Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

5 கஷ்டங்கள் என்றைக்காவது தீருமா?

5 கஷ்டங்கள் என்றைக்காவது தீருமா?

ஏன் பதில் தெரிந்துகொள்ள வேண்டும்?

கஷ்டங்களுக்கு கண்டிப்பாக முடிவு வரும் என்பதற்கு ஒருவேளை ஆதாரங்கள் இருந்தால், அதைத் தெரிந்துகொள்ளும்போது வாழ்க்கையைப் பற்றியும், ஏன், கடவுளைப் பற்றியும்கூட நம்முடைய எண்ணம் மாறும்.

சிந்திக்க...

கஷ்டங்களை ஒழிக்க வேண்டும் என்று நிறைய பேர் ஆசைப்படுகிறார்கள். ஆனால், அதை முழுமையாகச் செய்ய அவர்களுக்குச் சக்தி இல்லை. இந்த உதாரணங்களைக் கவனியுங்கள்:

மருத்துவத் துறையில் நிறைய முன்னேற்றங்கள் இருந்தாலும்...

  • இதய நோய்தான் இன்னமும் மரணத்துக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

  • புற்றுநோய், ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கானவர்களின் உயிரைச் சூறையாடுகிறது.

  • “ரொம்ப நாள் நிலைத்திருக்கும் தொற்றுநோய்களும், புதிய தொற்றுநோய்களும், பழைய தொற்றுநோய்களும் இந்த உலகத்தில் வருவதும் போவதுமாக இருக்கின்றன” என்று ஃப்ரன்டியர்ஸ் இன் இம்யூனாலஜி என்ற பத்திரிகையில் டாக்டர் டேவிட் ப்ளூம் எழுதுகிறார்.

சில நாடுகளில் பணம் கொட்டிக்கிடந்தாலும்...

  • ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான குழந்தைகள் இறந்துபோகிறார்கள். அதுவும், வறுமை வாட்டும் இடங்களில் இது அதிகமாக நடக்கிறது.

  • கோடிக்கணக்கானவர்கள், அடிப்படைச் சுகாதார வசதிகள் இல்லாமல் வாழ்கிறார்கள்.

  • கோடிக்கணக்கானவர்களுக்குச் சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை.

மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகியிருந்தாலும்...

  • நிறைய நாடுகளில் இன்னமும் ஆள்கடத்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவது இல்லை. இதற்குக் காரணம், அதிகாரிகளுடைய “கவனத்துக்கு இந்தப் பிரச்சினை வராமல் இருப்பதோ, அதைக் கையாளுவதற்குப் போதிய வசதி இல்லாமல் இருப்பதோதான்” என்று ஐ.நா.சபை வெளியிட்ட ஓர் அறிக்கை சொல்கிறது.

    அதிகம் தெரிந்துகொள்ள...

    கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? என்ற வீடியோவை jw.org-ல் பாருங்கள்.

பைபிள் சொல்வது...

கடவுள் நம்மீது அக்கறையாக இருக்கிறார்.

நம்முடைய வலியையும் வேதனையையும் அவர் கண்டுகொள்ளாமல் இல்லை.

“அடக்கி ஒடுக்கப்படுகிறவனின் கஷ்டத்தை [கடவுள்] அற்பமாக நினைக்கவும் இல்லை, அலட்சியப்படுத்தவும் இல்லை. அவனிடமிருந்து தன்னுடைய முகத்தை அவர் மறைத்துக்கொள்ளவும் இல்லை. உதவி கேட்டு அவன் கதறியதை அவர் கேட்டார்.”சங்கீதம் 22:24.

“அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.”1 பேதுரு 5:7.

கஷ்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கப்போவது இல்லை.

மனிதர்கள் எப்படி வாழவேண்டும் என்று கடவுள் ஆசைப்பட்டாரோ அப்படிச் சீக்கிரத்தில் வாழப்போகிறார்கள் என்று பைபிள் வாக்குறுதி கொடுக்கிறது.

“அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”வெளிப்படுத்துதல் 21:3, 4.

மனிதர்களுடைய கஷ்டங்களுக்கு காரணமான எல்லாவற்றையும் கடவுள் நீக்கிவிடுவார்.

அதைத் தன்னுடைய அரசாங்கத்தின் மூலமாக அவர் செய்வார்.

“பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது. அது எந்த ஜனத்தின் கையிலும் கொடுக்கப்படாது. . . . அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.”தானியேல் 2:44.