Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூமி

பூமி

பூமி

சொற்பொருள் விளக்கம்: “பூமி” என்றச் சொல் வேத எழுத்துக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தில் பயன்படுத்தியுள்ளது. பொதுவாய் இது இந்தக் கிரகத்தைத்தானே குறிப்பதாக நாம் எண்ணுகிறோம், இதை யெகோவா, நம்முடைய வாழ்க்கையை மிக நிறைவாய்த் திருப்திசெய்யும் நோக்கத்தோடு மனித வாழ்க்கையை ஆதரித்துவரக்கூடும்படி மிகத் தயாளத்துடன் அளித்தார். எனினும், “பூமி” என்பது அடையாளக்குறிப்பான கருத்திலும், உதாரணமாக, இந்தக் கிரகத்தில் வாழும் ஜனங்களை, அல்லது வேறுபடுத்திக் காட்டும் குறிப்பிட்ட பண்புகளுடைய ஒரு மனித சமுதாயத்தைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படலாமென்பதையும் தெளிவாக அறியவேண்டும்.

இந்தக் கிரக பூமி அணுசக்தி போரில் அழிக்கப்படுமா?

இந்தப் பூமியைக் குறித்தக் கடவுளுடைய நோக்கத்தைப்பற்றி பைபிள் என்ன காட்டுகிறது?

மத். 6:10: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.”

சங். 37:29: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”

பிரசங்கி 1:4; சங்கீதம் 104:5 ஆகியவற்றையும் பாருங்கள்.

தேசங்கள் கடவுளுடைய நோக்கங்களுக்கு மதிப்புக் காட்டாததால், எவ்வாறாயினும் இந்தப் பூமியைக் குடியிருப்புக்குத் தகாதபடி முற்றிலும் கெடுத்துப்போடுவார்களென்ற சாத்தியம் இருக்கிறதா?

ஏசா. 55:8-11, தி.மொ.: “இது யெகோவாவின் திருவாக்கு. பூமியிலும் வானம் உயர்ந்திருப்பதுபோல உங்கள் வழிகளிலும் என் வழிகளும் உங்கள் நினைவுகளிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கின்றன, . . . என் வாயிலிருந்து வரும் வசனமும் . . . அது வெறுமையாய் என்னிடம் திரும்பாமல் அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றுகிறது.”

ஏசா. 40:15, 26: “இதோ, [யெகோவா தேவனின் நோக்குநிலையிலிருந்து] ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும் எண்ணப்படுகிறார்கள்; . . . உங்கள் கண்களை ஏறெடுத்துப் [சூரியனையும், சந்திரனையும், கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும்] பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.” (தேசங்கள் உற்பத்திசெய்துள்ள அணுசக்தி போர்த்தளவாட வலிமை மனிதருக்குப் பயத்தை உண்டுபண்ணுகிறது. ஆனால் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் நம்முடைய புரிந்துகொள்ளும் திறமைக்கு அப்பாற்பட்ட அளவில் அணுசக்தியைப் பயன்படுத்துகின்றன. இந்த வானொளிக் கோங்கள் யாவற்றையும் யார் சிருஷ்டித்தார் மற்றும் கட்டுப்படுத்துகிறார்? அவருடைய நோக்கத்தைத் தடுக்கும் முறையில் தேசங்கள் தங்கள் அணுசக்தி போர்த்தளவாடங்களைப் பயன்படுத்துவதிலிருந்து அவர் அவர்களைத் தடுக்க முடியாதா? கடவுள் இவ்வாறு செய்வாரென்பது, பார்வோன் இஸ்ரவேலின் விடுதலையைத் தடுக்கத் தேடினபோது எகிப்தின் இராணுவ வல்லமையை அவர் அழித்ததில் ஒப்பனையாக விளக்கிக் காட்டப்பட்டிருக்கிறது.—யாத். 14:5-31.)

வெளி. 11:17, 18: “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய [யெகோவாவாகிய, NW] தேவனே, உம்மை ஸ்தாத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்பாம்பண்ணுகிறீர். ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோம் மூண்டது; . . . பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது.”

கடவுள்தாமே இந்தப் பூமியை அக்கினியினால் அழிப்பாரா?

2 பேதுரு 3:7, 10 (UV) இந்தக் கருத்தை ஆதரிக்கிறதா? “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. . . . கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம் (“எரிந்துபோம்,” RS, JB; “மறைந்துபோகும்,” NE, TEV; “வெளிப்படச் செய்யப்படும்,” NAB; “வெளியாக்கப்படும்,” NE; “கண்டுபிடிக்கப்படும்,” NW) (கவனக்குறிப்பு: இரண்டும் பொ.ச. 4-ம் நூற்றாண்டுக்குரிய கோடெக்ஸ் சினியாட்டிகஸ் மற்றும் வாட்டிக்கன் கையெழுத்துப்பிரதி 1209, ஆகியவற்றில் “கண்டுபிடிக்கப்படும்,” என்றிருக்கிறது. பிந்திய கையெழுத்துப்பிரதிகளாகிய, 5-ம் நூற்றாண்டு கோடக்ஸ் அலெக்ஸாந்திரினஸ் மற்றும் 16-வது நூற்றாண்டு கிளெமென்டைன் திருத்திய வல்கேட், ஆகியவற்றில் “எரிக்கப்பட்டுப்போகும்,” என்றிருக்கிறது.)

நம்முடைய கிரகம் அழிக்கப்படுமென்று வெளிப்படுத்துதல் 21:1 (UV) காட்டுகிறதா? “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.”

திருத்தமாயிருக்க, இந்த வசனங்களின் விளக்கம் சூழமைவுடனும் பைபிளின் மீதிபாகத்துடனும் ஒத்திருக்கவேண்டும்

இந்த வசனங்கள் (2 பேதுரு 3:7, 10-ம் வெளிப்படுத்துதல் 21:1-ம்) சொல்லர்த்தமான இந்தக் கிரக பூமி அக்கினியால் எரிக்கப்படவிருக்கிறதென பொருள்கொண்டால், அப்பொழுது சொல்லர்த்தமான வானங்களுங்கூட (நட்சத்திரங்களும் மற்ற வானொளிக் கோங்களும்) அக்கினியினால் அழிக்கப்பட வேண்டும். எனினும், இத்தகைய சொல்லர்த்தமான கருத்து, மத்தேயு 6:10, சங்கீதம் 37:29 மற்றும் 104:5, மேலும் நீதிமொழிகள் 2:21, 22 போன்ற இத்தகைய வசனங்களில் அடங்கியுள்ள வாக்குறுதிக்கு முரண்படுகிறது. மேலும், ஏற்கெனவே மிகக் கடும் வெப்பநிலையிலுள்ள சூரியனின் மற்றும் நட்சத்திரங்களின்மீது அக்கினி எம்முறையில் பாதிக்கும்? ஆகையால் முன் எடுத்துக்குறிப்பிட்ட வசனங்களில் “பூமி” என்ற சொல் வேறுபட்ட கருத்தில் விளங்கிக்கொள்ளப்படவேண்டும்.

ஆதியாகமம் 11:1, ஒன்று ராஜாக்கள் 2:1, 2, ஒன்று நாளாகமம் 16:31, சங்கீதம் 96:1, முதலியவற்றில், “பூமி” என்ற சொல் அடையாளக் குறிப்பான கருத்தில் பயன்படுத்தியிருக்கிறது, மனிதவர்க்கத்தை, மனித சமுதாயத்தைக் குறிக்கிறது. 2 பேதுரு 3:7, 10-லும் வெளிப்படுத்துதல் 21:1-லும் அவ்வாறு இருக்கக்கூடுமா?

அதன் சூழமைவில், 2 பேதுரு 3:5, 6-ல் (2:5, 9-லுங்கூட), நோவாவின் நாளின் ஜலப்பிரளயத்தோடு ஓர் இணைவுப்பொருத்தம் காட்டப்படுவதைக் கவனியுங்கள், அதில் பொல்லாத மனித சமுதாயம் அழிக்கப்பட்டது, ஆனால் நோவாவும் அவனுடைய குடும்பத்தினரும் பாதுகாக்கப்பட்டனர், மேலும் இந்தப் பூகோளம்தானேயும் பாதுகாக்கப்பட்டதென்பதைக் கவனியுங்கள். அவ்வாறே அழிக்கப்படவிருப்பவர்கள் “தேவபக்தியில்லாதவர்கள்,” என்று 2 பேதுரு 3:7-ல் சொல்லியிருக்கிறது. மேலே எடுத்துக் குறிப்பிடப்பட்ட வசனங்களில் விளக்கிக் காட்டியுள்ளபடி, இங்கே “பூமி” என்பது பொல்லாத மனித சமுதாயத்தைக் குறிப்பிடுகிறதென்ற கருத்து பைபிளின் மற்ற எல்லாப் பாகத்தோடும் முற்றிலும் ஒத்திருக்கிறது. இந்த அடையாளக்குறிப்பான “பூமி,” அல்லது பொல்லாத மனித சமுதாயமே, “கண்டுபிடிக்கப்பட்டது”; அதாவது, அக்கினியால் தீய்ப்பதுபோல் யெகோவா அதன் எல்லாப் பொய்த்தோற்றங்களையும் தீய்த்து விலக்கி, தேவபக்தியற்ற மனித சமுதாயத்தின் அக்கிரமத்தை வெளிப்படவைத்து, அது முழுமையான அழிவுக்குத் தகுந்ததெனக் காட்டுவார். அந்தப் பொல்லாத மனித சமுதாயமே “வெளிப்படுத்துதல் 21:1-ல் குறிப்பிட்டுள்ள அந்த “முந்தின பூமி”யாகும். (UV).

பொருத்தமாகவே, லூக்கா 21:33-லுள்ள இயேசுவின் சொற்களை (“வானமும் பூமியும் ஒழிந்துபோம், . . . ”) லூக்கா 16:17-லுள்ள இணையான கூற்றின் (“பார்க்கிலும் வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்”) துணைகொண்டு புரிந்துகொள்ளவேண்டும், இவை இரண்டும், அளிக்கப்பட்ட நிலைமைகளின் நடக்கமுடியாதத் தன்மையை வெறுமென அறிவுறுத்துகின்றன.—மத்தேயு 5:18-ஐயும் பாருங்கள்.

நீதிமான்கள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பொல்லாதவர்கள் அழிக்கப்பட்ட பின்பு பூமிக்குத் திரும்ப அனுப்பப்படுவார்களா?

வெளிப்படுத்துதல் 21:2, 3 இந்தக் கருத்தை ஆதரிக்கிறதா? அதில் சொல்லியிருப்பதாவது: “நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இரு[ப்பார்] . . . என்று விளம்பினது.” (கடவுள் மனிதவர்க்கத்துடன் “வாசமாயிருப்பார்,” “அவர்களோடேகூட இருப்பார்,” என்ற இந்த உண்மை அவர் மாம்ச ஆளாவாரென்று பொருள்படுகிறதா? அவ்வாறு இருக்கமுடியாது, ஏனென்றால் யெகோவா மோசயினிடம்: “ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிரான்,” என்று சொன்னார். [யாத். 33:20, தி.மொ.] அப்படியானால், இதற்கிசைய, புதிய எருசலேமின் உறுப்பினர் மாம்ச உடலுள்ள ஆட்களாக பூமிக்குத் திரும்பிவருவதில்லை. அப்படியானால், என்ன கருத்தில், கடவுள் மனிதவர்க்கத்தோடே “கூட” இருக்க முடியும் மற்றும் புதிய எருசலேம் எவ்வாறு ‘பரலோகத்தைவிட்டு இறங்கிவரும்’? ஆதியாகமம் 21:1-ல், (NW) சந்தேகமில்லாமல் ஒரு குறிப்பு காணப்படுகிறது, அங்கே கடவுள் சாராளைச் “சந்தித்து,” அவளுடைய முதிர்வயதிலே அவளுக்கு ஒரு குமாரனைத் தந்து ஆசீர்வதித்தார் என்று சொல்லியிருக்கிறது. யாத்திராகமம் 4:31-ல், மோசயை விடுதலைசெய்பவனாக அனுப்புவதன்மூலம் கடவுள் இஸ்ரவேல் புத்திரரைச் “சந்தித்தார்” என்று நமக்குச் சொல்லியிருக்கிறது. லூக்கா 7:16-ல் இயேசுவின் ஊழியத்தின்மூலம் கடவுள் தம்முடைய ஜனத்தைச் “சந்தித்தார்” என்று சொல்லியிருக்கிறது. [இவை தமிழ் UV-லிருந்து குறிப்பிடப்பட்டன, தமிழ் கத்தோலிக்க பைபிளிலும் அவ்வாறிருக்கிறது] மற்ற மொழிபெயர்ப்புகள் கடவுள் தம்முடைய ஜனத்தினிடம் “தம்முடைய கவனத்தைத் திருப்பினார்” [NW] அல்லது அவர்களுக்காக ‘அக்கறை காட்டினார்’ [NE] என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றன. ஆகையால் வெளிப்படுத்துதல் 21:2, 3, கடவுள், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு அதன்மூலம் ஆசீர்வாதங்கள் வரப்போகிற பரலோகப் புதிய எருசலேமின் மூலம், மனிதவர்க்கத்தைச் ‘சந்திப்பார்,’ அல்லது அவர்களுடன் இருப்பார் என்று பொருள்படவேண்டும்.)

நீதி. 2:21, 22, UV: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் [“குற்றமற்ற மனிதர்கள்,” NE] அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.” (குற்றமற்றவர்கள் பூமிக்குத் திரும்பிவருவார்கள் என்று சொல்லப்படுகிறதில்லை, ஆனால் அவர்கள் “அதிலே தங்கியிருப்பார்கள்,” என்றே சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்.)

பூமியைக் குறித்த கடவுளுடைய ஆதி நோக்கம் மாறிவிட்டதா?

ஆதி. 1:27, 28: “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.” (இவ்வாறு இந்தப் பூமி ஆதாம் ஏவாளின் சந்ததியாரால் நிரப்பப்பட்டு அவர்கள் ஒரு பூகோளப் பரதீஸைக் கவனித்துக்கொள்வோராக இருக்கவேண்டுமென்ற தம்முடைய நோக்கத்தைக் கடவுள் தெரிவித்தார். இந்தப் பூமியை மனிதரின் குடியிருப்புக்காக மிகச் சிறப்புவாய்ந்த முறையில் திட்டமிட்டமைத்து, மனிதன் தன் தொலைநோக்கிகளையும் விண்வெளி விசையூர்திகளையும் கொண்டு கூர்ந்துநோக்கியுள்ள எல்லாக் கிரகங்களிலும் அதைத் தனித்தன்மைவாய்ந்ததாக்கினபின், சிருஷ்டிகர் தம்முடைய நோக்கத்தை வெறுமென கைவிட்டு, ஆதாமின் பாவத்தினிமித்தம் அது என்றென்றும் நிறைவேற்றப்படாதபடி அதை விட்டுவிட்டாரா?)

ஏசா. 45:18, தி.மொ.: “வானங்களைச் சிருஷ்டித்தவரும், கடவுளாயிருப்பவரும் பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்துபடைத்து அதை உருவாக்கி நிலைப்படுத்தினவருமாகிய யெகோவா சொல்வதைக் கேளுங்கள்; நானே யெகோவா, வேறொருவருமில்லை.” (ஏசாயா 55:10, 11-ஐயும் பாருங்கள்.)

கடவுளுடைய புதிய ஒழுங்கில் ஒருவரும் ஒருபோதும் மரிப்பதில்லையெனில் எல்லா ஜனங்களுக்கும் பூமியில் எவ்வாறு இடமிருக்கும்?

பூமியைக் குறித்தத் தம்முடைய நோக்கத்தைக் கடவுள் வெளிப்படுத்திக் கூறினபோது அவர் பின்வருமாறு சொன்னதை மனதில் வையுங்கள்: ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.’ (ஆதி. 1:28) பிள்ளைகளைப் பிறப்பிக்கும் திறமையைக் கடவுள் மனிதனுக்குக் கொடுத்தார், மேலும் இதைக் குறித்தத் தம்முடைய நோக்கம் நிறைவேற்றப்பட்டுத் தீரும்போது பூமியில் பிள்ளைகளைப் பிறப்பிப்பது நின்றுபோகும்படி அவர் செய்ய முடியும்.

என்ன வகையான ஆட்களுக்குப் பூமியில் முடிவற்ற வாழ்க்கையைக் கடவுள் தயவுகூருவார்?

செப். 2:3, தி.மொ.: “தேசத்திலுள்ள [பூமியிலுள்ள, NW] எல்லாச் சிறுமையானவர்களே, [மனத்தாழ்மையுள்ளவர்களே, NW] யெகோவாவின் நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் [யெகோவாவைத்] தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.”

சங். 37:9, 11: “கர்த்தருக்குக் [யெகோவாவுக்குக், தி.மொ.] காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”