Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மன அழுத்தம் மறைந்திட...

உங்களுக்கு மன அழுத்தமா?

உங்களுக்கு மன அழுத்தமா?

“பொதுவா, எல்லாருக்குமே ஓரளவு மன அழுத்தம் இருக்கு. ஆனா எனக்கு ரொம்ப அதிகமா இருக்கு. ஏதோ ஒண்ணு ரெண்டு பிரச்சினையினால நான் இப்படி சொல்லல. ஏகப்பட்ட பிரச்சினை! வாழ்க்கையில ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துகிட்டே இருக்கு. அதோட, என் கணவரோட உடல்நலமும் சரியில்ல, மனநலமும் சரியில்ல. வருஷக்கணக்கா அவரையும் பாத்துக்க வேண்டியிருக்கு.”​—ஜில். a

“என் மனைவி என்னை விட்டுட்டு போய்ட்டா. நான் தனியா என்னோட ரெண்டு பிள்ளைங்களயும் வளர்க்க வேண்டியிருந்துச்சு. தனி ஆளா அத செய்றது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல. அது போதாதுனு, எனக்கு வேலையும் போயிடுச்சு. கார் ரிப்பேர் பண்ணக்கூட காசு இல்லாம இருந்தேன். எப்படி சமாளிக்குறதுனே தெரியல. மன அழுத்தம் பயங்கரமா என்னை வாட்டுச்சு. தற்கொலை பண்றது தப்புனு என்னோட உள்மனசுக்கு தெரியும். அதனால, என்னோட உயிரை எடுத்துட சொல்லி கடவுள்கிட்டயே கெஞ்சுனேன்.”​—ஜான்.

இவர்களைப் போலவே, உங்களையும் சிலசமயம் மன அழுத்தம் வாட்டுகிறதா? அப்படியென்றால், அடுத்து வரும் கட்டுரைகள் உங்களுக்கு ஆறுதலையும் உதவியையும் தரும் என்று நாங்கள் நம்புகிறோம். மன அழுத்தம் ஏன் வருகிறது, அதனால் வரும் பாதிப்புகள் என்ன, மன அழுத்தத்தை ஓரளவாவது குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் அவற்றில் பார்ப்போம்.

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.