Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முழுக்காட்டுதல்

முழுக்காட்டுதல்

முழுக்காட்டுதல்

சொற்பொருள் விளக்கம்: “பப்டைஸ்” என்றச் சொல் “அமிழ்த்துதல், முழுக்குதல்” என்ற அர்த்தமுடைய கிரேக்கச் சொல் பாப்டிஸீன் (ba.pti’zein) என்பதிலிருந்து வருகிறது. (கிரேக்க-ஆங்கில அகராதி, லிட்டல் மற்றும் ஸ்காட் என்பவர்களால் ஆகியது) கிறிஸ்தவ தண்ணீர் முழுக்காட்டு என்பது முழுக்காட்டப்படும் நபர் யெகோவாவின் சித்தத்தைச் செய்ய இயேசுகிறிஸ்துமூலமாக முழுமையான, ஒளிவுமறைவில்லா, மற்றும் நிபந்தனையற்ற ஒப்புக்கொடுத்தலின் வெளிப்படையான அடையாளப்படுத்துதல் ஆகும். மற்றவைகளோடுகூட, யோவான் கொடுத்த முழுக்காட்டு, பரிசுத்த ஆவியினாலான முழுக்காட்டு, அக்கினியாலான முழுக்காட்டு ஆகியவற்றையும் வேதவாக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

கடவுளுடைய வார்த்தையை உண்மையில் நம்புகிறவர்கள் முழுக்காட்டப்படத் தயங்குவார்களா?

மத். 28:19, 20: “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து [முழுக்காட்டி], நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.”

அப். 2:41: “அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் [முழுக்காட்டுதல்] பெற்றார்கள்.”

அப். 8:12: “தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக் குறித்து பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் [முழுக்காட்டுதல்] பெற்றார்கள்.”

அப். 8:36-38: “இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில் தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள், அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் [முழுக்காட்டுதல்] பெறுகிறதற்குத் தடையென்ன என்றான். . . . இரதத்தை நிறுத்தச் சொன்னான். பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான் [முழுக்காட்டினான்].”

கிறிஸ்தவ தண்ணீர் முழுக்காட்டு—தெளிப்பதன்மூலமா அல்லது முழுவதும் முழுக்குவதன் மூலமா?

மாற்கு 1:9, 10: “இயேசு . . . யோர்தான் நதியில் யோனால் ஞானஸ்நானம் பெற்றார் [“நீரில் முழுக்காட்டினான்,” ED, Ro] அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே வானம் திறக்கப்பட்டதையும் . . . கண்டார்.”

அப். 8:38: “பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்; பிலிப்பு அவனுக்கு . . . ஞானஸ்நானம் கொடுத்தான் [“நீரில் முழுக்காட்டினான்,” ED, Ro].”

குழந்தைகளுக்கு பாப்டிஸம் கொடுத்தலை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் செய்தார்களா?

மத். 28:19: “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய் . . . சீஷராக்கி . . . அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து. . .”

அப். 8:12: “பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.”

இருப்பினும், பின்னால், ஆரிஜன் (பொ.ச. 185-254) பின்வருமாறு எழுதினான்: “குழந்தைகளுக்குங்கூட ஞானஸ்நானம் கொடுப்பது சர்ச்சின் பழக்கம்.” (ஆரிஜனின் குறிப்புகள் மற்றும் மத போனைகளிலிருந்து தேர்ந்தெடுப்புகள், சென்னை, இந்தியா; 1929, பக். 211) இந்தப் பழக்கம் மூன்றாவது கார்த்தேஜ் ஆலோசனை சபையால் உண்மை என்று உறுதிசெய்யப்பட்டது (பொ.ச. 253).

மத சரித்திராசிரியன் அகஸ்டஸ் நியாண்டர் பின்வருமாறு எழுதினான்: “விசுவாசமும் ஞானஸ்நானமும் எப்பொழுதும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருந்தன, ஆகவே இந்தக் காலப்பகுதியில் [முதல் நூற்றாண்டில்] குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் பழக்கம் அறியப்படவில்லை என்பது . . . அதிக சாத்தியமாயிருக்கிறது . . . அது அப்போஸ்தலர் காலத்திய பாரம்பரியமென முதன்முதலில் மூன்றாவது நூற்றாண்டில் ஒப்புக்கொண்டது, அது அப்போஸ்தல தோற்றுமூலம் என்பதற்கு எதிரிடையான அத்தாட்சியாக இருக்கிறதேயன்றி, சாதகமான ஒன்றாக இல்லை.”—கிறிஸ்தவ சர்ச் அப்போஸ்தலரால் நாட்டப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டதன் சரித்திரம் (நியு யார்க், 1864), பக். 162.

கிறிஸ்தவ தண்ணீர் முழுக்காட்டு பாவங்கள் மன்னிக்கப்படுவதில் விளைவடைகிறதா?

1 யோவான் 1:7: “அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் . . . அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (ஆகவே முழுக்காட்டுதலுக்கான தண்ணீர் அல்ல, மாறாக, இயேசுவின் இரத்தமே பாவத்திலிருந்து நம்மைச் சுத்திகரிக்கும்.)

மத். 3:11: “மனந்திரும்புதலுக்கென்று நான் [யோவான் ஸ்னன்] உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், எனக்குப் பின் வருகிறவரோ [இயேசு கிறிஸ்து] என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல.” (யோவான் செய்த காரியம் எல்லா ஜனங்களுக்கும் அல்ல, மாறாக யூதர்களுக்கானது என்பதை 5, 6 வசனங்கள் மற்றும் அப்போஸ்தலர் 13:24 காட்டுகின்றன. ஏன்? நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு எதிரான யூதரின் பாவங்களினிமித்தமும், அவர்களைக் கிறிஸ்துவுக்கு ஆயத்தம் செய்யும்பொருட்டும் அவ்வாறு செய்யப்பட்டது.)

அப். 2:38: “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.” (ஞானஸ்நானம் மட்டுமே அவர்களுக்குப் பாவமன்னிப்பைக் கொண்டுவந்ததா? இதைச் சிந்தித்துப்பாருங்கள்: இது கிறிஸ்துவை மரணத்துக்குட்படுத்தினதில் பங்குகொண்ட யூதருக்குச் சொல்லப்பட்டது. [வசனங்கள் 22, 23-ஐப் பாருங்கள்.] அவர்களுடைய ஞானஸ்நானம் ஏதோ ஒன்றுக்கு அத்தாட்சியாயிருந்தது. எதற்கு? அவர்கள் இப்போது இயேசுவை மேசியாவாக, கிறிஸ்துவாக ஏற்று அவரில் விசுவாசம் வைக்கிறார்கள் என்பதற்கே. இதைச் செய்வதன் மூலமே அவர்களுடைய பாவம் மன்னிக்கப்படும். [அப். 4:12; 5:30, 31])

அப். 22:16, NW: “எழுந்து, முழுக்காட்டப்பட்டு அவருடைய பெயரின்பேரில் கூப்பிடுவதன்மூலம் உன் பாவங்கள் நீங்கக் கழுவப்படு.” (மேலும் அப்போஸ்தலர் 10:43)

யார் பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்படுவார்கள்?

1 கொரி. 1:2; 12:13, 27: “கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற . . . அனைவருக்கும் எழுதுகிறதாவது . . . நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். நீங்களே கிறிஸ்துவின் சரீரம்.” (தானியேல் 7:13, 14, 27 காட்டுவதுபோல, அத்தகைய “பரிசுத்தவான்கள்” மனுஷகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பங்குகொள்வார்கள்.)

யோவான் 3:5: “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்.” (ஒருவன் ஆவியினால் முழுக்காட்டப்படுகையில் ‘ஆவியினால் பிறப்பிக்கப்படுகிறான்.’ ஒரு “சிறு மந்தையே” அத்தகைய சிலாக்கியத்தைக் கொண்டிருப்பதாக லூக்கா 12:32 காட்டுகிறது. வெளிப்படுத்துதல் 14:1-3-ஐயும் பாருங்கள்.)

பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்படும் எல்லாரும் அந்நிய பாஷைகளில் பேசுகிறார்களா அல்லது குணமாக்கும் வரத்தை உடையவர்களா?

1 கொரி. 12:13, 29, 30: “எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு . . . எல்லாரும் அப்போஸ்தலர்களா? . . . எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா?”

மேலும் “சுகப்படுத்துதல்” மற்றும் “அந்நிய பாஷைகளில் பேசுவது” ஆகியவற்றைப் பாருங்கள்.

மரித்தோருக்கான ஞானஸ்நானம்’—இதன் பொருளென்ன?

1 கொரி. 15:29: “மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால் மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?”

இங்கு ‘ஆக’ என்று மொழிபெயர்த்துள்ள கிரேக்க முன்னிடைச்சொல் ஹைபர் (hy.per’) “மேலே,” “சார்பாக,” “பதிலாக,” “அந்த நோக்கத்திற்காக” என்றும் பொருள்படுகிறது. (ஒரு கிரேக்க-ஆங்கில அகராதி, லிட்டல் மற்றும் ஸ்ட் இயற்றியது) இந்த வாசகத்தில் இது பொருள்படுவதென்ன? ஞானஸ்நானம் பெறாமல் மரித்த ஆட்களின் சார்பாக உயிருள்ள ஆட்கள் ஞானஸ்நானம் பெறுவதைப் பவுல் குறிப்பிடுகிறானா?

ஞானஸ்நானத்தோடு (முழுக்காட்டுதலோடு) மரணம் சம்பந்தப்படுத்திப் பேசப்படும் மற்ற வேதவசனங்கள் மரித்த இன்னொரு நபருக்காகச் செய்யப்படும் முழுக்காட்டுதலையல்ல, மாறாக அந்த நபர்தானே உட்படும் ஒரு முழுக்காட்டைக் குறிப்பிடுகின்றன

ரோமர் 6:3: “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற [முழுக்காட்டப்பட்ட] நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை [முழுக்காட்டப்பட்டதை] அறியாமலிருக்கிறீர்களா?” (மேலும் மாற்கு 10:38, 39)

கொலோ. 2:12: “[கொலோசே சபையின் உயிருள்ள அங்கத்தினர்களாகிய நீங்கள்] ஞானஸ்நானத்திலே [முழுக்காட்டுதலிலே] அவரோடே அடக்கம் பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை, மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.”

“புதிய உலக மொழிபெயர்ப்பில்” மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இலக்கணரீதியாகத் திருத்தமாயும் இந்த மற்ற பைபிள் மூலவாக்கியங்களோடு ஒத்தும் இருக்கிறது

1 கொரி. 15:29, NW: “மற்றப்படி, மரித்தோராயிருக்கும் நோக்கத்துக்காக முழுக்காட்டப்படுவோர் என்ன செய்வார்கள்? மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவதேயில்லையெனில், அவ்வாறிருக்கும் நோக்கத்துக்காக அவர்கள் ஏன் முழுக்காட்டவும் படுகிறார்கள்?” (ஆகவே அவர்கள் கிறிஸ்துவைப்போல் உத்தமத்தில் மரிக்கும்படி வழிநடத்தும் வாழ்க்கைப்போக்குக்கு பாப்டிஸம் பெறுகிறார்கள் அல்லது முழுக்கப்பட்டு பின்பு அவருக்குச் செய்யப்பட்டதுபோல் ஆவி வாழ்க்கைக்கு எழுப்பப்படுகிறார்கள்.)

அக்கினியில் முழுக்காட்டப்படுவதன் விளைவு என்ன?

லூக்கா 3:16, 17: “அவர் [இயேசு கிறிஸ்து] . . . அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் [முழுக்காட்டுவார்]. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, . . . பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்.” (அதன் அழிவு என்றென்றுமானது.)

மத். 13:49, 50: “இப்படியே உலகத்தின் முடிவிலே [இந்தக் காரிய ஒழுங்குமுறயின் முடிவில், NW] நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்.”

லூக்கா 17:29, 30: “லோத்து சோதாமைவிட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.”

சீஷருக்குரியதாயிருந்த, பரிசுத்த ஆவியினால் முழுக்காட்டப்படுவதும் இதுவும் ஒன்றல்ல

அப். 1:4: “யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான் [முழுக்காட்டினான்]; நீங்கள் [இயேசுவின் உண்மையுள்ள அப்போஸ்தலர்கள்] சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் [முழுக்காட்டப்படுவீர்கள்].”

அப். 2:2-4: “அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. [சூழ்ந்து மூடிக்கொள்ளவில்லை அல்லது முழுக்கவில்லை] அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் [ஆவி, NW] தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.”