Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலக செய்திகள் | கணவன்-மனைவி

குடும்ப உறவுகள் - ஒரு பார்வை

குடும்ப உறவுகள் - ஒரு பார்வை

உங்கள் கல்யாண வாழ்க்கையில் பிரச்சினை வரும்போது யாரிடம் நீங்கள் ஆலோசனை கேட்பீர்கள்? பைபிளில் புதைந்திருக்கும் ஆலோசனைகள் இன்று நமக்கு எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியா

18 முதல் 25 வயதுவரை இருக்கும் 61 சதவீத இளைஞர்கள் கல்யாணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக்கொள்வதில் “எந்த தவறும் இல்லை” என்று நினைப்பதாக, 2014-ல் நடந்த ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது. “காதலிக்கிற நிறைய இளைஞர்களுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இருப்பதில்லை. சிலர், வெறும் ஒரு இரவோடு தங்கள் உறவை முடித்துக்கொள்கிறார்கள். இன்னும் சிலர், கல்யாணம் என்ற கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடாது என்பதற்காக கல்யாணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்கிறார்கள்” என்று மும்பையை சேர்ந்த டாக்டர் ஒருவர், ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் பேட்டி கொடுத்துள்ளார்.

யோசித்துப் பாருங்கள்: உடலில் மோசமான வியாதிகளும் மனதில் வேதனைகளும் கல்யாணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக்கொள்வதால் வருகிறதா? அல்லது கல்யாணத்துக்கு பிறகு சேர்ந்து வாழ்வதால் வருகிறதா?—1 கொரிந்தியர் 6:18.

டென்மார்க்

அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் தம்பதிகளுக்கு நடுத்தர வயதில் இறக்கும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. நடுத்தர வயதில் உள்ள (35 முதல் 50 வயது) 10,000-க்கும் அதிகமான ஆட்களை வைத்து, யூனிவர்சிட்டி ஆஃப் கோபன்ஹாகனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 11 வருஷங்களாக ஆராய்ச்சி செய்தார்கள். அதில், சண்டை போடாத தம்பதிகளைவிட, அடிக்கடி சண்டை போட்டுக்கொண்ட தம்பதிகள் சீக்கிரத்திலேயே இறந்துவிட்டதாக கண்டுபிடித்தார்கள். கவலைகளையும் சண்டைகளையும் குறைத்தால், “நடுத்தர வயதிலேயே ஆட்கள் இறப்பதை தவிர்க்கலாம்” என்று அந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் சொல்கிறார்.

பைபிள் என்ன சொல்கிறது: “அறிவுள்ளவன் தன் வார்த்தைகளைக் கவனமாக கையாளுகிறான். அறிவுள்ளவன் எளிதில் கோபம் கொள்ளமாட்டான்.”—நீதிமொழிகள் 17:27, ஈஸி டு ரீட் வர்ஷன்.

அமெரிக்கா

லூசியானா என்ற இடத்தில், புதிதாக கல்யாணமான 564 ஜோடிகளிடம் நடத்திய ஒரு ஆராய்ச்சி இப்படி சொன்னது: காதலிக்கும்போது அடிக்கடி “பிரிவதும் பின்பு சேர்வதுமாக இருக்கும் ஜோடிகள்” (cyclical couples) நிறைய பேர், கல்யாணமான 5 வருடங்களிலேயே சட்டப்பூர்வமாக பிரிந்துவிடுகிறார்கள். அந்த தம்பதிகளுடைய வாழ்க்கையில் அடிக்கடி சண்டைகள் ஏற்படுகிறது என்றும் சீக்கிரத்திலேயே அவர்களுக்கு வாழ்க்கையும் கசந்துவிடுகிறது என்றும் அந்த ஆராய்ச்சி சொல்கிறது.

பைபிள் என்ன சொல்கிறது: “கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்.”—மத்தேயு 19:6. (g16-E No. 2)