Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மறுபடியும் பிறத்தல்

மறுபடியும் பிறத்தல்

மறுபடியும் பிறத்தல்

சொற்பொருள் விளக்கம்: மறுபடியும் பிறத்தல் என்பது தண்ணீரில் முழுக்காட்டப்படுவதையும் (“தண்ணீரினால் பிறப்பது”) கடவுளுடைய ஆவியினால் பிறப்பிக்கப்படுவதையும் (“ஆவியினால் . . . பிறப்பது”), உட்படுத்துகிறது. இவ்வாறு கடவுளுடைய ஒரு குமாரனாகக் கடவுளுடைய ராஜ்யத்தில் பங்குகொள்ளும் எதிர்பார்ப்பைப் பெறலாம். (யோவான் 3:3-5) இயேசு இந்த அனுபவத்தைப் பெற்றிருந்தார். அவரோடு பரலோக ராஜ்யத்தின் சுதந்தரராயிருக்கும் 1,44,000 பேர் இத்தகைய அனுபவத்தை உடையவராயிருப்பர்.

கிறிஸ்தவர்கள் எவருக்காயினும் “மறுபடியும் பிறப்பது” ஏன் தேவைப்படுகிறது?

ஒரு மட்டுப்பட்ட எண்ணிக்கையான உண்மையுள்ள கிறிஸ்தவர்களை இயேசு கிறிஸ்துவுடன் பரலோக ராஜ்யத்தில் பங்குகொள்ள செய்ய கடவுள் நோக்கங்கொண்டார்

லூக்கா 12:32: “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.”

வெளி. 14:1-3: “பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும் [இயேசு கிறிஸ்துவையும்], அவரோடேகூட . . . இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரையும் நிற்கக்கண்டேன். . . . பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட”வர்கள். (பக்கங்கள் 166, 167-ல் “பரலோகம்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)

மனிதர்கள் மாம்சமும் இரத்தமுமுள்ள உடல்களுடன் பரலோகத்துக்குச் செல்லமுடியாது

1 கொரி. 15:50: “சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.”

யோவான் 3:6: “மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.”

மறுபடியும் பிறந்து,” இவ்வாறு கடவுளுடைய குமாரராகிறவர்களே, பரலோக ராஜ்யத்தில் பங்குகொள்ள முடியும் 

யோவான் 1:12, 13: “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை [இயேசு கிறிஸ்து] ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.” (“அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும்” என்பது கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிற எல்லா மனிதரையும் குறிக்கிறதில்லை. 11-ம் வசனத்தில் காட்டியுள்ளபடி இங்கே குறிப்பிடப்படுவோர் யாரென கவனியுங்கள். [“அவருக்குச் சொந்தமானவர்கள்,” யூதர்கள்]. அதே சிலாக்கியம் மனிதவர்க்கத்தின் மற்றவர்களுக்கும் விரிவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு “சிறு மந்தைக்கு” மட்டுமேயுள்ளது.)

ரோமர் 8:16, 17: “நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே [ஆவிதானே, NW] நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்[றது]. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.”

1 பேதுரு 1:3, 4: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தாத்திரம் உண்டாவதாக; அவர், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். . . . உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.”

அவர்கள் பரலோகத்தில் என்ன செய்வார்கள்?

வெளி. 20:6: “இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”

1 கொரி. 6:2: “பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?”

“மறுபடியும் பிறக்காத” ஒரு நபர் இரட்சிக்கப்படக்கூடுமா?

வெளி. 7:9, 10, 17: “இவைகளுக்குப் பின்பு [“மறுபடியும் பிறந்து” ஆவிக்குரிய இஸ்ரவேலராகி பரலோகத்தில் கிறிஸ்துவுடன் இருக்கப்போகிறவர்களின் எண்ணிக்கையை அப்போஸ்தலன் யோன் கேட்ட பின்பு; ரோமர் 2:28, 29 மற்றும் கலாத்தியர் 3: 26-29-ஐ ஒத்துப்பாருங்கள்] நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். . . . சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே [இயேசு கிறிஸ்து] இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்.”

கிறிஸ்தவ காலத்துக்கு முன்னிருந்த விசுவாசமுள்ள ஆட்களை வரிசையாகக் குறிப்பிட்டபின், எபிரெயர் 11: 39, 40-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.” (“நம்மை” என இங்கே குறிக்கப்டுவோர் யார்? அவர்கள் “பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்கள்” என எபிரெயர் 3:1-ல் காட்டியுள்ளது. எனவே, கிறிஸ்தவ காலத்துக்கு முன்னிருந்த விசுவாசமுள்ள ஆட்கள், பரலோகத்திலல்லாமல் வேறு ஏதோவொரு இடத்தில் பரிபூரண ஜீவனடையும் நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும்.)

சங். 37:29: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”

வெளி. 21:3, 4: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”

ஒருவன் கடவுளுடைய ஆவியைப் பெற்றிருந்தும் “மறுபடியும் பிறவாமல்” இருக்க முடியுமா?

யோவான் ஸ்னனைக் குறித்து, யெகோவாவின் தூதன் பின்வருமாறு கூறினான்: “அவன் . . . தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.” (லூக்கா 1:15) மேலும் இயேசு பின்னால் இவ்வாறு சொன்னார்: “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோன் ஸ் னைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோக ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறான் [ஏன்? ஏனெனில் யோன் பரலோகங்களில் இருக்கப்போவதில்லை ஆகையால் அவன் “மறுபடியும் பிறப்பதற்குத்” தேவையில்லை]. யோன்ஸ்னன் காலமுதல் இதுவரைக்கும் [இயேசு இதைச் சொன்ன சமயம் வரையில்] பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது [மனிதர் நோக்கித் தொரும் இலக்காக இருக்கிறது, NW].”—மத். 11:11, 12.

யெகோவாவின் ஆவி தாவீதின்மீது “செயல்பட்டு” அவனைக்கொண்டு “பேசினது” (1 சாமு. 16:13; 2 சாமு. 23:2, NW), ஆனால் அவன் “மறுபடியும் பிறந்தான்” என பைபிளில் எவ்விடத்திலும் சொல்லவில்லை. அவன் “மறுபடியும் பிறப்ப”தற்குத் தேவையில்லை, ஏனெனில், அப். 2:34-ல் சொல்லியுள்ளபடி: “தாவீது பரலோகத்திற்கு எழுந்து போவில்லையே.”

இன்று கடவுளுடைய ஆவியை உடைய ஆட்களை எது அடையாளங்காட்டுகிறது?

பக்கங்கள் 381, 382-ல், “ஆவி” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘நான் மறுபடியும் பிறந்திருக்கிறேன்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘அப்படியென்றால், நீங்கள் ஒரு நாள் கிறிஸ்துவுடன் பரலோகத்தில் இருக்கும்படி எதிர்பார்ப்பதை அது குறிக்கிறதா? . . . பரலோகத்துக்குப் போகிறவர்கள் அங்கே என்ன செய்வார்களென நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘அவர்கள் அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும், கிறிஸ்துவுடன் ஆட்சிசெய்வார்கள். (வெளி. 20:6; 5:9, 10) இவர்கள் வெறுமென ஒரு “சிறு மந்தை”யாகவே இருப்பார்களென்று இயேசு சொன்னார். (லூக்கா 12:32)’ (2) ‘அவர்கள் அரசர்களாயிருந்தால், அவர்கள் ஆளுவதற்குக் குடிமக்களும் இருக்கவேண்டும். இவர்கள் யாராயிருப்பர்? . . . இங்கே சில குறிப்புகள் இருக்கின்றன, இவற்றை என் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது என் அக்கறையை இவை வெகுவாய்க் கவர்ந்தன. (சங். 37:11, 29; நீதி. 2:21, 22)’

‘நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா?’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘“மறுபடியும் பிறத்தலைப்” பற்றி மக்கள் கொண்டுள்ள கருத்து எப்பொழுதும் ஒரேமாதிரியாக இல்லையென நான் காண்கிறேன். அது உங்களுக்குக் குறிப்பதென்னவென்று நீங்கள் எனக்குச் சொல்வீர்களா?’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘நான் இயேசுவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேனாவென நீங்கள் அறிய விரும்புகிறீர்கள், சரிதானே? இதற்குப் பதில் ஆம் என நான் உங்களுக்கு உறுதிகூறுகிறேன்; மற்றப்படி நான் உங்களிடம் இயேசுவைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கமாட்டேன்.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘ஆனால் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதைப் பற்றி நான் சிந்திக்கையில், அந்த ஆவி இருப்பதன் அத்தாட்சி கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டும் பலரில் வருந்தத்தக்கதாய்க் காணப்படாதிருப்பதை நான் காண்கிறேன். (கலா. 5:22, 23)’ (2) ‘இந்தத் தெய்வீகப் பண்புகளை எல்லாரும் பிரதிபலித்தால் இந்தப் பூமியில் வாழ்வதில் மகிழ்ச்சியடைவீர்களா? (சங். 37:10, 11)’

பயன்படுத்தக்கூடிய இன்னொரு முறை:  ‘நீங்கள் இவ்வாறு கேட்பதில், “நான் கிறிஸ்துவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்டேனா?” என்று பொருள்கொள்கிறீர்களென்றால், அதற்குப் பதில் ஆம் என்பதே. யெகோவாவின் சாட்சிகள் எல்லாரும் அவ்வாறு செய்திருக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு, மறுபடியும் பிறப்பது அதைப் பார்க்கிலும் மிக அதிகத்தை உட்படுத்துகிறது.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘மறுபடியும் பிறத்தலைப்பற்றி இயேசு பேசினபோது கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு, அதாவது, அவருடைய பரலோக அரசாங்கமாகிய, கடவுளுடைய ராஜ்யத்தின் பாகமாயிருப்பதற்கு அது தேவையென சொன்னார். (யோவான் 3:5)’ (2) ‘கடவுளுடைய சித்தத்தைச் செய்யும் பலர், அந்த ராஜ்யத்தின் மகிழ்ச்சியுள்ள குடிமக்களாக, இங்கே பூமியில் வாழ்வார்களெனவும் பைபிள் காட்டுகிறது. (மத். 6:10; சங். 37:29)’

கூடுதலான யோ னை: பரலோக வகுப்பைச் சேர்ந்தவர்கள் பின்வருமாறு விடையளிக்கலாம்: ‘ஆம், நான் அவ்வாறிருக்கிறேன். ஆனால், நம்முடைய நிலையைக் குறித்து மிதமிஞ்சிய தன்னம்பிக்கைக்கொண்டிருக்க வேண்டாமென பைபிள் நம்மெல்லாரையும் எச்சரிக்கிறது. கடவுளும் கிறிஸ்துவும் நமக்குக் கட்டளையிடுவதை நாம் உண்மையில் செய்துகொண்டிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள நாம் நம்மை விடாமல் தொர்ந்து சோதித்தாராய்ந்து வரவேண்டும். (1 கொரி. 10:12)’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘இயேசு தம்முடைய உண்மையான சீஷர்கள்மீது என்ன பொறுப்பை வைத்தார்? (மத். 28:19, 20; 1 கொரி. 9:16)’