Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிறந்தநாள்

பிறந்தநாள்

பிறந்தநாள்

சொற்பொருள் விளக்கம்: ஒருவருடைய பிறந்தநாள் அல்லது அந்த நாளின் ஆண்டுநிறைவு. சில இடங்களில் ஒருவருடைய, விசேஷமாக, ஒரு பிள்ளையினுடைய பிறப்பின் ஆண்டுநிறைவு, விருந்தோடும் வெகுமதிகள் கொடுத்தலோடும் கொண்டாடப்படுகிறது. இது பைபிள்பூர்வமான ஒரு பழக்கம் அல்ல.

பிறந்தநாள் கொண்டாட்டங்களைப்பற்றி பைபிள் குறிப்பிட்டுள்ளவை ஆதரவான நிலையில் அவற்றை வைக்கின்றனவா? பைபிளில் இத்தகைய கொண்டாட்டங்கள் இரண்டே இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றன:

ஆதி. 40:20-22: “மூன்றாம் நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் . . . விருந்துபண்ணி . . . பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; . . . சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான்.”

மத். 14:6-10: “ஏரோதின் ஜென்ம நாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். அதினிமித்தம் அவன்: நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே யோன் ஸ்னனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள். . . . ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோனைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்.”

பைபிளில் இருக்கிற ஒவ்வொன்றும் ஒரு காரணத்திற்காகவே அங்கிருக்கிறது. (2 தீமோ. 3:16, 17) கடவுளுடைய வார்த்தை பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஆதரிக்காதமுறையில் அறிவிப்பதை யெகோவாவின் சாட்சிகள் கவனத்திலேற்று அந்தக் கொண்டாட்டங்களை வெறுத்து ஒதுக்குகின்றனர்.

பூர்வ காலக் கிறிஸ்தவர்களும் பைபிள் காலங்களின் யூதர்களும் பிறந்தநாள் கொண்டாட்டங்களை எவ்வாறு கருதினர்?

“பொதுவாக இந்தக் காலத்திய கிறிஸ்தவர்களின் கருத்துக்களிலிருந்து பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற எண்ணம் தூரவிலகியிருந்தது.”—முதல் மூன்று நூற்றாண்டுகளின்போது, கிறிஸ்தவ மதம் மற்றும் சர்ச்சின் சரித்திரம் (நியு யார்க், 1848), அகஸ்டஸ் நியான்டர் (ஹென்ரி ஜான் ரோஸ் மொழிபெயர்த்தது), பக். 190.

“பிற்காலத்திய எபிரெயர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களை விக்கிரக வணக்கத்தின் பாகமாகக் கருதினர், இந்தக் கருத்து, இந்த நாட்களோடு சம்பந்தப்பட்ட பொதுவான அனுசரிப்புகளைப் பற்றி அவர்கள் கண்டவற்றால் பேரளவாய் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.”—தி இம்ப்பீரியல் பைபிள்-டிக்‍ஷனரி (லண்டன், 1874), பாட்ரிக் ஃபேர்பேரன் பதிப்பித்தது, புத். I, பக். 225.

பிறந்தநாள் கொண்டாட்டங்களோடு சம்பந்தப்பட்ட பிரபலமான பழக்கவழக்கங்களின் ஆரம்பம் என்ன?

“இன்று பலவிதமான பழக்கவழக்கங்களுடன் மக்கள் தங்களுடைய பிறந்தநாட்களைக் கொண்டாடுவது ஒரு நீண்டகால சரித்திரத்தைக் கொண்டுள்ளது. அவற்றின் தோற்றுமூலங்கள் மந்திரம் மற்றும் மதத் துறையிலுள்ளன. வாழ்த்துக்கள் தெரிவித்தல், வெகுமதிகள் கொடுத்தல் மற்றும் கொண்டாட்டம்—எரியவைக்கும் மெழுகுவர்த்திகள் உட்பட—பூர்வ காலங்களில் பிறந்தநாள் கொண்டாடுபவனைப் பேய்களிலிருந்து பாதுகாக்கவும் வரும் ஆண்டில் அவனுடைய பாதுகாப்பை நிச்சயப்படுத்தவும் கருதப்பட்டன. . . . நான்காம் நூற்றாண்டுவரை கிறிஸ்தவம் பிறந்தநாள் கொண்டாடுவதைப் புறமத வழக்கமென விலக்கியது.”—ஸ்கிவாபிஸ்கி ஜீயட்டங் (ஜீயட் மற்றும் உவெல்ட் பத்திரிகை இணைப்பு), ஏப்ரல் 3/4, 1981, பக். 4.

“ஒவ்வொருவருக்கும் ஒரு பாதுகாக்கும் ஆவி அல்லது டேமன் இருந்ததெனவும் அது அந்த நபருடைய பிறப்பின்போது உதவிசெய்து வாழ்க்கையில் அவனைக் காத்ததெனவும், அந்த ஆவி, அந்த நபர் எந்தத் தெய்வத்தின் பிறந்தநாளில் பிறந்தானோ அந்தத் தெய்வத்தின் ஒரு புரிந்துகொள்ளமுடியா உறவில் இருந்தானெவும் கிரேக்கர் நம்பினர். ரோமருங்கூட இந்தக் கருத்துக்கு ஒத்துப்போயினர். . . . இந்தக் கருத்து மனிதரின் நம்பிக்கையாகக் கடத்தப்பட்டு வந்தது மற்றும் இது பாதுகாவல் தூதன், ஆதரிக்கும் தாய்த்தெய்வதை மற்றும் உபகாரி புனிதர் ஆகியவற்றில் பிரதிபலிக்கப்படுகிறது. . . . கேக்குகளின்மேல் மெழுகுவர்த்திகளை எரிப்பது கிரேக்கரிடமிருந்து தோன்றிற்று. . . . நிலா போன்ற வட்ட வடிவமான தேன் கேக்குகள் மெழுகுதிரிப்பட்டைகள் எரியவைத்து [அர்ட்டெமிஸ்] ஆலய பலிபீடங்களின்மேல் வைக்கப்பட்டன. . . . பரம்பரை நம்பிக்கைகளில், பிறந்தநாள் மெழுகுவர்த்திகள், விருப்பங்களை நிறைவேற்றும் விசேஷித்த மந்திர சக்திகள் அளிக்கப்பட்டவையாகக் கருதப்பட்டன, . . . மனிதன் தன் தெய்வங்களுக்குப் பலிபீடங்களை முதன்முதலில் ஏற்படுத்தியது தொங்கி, எரியவைக்கப்பட்ட மெழுகுதிரிப்பட்டைகளும் பலியிடும் நெருப்புகளும் விசேஷித்த மாயை சம்பந்தமான முக்கியத்துவம் உடையனவாக இருந்துவந்தன. இவ்வாறு, பிறந்தநாள் மெழுகுவர்த்திகள் பிறந்தநாள் கொண்டாடப்படும் அந்தப் பிள்ளைக்குக் கனமும் புகழும் கொடுப்பதாகவும் நல்ல அதிஷ்டம் கொண்டுவருவதாகவும் இருக்கின்றன. . . . பிறந்தநாள் வாழ்த்துக்களும், மகிழ்ச்சிக்கான ஆசிகளும் இந்த விடுமுறையின் இயல்பான பாகமாகின்றன. . . . தொக்கத்தில் இந்தக் கருத்து மந்திரத்தில் வேரூன்றியிருந்தது. . . . இந்த நாளில் ஒருவர் ஆவியுலகத்துக்கு வெகு அருகில் இருப்பதால் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நன்மையை அல்லது தீமையைக் கொண்டுவரும் சக்திவாய்ந்தவையாக இருக்கின்றன.”—பிறந்தநாட்களின் ஆய்வு செய்தித் தொகுதி (நியு யார்க், 1952), ரால்ஃப் மற்றும் அடெலின் லின்ட்டன், பக். 8, 18-20.

புசிக்கவும் குடிக்கவும், மகிழ்ந்திருக்கவும் மற்றச் சமயங்களில் குடும்பமும் நண்பர்களும் கூடும் ஆரோக்கியமான கூட்டங்களுக்கு ஆட்சேபனையில்லை

பிர. 3:12, 13: “மகிழ்ச்சியாயிருப்பதும் உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.”

1 கொரிந்தியர் 10:31-ஐயும் பாருங்கள்.