Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உரையாடலை நிறுத்தும் பதிற்சொற்களுக்கு நீங்கள் எவ்வாறு மறுமொழியளிக்கலாம்

உரையாடலை நிறுத்தும் பதிற்சொற்களுக்கு நீங்கள் எவ்வாறு மறுமொழியளிக்கலாம்

உரையாடலை நிறுத்தும் பதிற்சொற்களுக்கு நீங்கள் எவ்வாறு மறுமொழியளிக்கலாம்

குறிப்புகள்: ஜனங்களின் வாழ்க்கை-எதிர்பார்ப்புகள் யெகோவா தேவனிடமும் கிறிஸ்துவினால் ஆளப்படும் அவருடைய ராஜ்யத்தினிடமும் அவர்கள் கொண்டுள்ள மனப்பான்மையின்பேரில் சார்ந்திருக்கிறது. கடவுளுடைய ராஜ்யத்தின் இந்தச் செய்தி கிளர்ச்சியூட்டுகிறது, மேலும் மனிதவர்க்கத்துக்கு இருக்கும் நம்பத்தக்க ஒரே நம்பிக்கையை இது குறித்துக் காட்டுகிறது. இது வாழ்க்கைகளை மாற்றுவிக்கும் ஒரு செய்தி. எல்லாரும் இதைக் கேட்கும்படி நாம் விரும்புகிறோம். ஒரு சிறுபான்மையரே இதை நன்றிமதித்துணர்வுடன் ஏற்பரென்பதை நாம் தெரிந்திருக்கிறோம், ஆனால் அவர்கள் அறிந்துணர்ந்து தெரிவுசெய்ய வேண்டுமானால் அதைக் கேட்கவாவது செய்யப்படவேண்டுமென நாம் அறிந்திருக்கிறோம். எனினும் எல்லாரும் கேட்க மனமுடையோராய் இல்லை, நாம் அவர்களை வலுக்கட்டாயப்படுத்த முயலுகிறதில்லை. ஆனால் பகுத்தறிவின் மூலமாக, உரையாடலை நிறுத்தும் பதிற்சொற்களை, மேலுமான உரையாடலுக்கு வாய்ப்பளிக்கும் சந்தர்ப்பங்களாக மாற்றுவது அடிக்கடி சாத்தியமாயிருக்கிறது. தகுதியுடையோருக்காகத் தேடும் தங்கள் முயற்சிகளில் அனுபவம் வாய்ந்த சாட்சிகள் சிலர் பயன்படுத்தின உதாரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. (மத். 10:11) இந்த மறுமொழிகள் எதையும் நீங்கள் மனப்பாடம் செய்வதல்ல, ஆனால் அந்த எண்ணத்தை மனதில் ஏற்று, அதை உங்கள் சொந்தச் சொற்களில் அமைத்து, நீங்கள் பேசும் ஆளில் உங்கள் உண்மையான அக்கறையைக் காட்டும் முறையில் அதை எடுத்துச் சொல்லும்படியே நாங்கள் ஆலோசனை கூறுகிறோம். இவ்வாறு நீங்கள் செய்கையில், சரியானதை நாடும் இருதயத்தையுடையோர், ஜீவனடைவதற்குத் தம்முடைய அன்புள்ள ஏற்பாடுகளிடம் அவர்களை இழுக்க யெகோவா செய்துகொண்டிருப்பதற்குச் செவிகொடுத்துக் கேட்டு நன்றிமதித்துணர்வுடன் செயல்படுவர் என்று நீங்கள் திடநம்பிக்கையுடன் இருக்கலாம்.—யோவான் 6:44; அப். 16:14.

‘எனக்கு அதில் அக்கறையில்லை’

‘நான் இதைக் கேட்கலாமா, உங்களுக்கு பைபிளில் அக்கறையில்லையென குறிப்பிடுகிறீர்களா, அல்லது பொதுவாய் மதம் உங்களுக்கு அக்கறையூட்டுவதில்லையென்றா? நான் இதைக் கேட்பதன் காரணமென்னவென்றால், ஒரு காலத்தில் மதபக்தியுடையோராக இருந்த பலரை நாங்கள் சந்தித்தோம், அவர்கள் சர்ச்சுகளில் மிகுந்த பாசாங்குத்தனத்தைக் காண்பதால் (அல்லது, மதம் வெறும் பணம்-சம்பாதிக்கும் மற்றொரு தொழிலே என தாங்கள் உணருவதால்; அல்லது, மதம் அரசியலில் தலையிடுவதைத் தாங்கள் சம்மதியாததால்; முதலியன) இனிமேலும் சர்ச்சுக்குப் போகிறதில்லை. பைபிளும் இத்தகைய பழக்கச் செயல்களை அனுமதிக்கிறதில்லை. மேலும் நாம் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கக்கூடியதற்கு ஒரே ஆதாரத்தை அது அளிக்கிறது.’

‘மற்றொரு மதத்தில் நீங்கள் அக்கறை கொண்டில்லையென நீங்கள் பொருள்கொண்டால், நான் அதை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் அணுசக்திப் போரின் பயமுறுத்தலைக் கருதுகையில் நாம் என்ன வகையான எதிர்காலத்தை எதிர்பார்க்கலாம் (அல்லது, போதப்பொருள் துர்ப்பிரயோகத்திலிருந்து நம் பிள்ளைகளை நாம் எவ்வாறு பாதுகாப்பது; அல்லது, வீதிகளில் நடப்பதற்கு நாம் பயப்பட வேண்டியிராதபடி குற்றச் செயல்களைக் குறித்து என்ன செய்யப்படலாம்; முதலியன) என்பதில் நீங்கள் பெரும்பாலும் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். உண்மையான தீர்வுக்கான எதிர்பார்ப்பு எதையாவது நீங்கள் காண முடிகிறதா?’

‘உங்களுக்கு ஏற்கெனவே ஒரு மதம் இருப்பதன் காரணமாகவா? . . . இதை எனக்குச் சொல்லுங்கள், எல்லாரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் ஒரு காலத்தை நாம் என்றாவது காண்போமென நீங்கள் நினைக்கிறீர்களா? . . . எது குறுக்கே இடையூறாக இருப்பதாய்த் தோன்றுகிறது? . . . இது கருத்துடையதாயிருக்க, என்ன வகையான ஆதாரம் தேவைப்படும்?’

‘நான் அதை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஒருசில ஆண்டுகளுக்கு முன்னால் நானும் அவ்வாறு உணர்ந்தேன். ஆனால் நான் பைபிளில் வாசித்த ஒன்று காரியங்களை வேறுபட்ட நோக்குநிலையில் பார்க்கும்படி உதவிசெய்தது. (அது என்னவென அவருக்குக் காண்பியுங்கள்.)’

‘மரித்த உங்களுடைய அன்பானவர்களை நீங்கள் மறுபடியும் காண்பது எவ்வாறென (அல்லது, வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன; அல்லது, நம்முடைய குடும்பத்தை ஒன்றுபட்டிருக்கும்படி வைக்க அது எவ்வாறு உதவுமென; முதலியன) நான் உங்களுக்கு பைபிளிலிருந்து காட்டக்கூடுமானால் நீங்கள் அக்கறை காட்டுவீர்களா?’

‘எதையாவது வாங்குவதில் நீங்கள் அக்கறைகொண்டில்லையென குறிப்பிடுகிறீர்களென்றால், உங்கள் மனசங்கடத்தைப் போக்குகிறேன். நான் வியாபார வேலையில் ஈடுபட்டில்லை. ஆனால், நோயும் குற்றச் செயல்களும் இல்லாததும், உங்களை உண்மையில் நேசிக்கும் அயலாரைக் கொண்டதுமான பரதீஸான பூமியில் வாழ்வதற்குரிய வாய்ப்பில் நீங்கள் அக்கறை கொள்வீர்களா?’

‘யெகோவாவின் சாட்சிகள் வருகையில் இது நீங்கள் வழக்கமாய்ச் சொல்லும் பதிலா? . . . நாங்கள் ஏன் விடாமல் திரும்பத்திரும்ப வருகிறோம் அல்லது எங்களுக்குச் சொல்ல என்ன இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது உண்மையில் வியந்து சிந்தித்ததுண்டா? . . . சுருக்கமாய், நான் உங்களைக் காண வந்தக் காரணமென்னவெனில், நான் ஒன்றை அறிந்திருக்கிறேன், அதை நீங்களும் அறியவேண்டும். இந்த ஒரு தடவை மாத்திரம் சற்றுக் கவனித்துக் கேட்கலாமல்லவா?’

‘எனக்கு மதத்தில் அக்கறையில்லை’

‘நீங்கள் உணருவதை நான் விளங்கிக்கொள்ள முடிகிறது. வெளிப்படையாய்ச் சொல்ல, சர்ச்சுகள் இந்த உலகத்தை வாழ்வதற்குப் பாதுகாப்பான இடமாக்குகிறதில்லை, அல்லவா? . . . நான் இதைக் கேட்கலாமா, நீங்கள் இப்பொழுது உணருவதுபோல் எப்பொழுதும் உணர்ந்தீர்களா? . . . எனினும் நீங்கள் கடவுளில் நம்புகிறீர்களா?’

‘உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஆட்கள் மிகப் பலர் இருக்கின்றனர். மதம் அவர்களுக்கு உண்மையில் உதவிசெய்யவில்லை. இது நாங்கள் வருவதற்கு ஒரு காரணம்—ஏனெனில் சர்ச்சுகள் ஜனங்களுக்குக் கடவுளையும் மனிதவர்க்கத்துக்கு அவர் கொண்டுள்ள அதிசயமான நோக்கத்தையும் பற்றிச் சொல்லவில்லை.’

‘ஆனால் உங்கள் சொந்த எதிர்காலத்தில் உங்களுக்கு அக்கறை உண்டென நான் நிச்சயமாயிருக்கிறேன். இன்று உலகத்தில் இருந்துவரும் இதே நிலைமைகளை பைபிள் முன்னறிவித்ததென உங்களுக்குத் தெரியுமா? . . . முடிவு என்னவாயிருக்குமெனவும் அது காட்டுகிறது.’

‘நீங்கள் எப்பொழுதும் இவ்வாறே உணர்ந்தீர்களா? . . . எதிர்காலத்தைப்பற்றி எவ்வாறு உணருகிறீர்கள்?’

‘யெகோவாவின் சாட்சிகளில் எனக்கு அக்கறையில்லை’

‘பலர் எங்களிடம் இவ்வாறு சொல்கிறார்கள். வீட்டுக்காரர் பெரும்பான்மையர் எங்களை வரவேற்கமாட்டார்களென நாங்கள் அறிந்திருந்தும் என்னைப்போன்ற ஆட்கள் இந்தச் சந்திப்புகளைச் செய்ய ஏன் நாங்களாக முன்வருகிறோமென நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டதுண்டா? (மத்தேயு 25:31-33-ல் உள்ளதைச் சுருக்கமாய்க் கூறி, எல்லா ஜாதியாரின் ஜனங்களிலும் ஒரு பிரித்தல் வேலை நடக்கிறது, இதில் ராஜ்ய செய்திக்கு அவர்களுடைய பிரதிபலிப்பு ஒரு முக்கியமான அம்சம் என விளக்குங்கள். அல்லது எசேக்கியேல் 9:1-11-ஐச் சுருக்கமாய்க் கூறி, ராஜ்ய செய்திக்கு ஜனங்களின் பிரதிபலிப்பை ஆதாரமாகக் கொண்டு, ஒவ்வொருவரும் மிகுந்த உபத்திரவத்தினூடே பாதுகாத்து வைக்கப்படுவதற்காயினும் அல்லது கடவுளால் அழிக்கப்படுவதற்காயினும் “அடையாளம்” போப்படுகிறார்கள் என்று விளக்குங்கள்.)’

‘நான் அதை விளங்கிக்கொள்ள முடிகிறது, ஏனெனில் நான் அதே விதமாக உணர்ந்ததுண்டு. ஆனால், வெறுமென நியாயப்படி நடந்துகொள்ள, அவர்களில் ஒருவருக்குச் செவிகொடுத்துக் கேட்கத் தீர்மானித்தேன். அவர்களைப்பற்றி என்னிடம் சொல்லப்பட்டவை உண்மையல்லவென நான் கண்டுபிடித்தேன். (பொதுவாய்ச் சொல்லப்படும் ஒரு பொய்க் குற்றச்சாட்டைக் குறிப்பிட்டு பின்பு நாம் நம்புவதை விளக்கிக்கூறுங்கள்.)’

‘சிறிது காலத்துக்கு முன் என் கதவண்டை வந்த ஒரு சாட்சியிடம் நான் இதையே சொன்னேன். ஆனால் அவர் போதற்குமுன் நான் ஒரு கேள்விக் கேட்டேன், அதற்கு அவர் பதில்சொல்ல முடியாதென நான் நிச்சயமாயிருந்தேன். அது என்னவென்று அறிய விரும்புகிறீர்களா? . . . (ஓர் உதாரணமாக: காயீன் தன் மனைவியை எங்கிருந்து அடைந்தான்?)’ (உண்மையில் இத்தகைய ஓர் அனுபவம் இருந்தவர்கள் பயன்படுத்துவதற்கு.)

‘நீங்கள் மத பக்தியுள்ளவரென்றால், நான் இதை விளங்கிக்கொள்ள முடிகிறது. உங்கள் சொந்த மதம் உங்களுக்கு அதிகத்தைக் குறிக்கிறது. ஆனால் நாம் இருவருமே (பொருத்தமான ஒரு பேச்சுப்பொருளைக் குறிப்பிடுங்கள்) இதில் அக்கறைகொண்டிருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களென்று நான் நினைக்கிறேன்.’

‘அப்படியானால் சந்தேகமில்லாமல் உங்களுக்கு உங்கள் சொந்த மதம் இருக்கிறது. அது எந்த மதம் என்று நான் கேட்பதில் ஆட்சேபனை எதுவும் உண்டா? . . . உங்கள் விசுவாசத்தைக்கொண்டுள்ள ஆட்களுடன் பேசுவதில் நாங்கள் மகிழ்ச்சிகொள்கிறோம். (கலந்துபேசுவதற்கு உங்கள் பேச்சுப்பொருளைக் குறிப்பிடுங்கள்) இதைப்பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?’

‘ஆம், நான் விளங்கிக்கொள்கிறேன். ஆனால் நாங்கள் வரும் காரணமென்னவெனில், நாங்கள் ஒரு குடும்பமாயிருக்கிறோம், ஆட்கள் ஒன்றாய்ச் சமாதானத்துடன் வாழ்வதைக் காண நாங்கள் விரும்புகிறோம். சண்டையையும் துன்பத்தையும் பற்றிய அறிவிப்புகளைக் கொண்ட செய்திகளை ஒவ்வொரு இரவும் கேட்பதில் நாங்கள் மனச் சங்கடமும் சலிப்புமடைகிறோம். நீங்களும் அவ்வாறே உணருகிறீர்களென்று நான் நினைக்கிறேன். . . . ஆனால் எது தேவைப்பட்ட மாற்றத்தைக் கொண்டுவர முடியும்? . . . பைபிளிலுள்ள வாக்குகளில் நாங்கள் ஊக்கமூட்டுதலைக் கண்டடைந்திருக்கிறோம்.’

‘நீங்கள் உணருவதைப்பற்றி எனக்குத் தெரிவித்ததை நான் மதிக்கிறேன். எங்களைப்பற்றி எது உங்களுக்கு விருப்பமில்லை என்பதை எனக்குச் சொல்வீர்களா? பைபிளிலிருந்து நாங்கள் உங்களுக்குக் காட்டுவதா, அல்லது நாங்கள் உங்களைச் சந்திக்க வருவதா?’

‘எனக்கு என் சொந்த மதம் இருக்கிறது’

‘நீங்கள் எனக்கு இதைச் சொல்வீர்களா, சரியானதை நேசிக்கும் ஆட்கள் பூமியில் என்றென்றும் வாழும் ஒரு காலம் வருமென்று உங்கள் மதம் கற்பிக்கிறதா? . . . இது மனதைக் கவரும் ஓர் எண்ணம், அல்லவா? . . . இது இங்கே பைபிளில்தானே இருக்கிறது. (சங். 37:29; மத். 5:5; வெளி. 21:4)’

‘இந்தக் காரியத்தில் ஒவ்வொருவரும் தன் சொந்தத் தீர்மானத்தைச் செய்யவேண்டுமென்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கடவுள்தாமே தம்முடைய உண்மையான வணக்கத்தாராக இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட வகையான ஆட்களுக்காகத் தேடுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இங்கே யோன் 4:23, 24-ல் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். “உண்மையோடு” வணங்குவது எதைக் குறிக்கும்? . . . எது உண்மை எது உண்மையல்லவென அறிந்துகொள்வதற்கு நமக்கு உதவிசெய்ய கடவுள் நமக்கு என்ன கொடுத்திருக்கிறார்? . . . (யோவான் 17:17) இது தனிப்பட்ட முறையில் நமக்கு எவ்வளவு முக்கியமென்பதைக் கவனியுங்கள். (யோவான் 17:3)’

‘உங்கள் வாழ்நாளெல்லாம் நீங்கள் மதபக்தியுள்ள ஆளாக இருந்தீர்களா? . . . மனிதவர்க்கம் எப்போதாவது ஒரே மதத்தில் ஒற்றுமைப்படுவரென நீங்கள் நினைக்கிறீர்களா? . . . இதைப்பற்றி நான் மிக அதிகம் சிந்தித்திருக்கிறேன், ஏனெனில் இங்கே வெளிப்படுத்துதல் 5:13-ல் இவ்வாறு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. . . . இந்தக் காட்சிக்குள் நாம் பொருந்த என்ன தேவைப்படுகிறது?’

‘உங்களைப்போல் ஆவிக்குரிய காரியங்களில் அக்கறைகொண்டிருக்கிற ஒருவரைக் காணும் நம்பிக்கையிலிருந்தேன். இன்று பலர் இவ்வாறு இல்லை. கடவுள் இந்தப் பூமியிலிருந்து எல்லா அக்கிரமத்தையும் நீக்கிச் சுத்தப்படுத்தி அதை நீதியை நேசிக்கும் ஜனங்கள் மாத்திரமே வாழும் இடமாக்குவார் என்று பைபிளில் கொடுத்துள்ள வாக்கைப்பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்களென நான் கேட்கலாமா? இது உங்கள் மனதுக்குக் கவர்ச்சியூட்டுகிறதா?’

‘சர்ச் விவகாரங்களில் நீங்கள் வெகு பங்கெடுக்கிறீர்களா? . . . இந்நாட்களில் சர்ச் ஆராதனைகளுக்குப் பொதுவாய்ச் சர்ச்சில் ஆட்கள் நிரம்பியிருக்கிறார்களா? . . . சர்ச் உறுப்பினர் பெரும்பான்மையர் கடவுளுடைய வார்த்தையை அன்றாட வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பதற்கு உள்ளப்பூர்வ ஆவலை உண்மையில் காட்டுவதை நீங்கள் காண்கிறீர்களா? (அல்லது, உலகத்தை எதிர்ப்படும் பிரச்னைகளுக்குத் தீர்வைக் குறித்து அந்த உறுப்பினருக்குள் ஒற்றுமைப்பட்ட சிந்தனை இருப்பதாக நீங்கள் காண்கிறீர்களா?) தனிப்பட்ட வீட்டு பைபிள் போனை உதவிசெய்வதை நாங்கள் காண்கிறோம்.’

‘உங்கள் மதத்தில் நீங்கள் திருப்தியுடனிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் உலக நிலைமைகளில் பெரும்பான்மையர் திருப்தி கொண்டில்லை. ஒருவேளை உங்களைக் குறித்ததிலும் அவ்வாறு இருக்கலாம்; அப்படித்தானா? . . . இதெல்லாம் எதற்கு வழிநடத்துகிறது?’

‘நீங்கள் பைபிள் வாசிப்பதை விரும்பி அனுபவிக்கும் ஒருவரா? . . . அதைத் தவறாமல் ஒழுங்காய் வாசிப்பதற்கு உங்களுக்கு நேரமிருக்கிறதா?’

‘நீங்கள் எனக்கு இதைச் சொன்னதை நான் மதிக்கிறேன். நம்முடைய மத வளர்ப்புச் சூழ்நிலை என்னவாயிருந்தாலும், உலக சமாதானத்தில் நாம் எல்லாரும் மிக அதிக அக்கறைகொண்டிருக்கிறோம் (அல்லது, நம்முடைய பிள்ளைகளைக் கெட்ட செல்வாக்குக்கெதிராகப் பாதுகாக்கும் வழிகளில்; அல்லது, மக்கள் ஒருவரையொருவர் உண்மையில் நேசிக்கும் அயலகத்தாரைக் கொண்டிருப்பதில்; அல்லது, மற்ற ஆட்களுடன் நல்ல உறவுகளை அனுபவிப்பதில், எல்லாரும் நெருக்கடியில் இருப்பதை உணருகையில் இது சவாலை அளிக்கலாம்).’

‘நீங்கள் மதப்பற்றுடையவராய் இருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று பலர் மதத்தை முக்கிய கவனத்துக்குரியதாய் ஏற்பதில்லை. கடவுள் இல்லை என்றுங்கூட சிலர் எண்ணுகின்றனர். ஆனால், நீங்கள் கற்பிக்கப்பட்டிருப்பதன்படி, கடவுள் என்ன வகையான ஆளென நினைக்கிறீர்கள்? . . . பைபிள் அவருடைய சொந்தப் பெயரை நமக்குக் கொடுப்பதைக் கவனியுங்கள். (யாத். 6:3; சங். 83:17)’

‘இயேசு தம்முடைய சீஷர்களைப் பிரசங்கிக்கும்படி அனுப்புகையில், பூமியின் எல்லாப் பாகங்களுக்கும் போகும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார், ஆகையால் தங்களுடையதிலிருந்து வேறுபட்ட மதத்தையுடைய பல ஆட்களை அவர்கள் சந்திப்பார்கள். (அப். 1:8) ஆனால் நீதிக்காகப் பசிதாகங்கொண்டுள்ளவர்கள் செவிகொடுத்துக் கேட்பார்களென அவர் அறிந்திருந்தார். நம்முடைய நாளில் எந்தத் தனிப்பட்ட செய்தி எங்கும் அறிவிக்கப்படுமென அவர் கூறினார்? (மத். 24:14) இந்த ராஜ்யம் நமக்கு எதைக் குறிக்கிறது?’

‘இங்கே நாங்கள் ஏற்கெனவே கிறிஸ்தவர்கள்’

‘இதை அறிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். அப்படியானால் இயேசுதாமே ஜனங்களை அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று சந்திக்கும், இதைப்போன்ற வேலையைச் செய்ததும், அவருடைய சீஷர்களும் அதைச் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டதும் உங்களுக்கு நிச்சயமாய்த் தெரியும். அவர்கள் செய்தப் பிரசங்கத்தின் முக்கியப் பொருளை நீங்கள் நன்றாய்த் தெரிந்திருக்கிறீர்களா? . . . இதைப்பற்றிப் பேசவே நாங்கள் இன்று வந்தோம். (லூக்கா 8:1; தானி. 2:44)’

‘அப்படியானால் இங்கே மலைப் பிரசங்கத்தில் இயேசு சொன்னதன் வினைமையானத் தன்மையை நீங்கள் மதிப்பீர்களென நான் நிச்சயமாயிருக்கிறேன். அவர் பின்வருமாறு சொன்னபோது ஒளிவு மறைவில்லாமல் நேராகவும் அதோடு அன்போடும் பேசினார். . . . (மத். 7:21-23) அப்படியானால், நம்மை நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி என்னவெனில், பரலோகத் தகப்பனின் சித்தத்தை நான் எவ்வளவு நன்றாய் அறிந்திருக்கிறேன்? (யோவான் 17:3)’

‘நான் மிகவும் வேலையாயிருக்கிறேன்’

‘அப்படியானால் நான் மிகச் சுருக்கமாய்ச் சொல்லிவிடுகிறேன். நான் ஒரே ஒரு முக்கிய எண்ணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வந்தேன். (கலந்தாலோசிப்புக்கான உங்கள் பேச்சுப் பொருளின் சுருக்கக் குறிப்பை ஓரிரண்டு வாக்கியங்களில் சொல்லிவிடுங்கள்.)’

‘சரிதான். உங்களுக்கு வசதியாயுள்ள வேறொரு சமயம் வந்து சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன். ஆனால் நான் போதற்கு முன்னால், சிந்திப்பதற்கு நமக்கு முக்கியமான ஒன்றை உண்மையில் கொடுக்கும் ஒரே ஒரு வேதவசனத்தை வாசிக்க விரும்புகிறேன்.’

‘எனக்கு விளங்குகிறது. ஒரு தாயாக (அல்லது, தொழிலாளனாக; அல்லது, மாணாக்கனாக) எனக்கும் முழு வேலைத் திட்டம் இருக்கிறது. ஆகையால் நான் சுருக்கமாய்ச் சொல்லுகிறேன். நாமெல்லாரும் வினைமையான சூழ்நிலைமையை எதிர்ப்படுகிறோம். இந்தத் தற்போதைய பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையைக் கடவுள் அழிக்கப்போகும் காலத்துக்கு வெகு அண்மையில் நாம் இருக்கிறோமென பைபிள் காட்டுகிறது. ஆனால் தப்பிப்பிழைப்போர் இருப்பார்கள். கேள்வி என்னவெனில், தப்பிப்பிழைப்போருக்குள் இருக்க நீங்களும் நானும் என்ன செய்யவேண்டும்? பைபிள் இந்தக் கேள்விக்கு விடையளிக்கிறது. (செப். 2:2, 3)’

‘உங்களுக்குத் தெரியுமா, நான் வந்திருப்பதன் காரணம் அதுவே. நாம் எல்லாரும் அதிக வேலையாயிருக்கிறோம்—அவ்வளவு வேலையாயிருப்பதால் வாழ்க்கையில் உண்மையில் முக்கியமான காரியங்கள் சில சமயங்களில் கவனியாமல் விடப்படுகின்றன, அல்லவா? . . . நான் சுருக்கமாய்ச் சொல்லிவிடுகிறேன், ஆனால் இந்த ஒரே ஒரு வசனத்தில் நீங்கள் அக்கறைகொள்வீர்களென நான் நிச்சயமாயிருக்கிறேன். (லூக்கா 17:26, 27) அந்தச் சூழ்நிலைமையில் நம்மைக் காண நம்மில் ஒருவரும் விரும்புகிறதில்லை, ஆகையால் பைபிளில் சொல்லியிருப்பதை ஆழ்ந்து கவனிப்பதற்கு நம்முடைய வேலைநிறைந்த வாழ்க்கையில் நாம் நேரம் ஒதுக்கி வைக்கவேண்டும். (புத்தக அளிப்பு செய்யுங்கள்.)’

‘உங்கள் அயலகத்தார் சிலரை நாங்கள் சந்தித்தப்பின், சுமார் அரைமணிநேரத்துக்கப்பால் நாங்கள் திரும்பி வந்தால் வசதியாயிருக்குமா?’

‘அப்படியானால் நான் உங்களைத் தாமதிப்பதில்லை. ஒருவேளை நான் மற்றொரு நாள் வரலாம். ஆனால் நான் போதற்குமுன், இந்த விசேஷ அளிப்பைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறேன். (அந்த மாத அளிப்பைக் காட்டுங்கள்.) இந்தப் பிரசுரத்தில் (ஒன்று அல்லது இரண்டு கேள்விகளைக் குறிப்பிட்டு) இத்தகைய கேள்விகளுக்கு பைபிளின் சொந்த விடைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு படிப்புமுறை அடங்கியிருக்கிறது.’

‘நான் உங்களை வசதியற்ற ஒரு நேரத்தில் கண்டுபிடித்தேன். உங்களுக்குப் பெரும்பாலும் தெரிந்திருக்கிற பிரகாரம், நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவன். நான் உங்களுடன் பைபிளிலிருந்து ஒரு முக்கிய எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். ஆனால் இப்பொழுது செவிகொடுத்துக்கேட்க உங்களுக்கு நேரமிராததனால், இந்த மாத பத்திரிகைகளை நான் உங்களிடம் விட்டுச் செல்லலாம், இது (கட்டுரை பொருளைக் குறிப்பிட்டு) இதைப்பற்றித் தர்க்கிக்கிறது. உங்களுக்கு நேரமிருக்கையில் நீங்கள் இவற்றை வாசிக்கலாம். இவற்றை ஒரு சிறிய நன்கொடையாகிய . . .-க்கு அளிக்கிறோம்.’

‘அதை விளங்கிக்கொள்வது எனக்குக் கடினமாயில்லை. எல்லாவற்றையும் செய்து முடிப்பதற்குப் போதிய நேரமிருப்பதாகத் தோன்றுவதே இல்லை. ஆனால் நீங்கள் என்றென்றும் வாழக்கூடுமானால் வாழ்க்கை எவ்வளவு வேறுபட்டிருக்குமென நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? இது உங்களுக்கு விநோதமாய் தொனிக்கலாமென்று எனக்குத் தெரியும். ஆனால் இத்தகைய காரியம் எவ்வாறு சாத்தியமென விளக்கும் ஒரே ஒரு பைபிள் வசனத்தை நான் காட்ட அனுமதியுங்கள். (யோவான் 17:3) ஆகையால், கடவுளையும் அவருடைய குமாரனையும் பற்றிய இந்த அறிவை ஏற்று வருவதே நாம் இப்பொழுது செய்ய வேண்டியதாகும். இதனிமித்தமே நாங்கள் இந்தப் புத்தகத்தை விட்டுச் செல்கிறோம்.’

‘நீங்கள் ஏன் அவ்வளவு அடிக்கடி வருகிறீர்கள்?’

‘ஏனெனில் பைபிளில் குறிப்பிட்டுள்ள கடைசி நாட்களில் நாம் வாழ்கிறோமென நாங்கள் நம்புகிறோம். தற்போதைய நிலைமைகளின் முடிவு என்னவாகும் என்பதைப்பற்றிச் சிந்திப்பது நம்மெல்லாருக்கும் முக்கியமென நாங்கள் உணருகிறோம். (சமீப சம்பவங்கள் அல்லது தற்போதிருக்கும் நிலைமைகள் ஒன்றிரண்டு குறிப்பிடுங்கள்.) கேள்வி என்னவெனில், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை நாம் தப்பிப்பிழைக்க வேண்டுமானால் நாம் என்ன செய்யவேண்டும்?’

‘ஏனெனில் நாங்கள் கடவுளையும் எங்கள் அயலாரையும் நேசிக்கிறோம். அதையே நாமெல்லாரும் செய்ய வேண்டுமல்லவா?’

‘எனக்கு ஏற்கெனவே உங்கள் வேலையைப்பற்றி நன்றாய்த் தெரியும்’

‘அதைக் கேட்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சாட்சியாயிருக்கும் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் உங்களுக்கு உண்டா? . . . நான் உங்களிடம் கேட்கலாமா: நாங்கள் பைபிளிலிருந்து கற்பிப்பதை நீங்கள் நம்புகிறீர்களா, அதாவது, நாம் “கடைசி நாட்களில்,” வாழ்கிறோம், சீக்கிரத்தில் கடவுள் அக்கிரமக்காரரை அழிக்கப்போகிறார், இந்தப் பூமி ஒரு பரதீஸாகும் அதில் ஜனங்கள் ஒருவரையொருவர் உண்மையில் நேசிக்கும் அயலாருக்குள் பரிபூரண ஆரோக்கியத்தில் என்றென்றும் வாழ்வார்கள் என்பவற்றை?’

‘எங்களிடம் பணமில்லை’

‘நாங்கள் நிதி திரட்டிக்கொண்டில்லை. இலவச வீட்டு பைபிள் படிப்பு அளிக்க முன்வருகிறோம். அதில் படிக்கும் பொருள் ஒன்று (சமீப பிரசுரத்திலிருந்து ஓர் அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்). இது எவ்வாறு நடக்குமென உங்களுக்குக் காட்ட நான் ஒருசில நிமிடங்கள் எடுக்கலாமா? உங்களுக்கு ஒரு பைசாவும் செலவிராது.’

‘நெருக்கடியான காலங்கள்தான். ஆனால் நாங்கள் ஆட்களில் அக்கறைகொண்டிருக்கிறோம், அவர்கள் பணத்தில் அல்ல. (உரையாடலைத் தொருங்கள். பிரசுரங்களில் ஒன்றை அவர்களுக்குக் காண்பித்து அது அவர்களுக்கு எவ்வாறு பயன்தரமுடியுமென்பதை விளக்குங்கள். அவர்கள் உண்மையான அக்கறை காட்டி அதை வாசிப்பதாக உறுதிகூறினால், அதை அவர்களிடம் விட்டுச் செல்லுங்கள். பொருத்தமாயிருந்தால், நம்முடைய உலகளாவிய பிரசங்க வேலைக்குரிய பணச்செலவு எவ்வாறு கவனிக்கப்படுகிறதென்பதை விளக்குங்கள்.)’

‘நான் புத்தமதத்தினன்,’ என்று ஒருவர் சொல்கையில்

மற்ற எல்லாப் புத்தமதத்தினருடையதைப் போவே அவருடைய நம்பிக்கைகளும் இருக்குமென்ற முடிவுக்கு வராதீர்கள். புத்தமத போகங்கள் தெளிவற்றிருக்கின்றன மற்றும் அவற்றின் வியாக்கியானம் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றது. ஜப்பானிய புத்தமதம் தென் கிழக்கு ஆசியாவின் புத்தமதத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. தனியாட்களும் தங்கள் நோக்குநிலையைக் குறித்ததில் வேறுபடுகின்றனர். எனினும், பொதுவில், பின்வரும் குறிப்புகள் உதவியாயிருக்கின்றன: (1) புத்தமதம் புறப்பொருளுலகு சார்ந்த ஒரு கடவுளை, தனியொருவரான சிருஷ்டிகரை ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் புத்தமதத்தினர் பலர் புத்தரின் சிலைகளையும் நினைவுச் சின்னங்களையும் வணங்குகின்றனர். (2) புத்தர் என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்ட, சித்தார்த்தா கெளத்தமா, தன்னைப் பின்பற்றுவோரின் மதக் குறிக்கோளென, அவர்கள் பார்த்துப் பின்பற்றவேண்டியவரெனக் கருதப்படலானார். மனிதவர்க்கத்தை மனித நோக்குநிலையிலிருந்து கூர்ந்தாராய்வதனால் அறிவொளியடைவதையும், மேலும் பூமிக்குரிய எல்லா ஆசையையும் வெளியேற்றும்படி மனதைக் கட்டுப்படுத்துவதனால் துன்பத்தின் மூலக்காரணங்களைத் துண்டித்தகற்றுவதையும் புத்தர் ஊக்கமூட்டினார். இந்த முறையில் ஒருவர், கூடுவிட்டுக் கூடுபாயும் மறுபிறப்பில்லாமல் நிர்வாணாவை அடையலாமென கற்பித்தார். (3) புத்தமதத்தினர் தங்கள் முன்னோர்களை வணங்குகின்றனர், ஏனெனில் அவர்களைத் தங்கள் உயிரின் தோற்றுமூலமாக அவர்கள் கருதுகின்றனர்.

உரையாடலுக்கு ஆலோசனைகள்: (1) புத்தமதத்தினரோடு பேசுகையில், நீங்கள் கிறிஸ்தவமண்டலத்தின் பாகமல்லவென்பதை அறிவுறுத்திக் கூறுங்கள். (2) புத்தமதத்தினர் “பரிசுத்த புத்தகங்களை” மதிக்கின்றனர், இந்தக் காரணத்தினிமித்தம் பொதுவாய் பைபிளுக்கு மதிப்பு கொடுக்கின்றனர். புத்தமதத் தத்துவஞானத்தின்பேரில் பேசிக்கொண்டிருப்பதற்குப் பதில், பைபிளின் நம்பிக்கையான செய்தியைக் கொடுங்கள். பைபிள் வெறும் மனிதத் தத்துவ ஞானம் அல்ல, ஆனால் மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனின் அதிகாரம் பொருந்திய வார்த்தையென அவர்கள் அறியச் செய்யுங்கள். இந்தப் பரிசுத்தப் புத்தகமாகிய பைபிளில் ஊக்கமூட்டும் ஒரு குறிப்பை அவர்களுக்கு நீங்கள் காட்டலாமாவென மரியாதையுடன் கேளுங்கள். (3) புத்தமதத்தினர் பலர் சமாதானத்திலும் குடும்பத்திலும் கூர்ந்த அக்கறை கொண்டிருக்கின்றனர் மற்றும் ஒழுக்கமுறையான வாழ்க்கை நடத்த விரும்புகின்றனர். இந்தக் காரியங்கள் எதிலாயினும் உரையாடலைப் பெரும்பாலும் வரவேற்கின்றனர். (4) மனிதவர்க்கத்தை எதிர்ப்படும் பிரச்னைகளுக்கு உண்மையான தீர்வாகப் பூமியின்மேல் நீதியுள்ள ஒரு பரலோக அரசாங்கத்தை பைபிள் குறிப்பிடுகிறதெனக் காட்டுங்கள். பூமியின் எதிர்காலத்தையும் பூமிக்குரிய ஒரு பரதீஸில் என்றென்றும் வாழும் அதிசயமான எதிர்பார்ப்பையும் அது விளக்குகிறது. (5) வாழ்க்கையின் தொக்கம், வாழ்க்கையின் உட்பொருள், மரித்தோரின் நிலைமை மற்றும் உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கை, அக்கிரமம் இருந்துவருவதன் காரணம் ஆகியவற்றை பைபிள் விளக்குகிறதென நீங்கள் குறித்துக் காட்டலாம். கடவுளுடைய வார்த்தையின் தெளிவான சத்தியங்களை அன்போடு டுத்துக் கூறுவது செம்மறியாட்டைப் போன்றவர்களின் இருதயத்தில் நன்றிமதித்துணரும் பிரதிபலிப்பைக் கொண்டுவரச் செய்யும்.

ஒரு தகப்பனை நாடித்தேடுதல் என்ற சிறு புத்தகம் உண்மையான மனதுடைய புத்தமதத்தினரின் நன்மைக்காகவே முக்கியமாய்த் தயாரிக்கப்பட்டது.

‘நான் இந்து’ என ஒருவர் சொல்கையில்

இந்து தத்துவஞானம் மிகச் சிக்கலானது, இயல்பான பகுத்தறிவுக்கொத்த விவாதத்துக்குப் பொருந்துகிறதில்லை. பின்வரும் இந்தக் குறிப்புகளை மனதில் வைத்திருப்பதை உதவியாகக் காண்பீர்கள்: (1) பிரம்மன் கடவுளில்—பிரம்மா படைப்பவன், விஷ்ணு பாதுகாப்பவன், சிவன் அழிப்பவன் என்ற மூன்று உருவங்கள் அடங்கியிருப்பதாய் இந்துமதம் கற்பிக்கிறது. ஆனால் இந்துக்கள் தனி வாழ்க்கையுடைய தனியொருவரான கடவுளைப்பற்றிச் சிந்திப்பதில்லை. (2) எல்லா இயற்கை பொருட்களும் ஒருபோதும் சாகாத ஆத்துமாவைக் கொண்டிருக்கின்றனவெனவும், அந்த ஆத்துமா உண்மையில் முடிவற்ற மறுபிறப்புச் சுழற்சியை அனுபவிக்கிறதெனவும், அதன் செயல்கள் (கருமங்கள்) அது மறுபிறப்பெடுக்கும் உருவகைகளைத் தீர்மானிக்கின்றனவெனவும், உடல்சம்பந்த ஆசைகள் யாவற்றையும் ஒழிப்பதன்மூலம் மாத்திரமே இந்த ‘முடிவற்றச் சக்கரத்திலிருந்து’ விடுதலை கூடியதாயிருக்கிறதெனவும், மேலும் அதை அடைந்தால், அந்த ஆத்துமா இந்தப் பிரபஞ்ச ஆவியுடன் தற்பண்பிழந்து ஒன்றுபடுமெனவும் இந்துக்கள் நம்புகிறார்கள். (3) பொதுவில், இந்துக்கள் மற்ற மதங்களை மதிக்கிறார்கள். மதங்கள் ஒன்றுக்கொன்று முரண்படும் கோட்பாடுகளைக் கற்பித்தாலும், எல்லா மதங்களும் ஒரே சத்தியத்துக்கே வழிநடத்துகின்றனவென்று இந்துக்கள் நம்புகிறார்கள்.

இந்து தத்துவஞானத்தின் சிக்கல்களைக் கையாள முயலுவதற்குப் பதில், பரிசுத்த பைபிளிலுள்ள திருப்திதரும் சத்தியங்களைக் கொடுங்கள். ஜீவனடைவதற்குச் செய்துள்ள யெகோவாவின் அன்பான ஏற்பாடுகள் எல்லா வகையான ஆட்களுக்கும் உரியவை, அவருடைய வார்த்தையிலுள்ள தெளிவான சத்தியங்கள் நீதிக்காகப் பசிதாகங்கொள்பவரின் இருதயங்களை எட்டும். உண்மையில் நல்ல ஆதாரங்கொண்ட எதிர்கால நம்பிக்கையை பைபிள் மாத்திரமே அளிக்கிறது; மனிதவர்க்கம் முழுவதும் எதிர்ப்படும் முக்கியமான கேள்விகளுக்கு உண்மையில் திருப்திதரும் விடைகளை பைபிள் ஒன்றே கொடுக்கிறது. அந்த விடைகளைக் கேட்க அவர்களுக்கு வாய்ப்பளியுங்கள். இந்து ரிக்வேதப் பாடல் 10. 121, “அறியப்படாதக் கடவுளுக்கு,” என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருப்பது கவனத்தைக் கவருகிறது. அத்தேனே பட்டணத்தில் “அறியப்படாத கடவுளுக்கு” என்று வைக்கப்பட்டிருந்த பலிபீடத்தை அப்போஸ்தலன் குறிப்பிட்டுப் பேசின அதே முறையில் குறிப்பிட்டுப் பேசுவது சில சந்தர்ப்பங்களில் பொருத்தமாயிருப்பதை நீங்கள் காணலாம். (அப். 17:22, 23) ஊக்கமூட்டுவதாய், விஷ்ணு என்ற இந்து கடவுளின் பெயர், அதன் தொக்க வகர எழுத்தில்லாமல், இஷ்-ணு என்பதாகும், இது கல்தேய மொழியில் “அந்த மனிதன் நோவா,” என்று பொருள்கொள்கிறது. நோவாவின் நாட்களில் ஏற்பட்ட அந்தப் பூகோள ஜலப்பிரளயம் குறிப்பதைப்பற்றி பைபிளில் சொல்லியிருப்பதைக் குறிப்பிடுங்கள். முடிவற்ற மறுபிறப்புகளை எதிர்பார்ப்பதால் மனவேதனைப்படுகிறவர்களுக்கு 320, 321-ம் பக்கங்களில், “மறுபிறப்பு கோட்பாடு” என்ற பிரதான தலைப்பின்கீழ்க் கொடுத்துள்ள குறிப்புகளைக்கொண்டு உதவிசெய்யலாம்.

விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்தியப் பாதை மற்றும் குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும் என்ற சிறு புத்தகங்கள் நேர்மைவாய்ந்த இந்துக்களுக்கு மிகப் பயனுள்ள தகவலைக் கொண்டிருக்கின்றன.

‘நான் யூதன்,’ என ஒருவர் சொல்கையில்

முதலாவது, அவர் யூதனாகத் தன்னை எவ்வாறு கருதுகிறாரென்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஒருசிலரே மதப்பற்றுடையோராய் இருக்கின்றனர். பலருக்கு, யூதராயிருப்பது வெறும் ஓர் இனத்துக்குரிய பெயர்க்குறிப்பேயாகும்.

இவை மனதில் வைத்திருப்பதற்குப் பயனுள்ள ஒருசில குறிப்புகள்: (1) கடவுளுடைய பெயரை உச்சரிக்கக் கூடாதென்று கட்டளையிட்டிருப்பதாக மதப்பற்றுள்ள யூதர்கள் கருதுகின்றனர். (2) “பைபிள்” கிறிஸ்தவ புத்தகம் என்று யூதர்கள் பலர் நினைக்கின்றனர், ஆனால் நீங்கள் “எபிரெய வேத எழுத்துக்கள்,” அல்லது “வேத எழுத்துக்கள்,” அல்லது “டோரா,” என்று குறிப்பிட்டால் இந்தப் பிரச்னை எழும்புகிறதில்லை. (3) பாரம்பரியம் அவர்களுடைய விசுவாசத்தின் முக்கிய பாகம், மேலும் அதிகாரத்துவத்தில் அது வேத எழுத்துக்களுக்குச் சமமாயிருப்பதாக மதப்பற்றுள்ள யூதர்கள் பலர் கருதுகின்றனர். (4) இயேசுவின் பெயரில் கிறிஸ்தவமண்டலத்தின் கைகளில் யூதர்கள் அனுபவித்தக் கொடுமையான துன்புறுத்தலை அவர்கள் இயேசு கிறிஸ்துவுடன் சம்பந்தப்படுத்தலாம். (5) ஓய்வுநாளைக் கைக்கொள்ளும்படி கடவுள் யூதர்களுக்குக் கட்டளையிடுகிறார் என்று அவர்கள் பெரும்பாலும் நம்புகிறார்கள், இந்த நம்பிக்கை அந்நாளில் பணத்தைக் கையாளுவதை தவிர்ப்பதையும் உட்படுத்துகிறது.

இருவருக்கும் பொதுவான ஓர் அடிப்படையை நிலைநிறுத்த, நீங்கள் பின்வருமாறு சொல்லலாம்: (1) ‘நம்முடைய வளர்ப்புச் சூழ்நிலை என்னவாயினும், இன்றைய உலகத்தில் நாம் எல்லாரும் ஒரே வகையான துன்பங்களை எதிர்ப்படுகிறோம் என்பதை நீங்கள் சந்தேகமில்லாமல் ஒப்புக்கொள்வீர்கள். இந்தச் சந்ததி எதிர்ப்படும் இந்தப் பெரும் பிரச்னைகளுக்கு ஒரு நிலையான தீர்வு உண்மையில் இருக்குமென நீங்கள் நம்புகிறீர்களா? (சங். 37:10, 11, 29; சங். 146:3-5; தானி. 2:44)’ (2) ‘நாங்கள் கிறிஸ்தவமண்டலத்தின் பாகமல்லர், திரித்துவத்தை நாங்கள் நம்புகிறதில்லை ஆனால் ஆபிரகாமின் கடவுளையே நாங்கள் வணங்குகிறோம். மத சத்தியத்தைப் பற்றிய காரியத்தில் நாங்கள் முக்கியமாய் அக்கறைகொண்டிருக்கிறோம். இதை நான் உங்களிடம் கேட்கலாமா, சத்தியம் எதுவென்பதை நீங்கள் எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள், முக்கியமாய் நம்பிக்கைகளைக் குறித்ததில் யூத மக்களுக்குள் பெரும் வேறுபாடுகள் இருப்பதைக் கருதுகையில்? . . . (உபா. 4:2; ஏசா. 29:13, 14; சங். 119:160)’ (3) ‘ஆபிரகாமின் வித்தின்மூலம் சகல ஜாதிகளின் ஜனமும் ஆசீர்வதிக்கப்படுமென்று கடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கில் நாங்கள் மிக ஆர்வ அக்கறைகொண்டிருக்கிறோம். (ஆதி. 22:18)’

அவர் கடவுளில் விசுவாசக் குறைவை வெளிப்படுத்தினால், அவர் எப்பொழுதும் அம்முறையில் உணர்ந்தாராவென கேளுங்கள். பின்பு கடவுள் அக்கிரமத்தையும் துன்பத்தையும் ஏன் அனுமதித்திருக்கிறார் என்பதை ஒருவேளைக் கலந்துபேசலாம். நாஜி படுகொலையின் நினைவுகள் இதைப்பற்றி அக்கறைகொள்ளும்படி பல யூதரைச் செய்வித்திருக்கிறது.

கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை நீங்கள் விவாதித்துப் பேசினால், அதைப்பற்றி அந்த மற்ற ஆள் உணரும் முறையை முதலாவது கண்டுபிடியுங்கள். யாத்திராகமம் 20:7-ல் (NW) கடவுளுடைய பெயரைத் தகாத முறையில் பயன்படுத்தக் கூடாதென்றே கட்டளையிடப்பட்டிருக்கிறது, அதை மரியாதையுடன் பயன்படுத்தக் கூடாதெனக் கட்டளையிட்டில்லை என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். பின்பு யாத்திராகமம் 3:15 (அல்லது சங்கீதம் 135:13); 1 இராஜாக்கள் 8:41-43; ஏசாயா 12:4; எரேமியா 10:25; மல்கியா 3:16 ஆகியவற்றைப்போன்ற வசனங்களைக் கொண்டு விவாதித்துக் காட்டுங்கள்.

மேசியாவைப்பற்றி நீங்கள் கலந்துபேசுகையில்: (1) அவருடைய ஆட்சியின்கீழ் இருக்கப்போகிற எதிர்கால ஆசீர்வாதங்களைப்பற்றி முதலாவது பேசுங்கள். (2) பின்பு தனியொருவரான மேசியாவைக் குறிப்பிட்டுக்காட்டும் வசனங்களின்பேரில் நியாயமெடுத்துக்காட்டிப் பேசுங்கள். (ஆதி. 22:17, 18; சக. 9:9, 10; தானி. 7:13, 14) (3) மேசியாவின் இரண்டு வருகைகளைப் பற்றிப் பேசுங்கள். (தானியேல் 7:13, 14-ஐ தானியேல் 9:24-26-உடன் ஒப்பிட்டு வேறுபாட்டைக் காட்டுங்கள்.) (4) இயேசுவைக் குறிப்பிடுகையில் கடவுளுடைய நோக்கத்தின் படிப்படியான முன்னேற்ற இயல்பை அழுத்திக் காட்டும் சூழ்நிலைப் பொருத்தத்தில் அவ்வாறு செய்யுங்கள். இயேசு போதித்துக்கொண்டிருந்தபோது, இரண்டாவது ஆலயம், இனி ஒருபோதும் திரும்பக் கட்டப்படாதபடி அழிக்கப்பட கடவுள் அனுமதித்த அந்தக் காலம் சமீபித்திருந்ததெனக் குறிப்பிடுங்கள். ஆனால் நியாயப்பிரமாணத்தின் மற்றும் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தையும் விசுவாசமுள்ள ஆட்களை இவை வழிநடத்தப்போகிற மகிமையான எதிர்காலத்தையும் இயேசு அறிவுறுத்தினார்.