைபிள் சத்தியம் இவர்களை விடுவித்தது

இயேசு கிறிஸ்து ஒரு கூட்டத்தாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்’ என்று சொன்னார். (யோவான் 8:32) இந்த விடுதலையில் பேய்கள், பொய்யர்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் ஆகியோரிடமிருந்து கிடைக்கிற விடுதலையும் உட்பட்டுள்ளது; இதைத்தான் பின்வரும் அனுபவங்கள் காட்டுகின்றன.—யோவான் 8:44.

இவ்வாறு விடுவிக்கிற வல்லமை, பைபிள் சத்தியத்திற்குத்தான் இருக்கிறது என்பதையும் இந்த அனுபவங்கள் சிறப்பித்து காட்டுகின்றன. ஆம், பைபிள் சத்தியங்களால் மட்டுமே மக்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியும். அப்படியானால், பைபிளை நீங்களும் கவனமாய் படித்துப் பார்க்கலாமே. அப்படிச் செய்தால், உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். (g11-E 02)

[பக்கம் 16-ன் பெட்டி/படம்]

படங்கள் மீண்டும் நடித்துக்காட்டப்பட்டிருக்கின்றன

சூசன்னா என்பவர் முன்பு பிரேஸிலில் ஒரு கோயிலில் பெண் பூசாரியாக இருந்தார். தனக்கு இருந்த அமானுஷ்ய சக்தியால் ஏழைபாழைகளுக்கு உதவ வேண்டுமென ஆசைப்பட்டார். செத்துப்போன தன் அம்மாவிடம் சந்தோஷமாய் பேசி வந்தார்; ஆனால், உண்மையில் அவர் பேய்களோடு, அதாவது பொல்லாத தூதர்களோடு பேசி வந்தார். இப்படி அவர் பேசி வந்த சமயத்தில், “அந்த அம்மா” அவரை தற்கொலை பண்ணிக்கொண்டு தன்னோடு வந்து சேர்ந்துவிடும்படி விடாமல் நச்சரிக்க ஆரம்பித்தது. இதனால், அவர் மனதளவில் வாதிக்கப்பட்டார், ராத்திரியில் அவருக்குக் கெட்ட கெட்ட கனவுகள் வர ஆரம்பித்தன. பிற்பாடு, சூசன்னாவும் அவரது கணவரும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். ‘பிசாசுக்கு எதிர்த்து நிற்க’ பெரும் போராட்டமே நடத்தினார்கள்; கடைசியில் ‘அவன் அவர்களைவிட்டு ஓடிப்போனான்.’ (யாக்கோபு 4:7) இப்போது அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள், சூசன்னாவுக்கும் கெட்ட கனவுகள் வருவதில்லை. அவர் எழுதினார்: “நான் யெகோவாவுக்குப் பல விஷயங்களுக்காக நன்றி சொல்ல வேண்டும்; முக்கியமாக, பேய்களிடமிருந்து என்னை அவர் விடுதலை செய்ததற்காக ரொம்பவே நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.”

[பக்கம் 16-ன் பெட்டி/படம்]

தீமத்தீ மேற்கு ஆப்பிரிக்காவில் வாழ்கிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி; அதாவது அவருக்குப் பேசவும் வராது, காதும் கேட்காது. * எத்தனையோ டாக்டர்களிடம் வைத்தியம் பார்த்தார், ஆனால் அவர்கள் கைவிரித்துவிட்டார்கள். பிறகு, அற்புத சுகமளிப்பவர்களிடம் போனார்; அதிலும் பலன் பூஜ்யம்தான். “அவர்களுடைய ஏமாற்றுவேலைகளைப் பார்த்து என் மனம் உடைந்துபோனது” என்று அவர் எழுதினார். பிற்பாடு, அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். எல்லா வியாதிகளையும் குறைபாடுகளையும் நீக்கப்போவதாக கடவுள் அளித்திருக்கும் வாக்குறுதியைப் பற்றி அவர்கள் அவருக்கு விளக்கினார்கள். “கடவுளுடைய புதிய உலகத்திற்காக நான் ஆசை ஆசையாய் காத்திருக்கிறேன்; ஏனென்றால் அப்போது, ‘காதுகேளாதோரின் செவிகள் கேட்கும், வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவார்கள்’” என்கிறார் அவர். (ஏசாயா 35:1-6, பொது மொழிபெயர்ப்பு) தற்போது, அவர் கையடக்கமான ‘டிவிடி ப்ளேயரைப்’ பயன்படுத்தி காதுகேளாதவர்களுக்கு பைபிள் சத்தியத்தைத் தெரிவிக்கிறார். அவர்களும் உண்மையான விடுதலையைப் பெற உதவிவருகிறார்.

[அடிக்குறிப்பு]

^ சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 16-ன் பெட்டி/படம்]

● எஸ்டோனியாவில், இவாலின் என்ற பெண் மாயமந்திரங்களில் மூழ்கியிருந்தார். இயேசுவைப் போலவே மக்களைக் குணப்படுத்த வேண்டுமென்று அவருக்கு ரொம்ப ஆசை. குறிப்பாக, தீராதநோயால் அவதிப்பட்ட தன் அம்மாவுக்கு உதவத் துடித்தார். கொடிய வியாதிகளைக் கண்டுபிடிக்கவும் குணப்படுத்தவும் வேண்டுமென்ற எண்ணத்தில், அவர் மாயமந்திர ‘பெண்டுலம்களை’ பயன்படுத்தக் கற்றுக்கொண்டார். பின்பு, அவருக்கு பைபிள் படிப்பு நடத்தப்பட்டது. அதன் விளைவு? அவர் சொல்கிறார்: “நான் எந்தளவுக்கு ஏமாற்றப்பட்டிருந்தேன் என்பது எனக்கு அப்போதுதான் புரிய வந்தது; அதனால், மாயமந்திரத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா புத்தகங்களையும் ‘பெண்டுலம்களையும்’ எரித்துவிட்டேன்.” அவர் இப்போது பைபிளிலுள்ள சத்தியங்களை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்; ஆம், அதற்கு மட்டும்தான் சாத்தானின் பிடியிலிருந்து விடுவிக்கும் சக்தி இருக்கிறது.

[பக்கம் 16-ன் பெட்டி/படம்]

மேரி என்பவர் பாப்புவா-நியூ கினியைச் சேர்ந்த ஒரு தீவில் வளர்ந்தார்; அங்கே உள்ள மக்களுக்குச் செத்தவர்களை நினைத்து ஒரே பயம். அதனால், மேரியுடைய கிராமத்தில் யாராவது செத்துப்போனால், மேரி இன்னொருவருடைய கட்டிலுக்குக் கீழே போய் படுத்துக்கொள்வார்; தனியாக இருந்தால், செத்துப்போனவருடைய ஆவி வந்து தன்னைத் தொந்தரவு செய்யுமோ என்று பயந்தார். பிற்பாடு பைபிளைப் படித்தபோது, இறந்தவர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள், அதாவது கல்லறையில் இருக்கிறார்கள், பூஞ்சோலை பூமியில் கடவுள் அவர்களை உயிரோடு எழுப்புவார் என்றெல்லாம் தெரிந்துகொண்டார். (லூக்கா 23:43; யோவான் 11:11-14) இப்போதெல்லாம் அவருக்கு இறந்தவர்களை நினைத்து பயமே இல்லை.

[பக்கம் 16-ன் பெட்டி/படம்]

● அமெரிக்காவைச் சேர்ந்த அலீஷியா, யெகோவாவின் சாட்சி பெற்றோரால் வளர்க்கப்பட்டாள்; ஆனால், மாயமந்திர புத்தகங்கள் படிப்பதில், சினிமாக்கள் பார்ப்பதில் அவளுக்கு அலாதி பிரியம். பிற்பாடு, தான் படித்துவந்த பைபிள் சத்தியங்களைப் பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள். தான் செய்வது எவ்வளவு பெரிய தப்பு என்பதைப் புரிந்துகொண்டாள்; உண்மையில், ‘யெகோவாவின் மேஜையிலும் பேய்களின் மேஜையிலும் தான் சாப்பிட்டு’ வருவது அவளுக்கு உரைத்தது. எனவே, அந்தப் பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டாள்; இப்போது, கடவுளுக்கு முன்பு சுத்தமான மனசாட்சியோடு இருக்கிறாள்.—1 கொரிந்தியர் 10:21.