Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மறக்காமல் நன்றி சொல்லுங்கள்!

மறக்காமல் நன்றி சொல்லுங்கள்!

மறக்காமல் நன்றி சொல்லுங்கள்!

கடைசியாக எப்போது நீங்கள் ‘தேங்க் யூ கார்ட்’ஐப் பெற்றீர்கள்? கடைசியாக எப்போது கொடுத்தீர்கள்?

இன்றைய கம்ப்யூட்டர் உலகத்தில் “தேங்க் யூ கார்ட்” எழுதி அனுப்பும் பழக்கமெல்லாம் காணாமல் போய்விட்டது. ஆனாலும், “நன்றி” என்று உங்கள் கைப்பட எழுதிக்கொடுத்தால் அதற்கொரு தனி மதிப்புண்டு. அவர்களுடைய அன்பான செயலுக்கு நீங்கள் எந்தளவு நன்றி காட்டுகிறீர்கள் என்பதற்கு அது ஓர் அத்தாட்சி. இதைச் சிறப்பாகச் செய்வதற்கு இதோ சில ஆலோசனைகள்.

1. கைப்பட எழுதினால், அதில் நம் பாசம் இழையோடும்.

2. யாருக்கு எழுதுகிறீர்களோ அவருடைய பெயரைக் குறிப்பிடுங்கள்.

3. அவர் ஏதாவது பரிசு கொடுத்திருந்தால் அதைக் குறிப்பிட்டு, அதை எப்படி பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதையும் எழுதுங்கள்.

4. முடிவில் மறுபடியும் நன்றி தெரிவியுங்கள்.

இப்படியொரு ‘தேங்க் யூ கார்ட்’ அனுப்பினால் வாசிப்பவருக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

அடுத்தமுறை யாராவது உங்களை உபசரித்தால்... அன்போடு உதவினால்... பரிசு கொடுத்தால்... அதை எந்தளவு மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள். ஆம், மறக்காமல் நன்றி சொல்லுங்கள்! (g12-E 07)

[பக்கம் 28, 29-ன் பெட்டி/படங்கள்]

அன்புள்ள மேரி அத்தைக்கு, #2

நீங்கள் கொடுத்த ஆலாரம் கடிகாரத்திற்கு மிக்க நன்றி! நான் ரொம்ப நேரம் தூங்குவதால், என்னை எழுப்பி விடுவதற்கு இது உதவியாக இருக்கிறது. #3 போன வாரம் உங்களை பார்த்தது ரொம்ப சந்தோஷம். நீங்கள் பத்திரமாக வீட்டிற்குப் போய் சேர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சீக்கிரத்தில் மறுபடியும் உங்களைப் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.

எனக்குப் பிரயோஜனமாக ஒரு பரிசைத் தந்ததற்காக மறுபடியும் நன்றி! #4

உங்கள் அன்புள்ள,

ஜான்

[படம்]

#1

[பக்கம் 29-ன் பெட்டி]

டிப்ஸ்

● பணமாகப் பரிசு கிடைத்தால், அந்தத் தொகையைக் குறிப்பிடுவதற்கு பதிலாக, “உங்கள் தாராள மனதுக்கு நன்றி. இதை . . .–க்காக பயன்படுத்தலாம் என்றிருக்கிறேன்” என்று எழுதலாம்.

● அவர்கள் கொடுத்த பரிசு... உங்கள் மனப்பூர்வ நன்றி... இது சம்பந்தமான விஷயங்களை மட்டும் எழுதுங்கள். நீங்கள் சுற்றுலா சென்று வந்ததைப் பற்றியோ அல்லது மருத்துவமனைக்கு சென்று வந்ததைப் பற்றியோ எழுதுவதற்கான கடிதம் இதுவல்ல.

● அவர்கள் கொடுத்த பரிசில் ஏதாவது குறையிருந்தால் அதைப் பற்றி எழுதாதீர்கள். உதாரணமாக, “நீங்க வாங்கி கொடுத்த சட்டைக்கு நன்றி. ஆனால், எனக்கு அது ரொம்ப பெரிதாக இருக்கிறது!” என்றெல்லாம் எழுதாதீர்கள்.

[பக்கம் 29-ன் பெட்டி]

எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டுமென பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (லூக்கா 17:​11-19) “இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்” என்று அது நமக்கு ஆலோசனை கொடுப்பதோடு, “எல்லாவற்றுக்காகவும் [கடவுளுக்கு] நன்றி சொல்லுங்கள்” என்றும் அறிவுரை கூறுகிறது.​—⁠1 தெசலோனிக்கேயர் 5:​17, 18.