Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மதம்

மதம்

மதம்

சொற்பொருள் விளக்கம்:  ஒரு வகையான வணக்கம். இது மத மனப்பான்மைகள், நம்பிக்கைகள், மற்றும் செயல்முறைகளின் ஓர் ஒழுங்குமுறையை உட்படுத்துகிறது; இவை தனி ஆளுக்குரியவையாயிருக்கலாம், அல்லது ஓர் அமைப்பால் ஏற்படுத்தியவையாயிருக்கலாம். பொதுவாய் மதம் கடவுளில் அல்லது பல கடவுட்களில் நம்பிக்கையை உட்படுத்துகிறது; அல்லது அது மனிதர்களை, பொருட்களை, ஆசைகளை, அல்லது சக்திகளை வணக்கத்துக்குரிய பொருட்களாகப் பாவித்து நடத்துகிறது. பெரும்பான்மையான மதம் இயற்கையை மனிதர் ஆராய்வதன்பேரில் ஆதாரங்கொள்ள செய்யப்பட்டிருக்கிறது; வெளிப்படுத்தப்பட்ட மதமும் உண்டு. உண்மையான மதமும் பொய் மதமும் உண்டு.

இத்தனை பல மதங்கள் இருப்பதேன்?

சமீபத்தில் கணக்கிட்டுப் பார்த்ததில், 10 பெரும் பகுதி மதங்களும் ஏறக்குறைய 10,000 உட்பிரிவுகளும் இருக்கின்றனவென முடிவுசெய்தனர். இவற்றில், ஏறக்குறைய 6,000 ஆப்பிரிக்காவிலும், 1,200 ஐக்கிய மாகாணங்களிலும், நூற்றுக்கணக்கானவை மற்ற நாடுகளிலும் இருக்கின்றன.

புதிய மதத் தொகுதிகள் தோன்றுவதற்குப் பல காரியங்கள் காரணங்களாயிருந்துள்ளன. பல்வேறு மதங்கள் யாவும் வெவ்வேறு வழிகளில் மத சத்தியத்தை அளிக்கின்றனவென சிலர் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுடைய போகங்களையும் நடவடிக்கைகளையும் பைபிளோடு ஒத்துப் பார்க்கையில், அதற்குமாறாக, ஜனங்கள் கடவுளுக்குச் செவிகொடுப்பதற்குப் பதில் மனிதரைப் பின்பற்றுவோரானதனால் இத்தனை பலவகை மதங்கள் ஏற்பட்டதற்குக் காரணமென காட்டுகிறது. அவர்கள் பொதுவில் ஒன்றாய்க் கடைப்பிடிப்பவையும் ஆனால் பைபிளிலிருந்து வேறுபடுபவையுமான அவர்களுடைய போகங்கள், பேரளவில் பூர்வ பாபிலோனிலிருந்து தொங்கியவை என்பது கவனிக்கத்தக்கது. (50, 51-ம் பக்கங்களில் “மகா பாபிலோன்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)

இத்தகைய மதக் குழப்பத்தைத் தூண்டிவிட்டவன் யார்? பிசாசாகிய சாத்தானே “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுள்” என பைபிள் அடையாளங்காட்டுகிறது. (2 கொரி. 4:4, NW) “அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று” அது நம்மை எச்சரிக்கிறது. (1 கொரி. 10:20) அப்படியானால், வானத்தையும் பூமியையும் படைத்த சிருஷ்டிகராகிய மெய்யான கடவுளையே நாம் உண்மையில் வணங்குகிறோமெனவும், நம்முடைய வணக்கம் அவருக்குப் பிரியமாயுள்ளதெனவும் நிச்சயப்படுத்திக்கொள்வது எவ்வளவு மிக அதிக முக்கியம்!

எல்லா மதங்களும் கடவுளுக்கு ஏற்கத்தகுந்தவையா?

நியா. 10:6, 7, தி.மொ.: “இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, பாகால்களையும், அஷ்தோரேத்துக்களையும் சீரியாவின் தேவர்களையும் சீதோனின் தேவர்களையும் மோபின் தேவர்களையும் அம்மோன் புத்திரரின் தேவர்களையும் பெலிஸ்தியரின் தேவர்களையும் சேவித்தார்கள்; அவர்கள் யெகோவாவைச் சேவியாமல் அவரைவிட்டு விலகிப்போனார்கள். அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோமூண்”டார். (வானத்தையும் பூமியையும் படைத்த சிருஷ்டிகராகிய உண்மையான கடவுளையல்லாமல் வேறு எந்தப் பொருளையோ ஆளையோ ஒருவன் வணங்கினால், அவனுடைய வகையான வணக்கம் யெகோவாவுக்கு ஏற்கத்தகுந்ததாயில்லை என்பது தெளிவாயிருக்கிறது.)

மாற்கு 7:6, 7: “அவர்களுக்கு [யூத பரிசேயர், மற்றும் சதுசேயர்களுக்கு] அவர் [இயேசு] பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிற பிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். . . . என்றார்.” (ஒரு தொகுதி யாரை வணங்குவதாக உரிமை கொண்டாடினாலும் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தைக்குப் பதில் மனிதரின் கோட்பாடுகளைக் கடைப்பிடித்து வந்தால், அவர்களுடைய வணக்கம் வீணே.)

ரோமர் 10:2, 3, தி.மொ.: “சகோதரரே, அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் கடவுளை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாம். அவர்கள் தெய்வ வைராக்கியமுள்ளவர்களென்று அவர்களைக் குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; அதுவோ முற்றறிவோடுகூடிய [திருத்தமான அறிவின்படியான, NW] வைராக்கியமல்ல; எப்படியென்றால், அவர்கள் கடவுளின் நீதியையறியாமல் தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தப்பார்த்துக் கடவுளின் நீதிக்குக் கீழ்ப்படியாதே போனார்கள்.” (ஆட்கள் கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையை வைத்திருக்கலாம் ஆனால் அதில் அடங்கியுள்ளவற்றைப்பற்றிய திருத்தமான அறிவு அவர்களுக்கு ஒருவேளை இராது, ஏனெனில் அவர்கள் சரியாய்க் கற்பிக்கப்பவில்லை. தாங்கள் கடவுளுக்காக வைராக்கியமுள்ளவர்களென அவர்கள் உணரலாம், ஆனால் அவர் கட்டளையிடுபவற்றை அவர்கள் செய்யாதிருக்கலாம். அவர்களுடைய வணக்கம் கடவுளுக்குப் பிரியமாய் இருக்கப்போவதில்லையல்லவா?)

எல்லா மதங்களிலும் நல்லது இருக்கிறதென்பது உண்மையா?

ஒருவன் பொய்ச் சொல்லக்கூடாது அல்லது திருடக்கூடாது, போன்றவற்றைப் பெரும்பான்மையான மதங்கள் போதிக்கின்றன. ஆனால் அது போதுமா? ஒரு குவளை நச்சுக் கலந்தத் தண்ணீரை, அதில் உங்களுக்குக் கிடைக்கும் பெரும்பாகம் தண்ணீரே என ஒருவர் உங்களுக்கு உறுதிகூறினதனால் அதை மகிழ்ச்சியுடன் நீங்கள் குடிப்பீர்களா?

2 கொரி. 11:14, 15: “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே.” (சாத்தானிலிருந்து தொங்கும் எல்லாம் வெறுப்பூட்டுபவையாய்த் தோன்றாதென இங்கே நமக்கு எச்சரிப்புக் கொடுத்துள்ளது. மனிதவர்க்கத்தை மோம்போக்குவதற்கு அவன் பயன்படுத்தும் முக்கிய முறைகளில் ஒன்றாக இருந்துவந்திருப்பது எல்லா வகைகளுமடங்கிய பொய் மதமாகும், இவற்றில் சிலவற்றிற்கு அவன் நீதியுள்ள தோற்றத்தைக் கொடுக்கிறான்.)

2 தீமோ. 3:2, 5: “மனுஷர்கள் . . . தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.” (வணக்கத்தில் நீங்கள் ஒன்றுசேர்ந்திருக்கும் ஆட்கள், கடவுளை நேசிப்பதாகத் தங்கள் வெளித்தோற்றத்துக்குப் பாவனைசெய்துகொண்டாலும், அவருடைய வார்த்தையைத் தங்கள் சொந்த வாழ்க்கையில் உள்ளப்பூர்வமாய்ப் பொருத்திப் பயன்படுத்தாவிடில், அத்தகைய கூட்டுறவை விட்டு விலகும்படி பைபிள் உங்களைத் துரிதப்படுத்துகிறது.)

ஒருவன் தன் பெற்றோரின் மதத்தை விட்டுவிடுவது சரியா?

உண்மையில் பைபிளிலிருந்ததையே நம்முடைய பெற்றோர் நமக்குக் கற்பித்திருந்தால், நாம் அதை விடாமல் பற்றிக்கொண்டிருக்கவேண்டும். அவர்களுடைய மத நடவடிக்கைகளும் நம்பிக்கைகளும் கடவுளுடைய வார்த்தைக்கு ஒத்தில்லையென நாம் தெரிந்துகொள்கையிலும் நம்முடைய பெற்றோர் நம் மரியாதைக்கு உரிமையுடையவர்கள். ஆனால் உங்கள் பெற்றோரின் ஏதோ பழக்கம் சுக ஆரோக்கியத்துக்குக் கேடுண்டாக்கி ஒருவரின் வாழ்க்கையைக் குறுக்கிப்போடுமென உங்களுக்குத் தெரியவந்தால் என்ன செய்வீர்கள்? அவர்களுடைய பழக்கத்தை நீங்கள் பின்பற்றி உங்கள் பிள்ளைகளையும் அவ்வாறு செய்யும்படி ஊக்கப்படுத்துவீர்களா, அல்லது நீங்கள் தெரிந்துகொண்டதை மரியாதையோடு அவர்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா? அவ்வாறே பைபிள் சத்தியங்களைப்பற்றிய அறிவு பொறுப்பைக் கொண்டுவருகிறது. கூடுமானால், நாம் கற்பதைக் குடும்ப உறுப்பினரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். நாம் ஒரு தீர்மானத்தைச் செய்ய வேண்டும்: நாம் உண்மையில் கடவுளை நேசிக்கிறோமா? நாம் கடவுளுடைய குமாரனுக்கு உண்மையில் கீழ்ப்படிய விரும்புகிறோமா? நாம் அவ்வாறு செய்வதற்கு நம் பெற்றோரின் மதத்தை விட்டுவிட்டு உண்மையான வணக்கத்தை ஏற்கத் தேவைப்படலாம். நம்முடைய பெற்றோரின்பேரில் நாம் கொண்டுள்ள பற்று, கடவுளின்பேரிலும் கிறிஸ்துவின்பேரிலுமுள்ள நம்முடைய அன்பைப் பார்க்கிலும் அதிகமாயிருக்க அனுமதிப்பது நிச்சயமாகவே சரியல்ல, அல்லவா? இயேசு பின்வருமாறு கூறினார்: “தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல, மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.”—மத். 10:37.

யோசு. 24:14, தி.மொ.: “நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து குற்றமற்றவர்களாய் உண்மையோடு அவரைச் சேவித்து உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு யெகோவாவைச் சேவியுங்கள்.” (இது அவர்களுடைய முற்பிதாக்களின் மதத்திலிருந்து ஒரு மாற்றத்தைக் குறித்ததல்லவா? யெகோவாவை அவர் ஏற்கத்தகுந்த முறையில் சேவிக்க, அத்தகைய மதத்தில் பயன்படுத்தின எந்தச் சிலைகளையும் அவர்கள் விலக்கிப்போட்டு அவற்றிற்கான எந்த ஆசையையும் நீக்கித் தங்கள் இருதயங்களைச் சுத்திகரிக்கவேண்டும்.)

1 பேதுரு 1:18, 19: “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.” (ஆகையால், பூர்வ கிறிஸ்தவர்கள் தங்கள் முற்பிதாக்களின் பாரம்பரியங்களிலிருந்து விலகினார்கள், அந்தப் பாரம்பரியங்கள் அவர்களுக்கு நித்திய ஜீவனை ஒருபோதும் கொடுக்க முடியாது. கிறிஸ்துவின் பலிக்காக அவர்களுக்கிருந்த நன்றியறிதல், தங்கள் வாழ்க்கையைப் பயனற்றதாக்கின, மேலும் கடவுளைத் தாங்கள் கனப்படுத்தாததனால் அர்த்தமற்றதாக்கின எதையும் ஒழித்துப்போட அவர்களை ஆர்வமுள்ளவர்களாக்கிற்று. நாமும் அதே மனப்பான்மையுடையோராய் இருக்கவேண்டுமல்லவா?)

கலப்பு விசுவாசத்தைப் பற்றி பைபிளின் கருத்து என்ன?

நீதிமான்கள்போல் பாசாங்குசெய்து ஆனால் கடவுளை அவமதித்த மதத் தலைவர்களை இயேசு எவ்வாறு கருதினார்? “இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். . . . நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள், உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. . . . நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.”யோவான் 8:42-47.

கடவுள் கண்டனம் செய்பவற்றைத் தாங்கள்தாமே பழக்கமாய்ச் செய்து வருவோரை அல்லது அத்தகைய செயல்களைக் கண்டுங்காணாதிருப்போரைத் தம்முடைய ஊழியர்கள் மத-சகோதரத்துவத்துக்குள் சேர்த்துக்கொண்டால் அது கடவுளுக்கும் அவருடைய நீதியுள்ள தராதரங்களுக்கும் உண்மைத்தவறா பற்றுறுதியைக் காட்டுவதாகுமா? “சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக் கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. . . . வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரி. 5:11; 6:9, 10) “உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” (யாக். 4:4) “யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையைப் பகையுங்கள்; அவர் தமது பக்தரைக் காப்பாற்று . . . கிறார்.”—சங். 97:10, தி.மொ.

2 கொரி. 6:14-17: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? . . . ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொதிருங்கள் என்று கர்த்தர் [யெகோவா] சொல்லுகிறார். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்”வேன்.

வெளி. 18:4, 5: “பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்.” (நுட்பவிவரங்களுக்கு, “மகா பாபிலோன்” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)

ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மதத்தைச் சேர்ந்திருப்பது தேவையா?

பெரும்பான்மையான மத அமைப்புகள் கெட்டக் கனிகளை விளைவித்துள்ளன. தொகுதிகளை ஒழுங்குபடுத்தியமைப்பது கெட்டதென்பதல்ல. ஆனால், உண்மையான ஆவிக்குரிய வழிநடத்துதலை அளிப்பதற்குப்பதில், பொய்ப் போகங்களில் ஆதாரங்கொண்டவையும் பெரும்பாலும் ஆசார முறைமையானவையுமான வணக்க முறைகளைப் பல அமைப்புகள் முன்னேற்றுவித்திருக்கின்றன; தன்னல நோக்கங்களுக்காக, ஆட்களின் வாழ்க்கையை அடக்கியாளும்படி அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன; ஆவிக்குரிய மதிப்புகளில் அக்கறைகொள்வதற்குப் பதில், பணம் வசூலிப்பதிலும் பகட்டான அலங்கரிப்புள்ள கோயில்களிலுமே அவை மட்டுக்குமீறி அக்கறைகொண்டுள்ளன; அவற்றின் உறுப்பினர் பெரும்பாலும் பாசாங்குக்காரராயிருக்கின்றனர். நீதியை நேசிக்கும் எவரும் இத்தகைய ஓர் அமைப்பைச் சேர்ந்திருக்க விரும்புவதில்லை. ஆனால் உண்மையான மதம் புத்துயிரளிக்கும் முறையில் இந்த எல்லாவற்றிற்கும் எதிர்மாறாயுள்ளது. இருப்பினும், பைபிளின் கட்டளைகளை நிறைவேற்ற அது ஒழுங்குபடுத்தி அமைக்கப்படவேண்டியிருக்கிறது.

எபி. 10:24, 25: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.” (இந்த வேதப்பூர்வக் கட்டளையை நிறைவேற்றுவதற்கு, நாம் தவறாமல் நிலையாய் வந்தனுபவிக்கக்கூடிய கிறிஸ்தவக் கூட்டங்கள் இருக்கவேண்டும். இத்தகைய ஏற்பாடுகள், நாம் நம்மைப்பற்றி அக்கறை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களிடமும் அன்பு காட்டும்படி நம்மை ஊக்குவிக்கிறது.)

1 கொரி. 1:10: “சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.” (தனியாட்கள் ஒன்றாய்க் கூடிவராமல், ஒரே ஆவிக்குரிய உணவூட்டும் திட்டத்திலிருந்து பயனடையாமல், மற்றும் இத்தகைய போனை அதன்மூலமாய் அளிக்கப்படுகிற அந்த ஏதுவை மதியாமல் இருந்தால், இத்தகைய ஒற்றுமையை ஒருபோதும் அடையமுடியாது. யோன் 17:20, 21-ஐயும் பாருங்கள்.)

1 பேதுரு 2:17, தி.மொ.: “சகோதரக்கூட்டத்தாரில் அன்புகூருங்கள்.” (இது ஒருவேளை, குறிப்பிட்ட ஒரு தனி வீட்டில் வணக்கத்துக்காக ஒன்றாய்க் கூடுவோரை மாத்திரமே உட்படுத்துகிறதா? இல்லவேயில்லை; இது, கலாத்தியர் 2:8, 9-லும் 1 கொரிந்தியர் 16:19-லும் காட்டியிருக்கிறபடி சர்வதேச சகோதரத்துவத்தைக் குறிக்கிறது.)

மத். 24:14, NW: “ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி குடியிருப்புள்ள பூமியெங்கும், சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” (இந்த நற்செய்தியைக் கேட்க சகல ஜாதிகளுக்கும் வாய்ப்பு கொடுப்பதற்கு, இந்தப் பிரசங்க வேலையை ஒழுங்கான முறையில், தகுந்த கண்காணிப்புடன் நிறைவேற்றவேண்டும், கடவுள்பேரிலும் தங்கள் அயலார் பேரிலுமுள்ள அன்பு பூமியைச் சுற்றிலுமுள்ள ஜனங்களை இந்த வேலையைச் செய்வதற்குத் தங்கள் முயற்சிகளை ஒன்றுபடுத்த செய்வித்திருக்கிறது.)

“அமைப்பு” என்ற முக்கிய தலைப்பின்கீழும் பாருங்கள்.

தங்கள் அயலாரை நேசிப்பதே உண்மையில் முக்கியமானதா?

இதைப்பற்றிச் சந்தேகமேயில்லை, இத்தகைய அன்பு முக்கியமானது. (ரோமர் 13:8-10) ஆனால் கிறிஸ்தவனாயிருப்பது நம்முடைய அயலானிடம் வெறுமென தயவாயிருப்பதைப்பார்க்கிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. தம்முடைய உண்மையான சீஷர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் உடன் விசுவாசிகளுக்குக் கொண்டுள்ள அன்பினால் முனைப்பாய் அடையாளங் கண்டுகொள்ளப்படுவரென இயேசு சொன்னார். (யோவான் 13:35) இதன் முக்கியத்துவம் பைபிளில் திரும்பத்திரும்ப அறிவுறுத்தப்படுகிறது. (கலா. 6:10; 1 பேதுரு 4:8; 1 யோவான் 3:14, 16, 17) எனினும், அதைப் பார்க்கிலும் மிக முக்கியமானது கடவுளிடம்தானே நாம் கொண்டுள்ள அன்பு என்று இயேசு காட்டினார், இந்த அன்பு கடவுளுடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிவதால் காட்டப்படுகிறது. (மத். 22:35-38; 1 யோவான் 5:3) இத்தகைய அன்பைக் காட்ட, நாம் கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதை வாழ்க்கையில் பயன்படுத்தி வணக்கத்துக்காக, கடவுளின் ஊழியரான மற்றவர்களுடன் ஒன்றுகூடிவரவேண்டும்.

கடவுளுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பது உண்மையில் அவ்வளவு முக்கியமான காரியமா?

இது நிச்சயமாகவே முக்கியமானது. மத ஆராதனைகளுக்கு வெறுமென விதிமுறையாய்ச் சென்றுவருவது அதனிடத்தை எடுக்க முடியாது. ஆனால் நாம் கவனமாயிருக்கவேண்டும். ஏன்? முதல் நூற்றாண்டில், கடவுளுடன் நல்ல உறவு தங்களுக்கு இருந்ததாக எண்ணின ஜனங்கள் இருந்தார்கள் ஆனால் அவர்கள் கருதினது மிகவும் தவறென இயேசு வெளிப்படுத்திக் காட்டினார். (யோவான் 8:41-44) தங்கள் விசுவாசத்தைக் குறித்து வைராக்கியமுள்ளவர்களாய்த் தோன்றி, கடவுளுடன் தங்களுக்கு நல்ல உறவு இருந்ததென எண்ணி, ஆனால் கடவுளுடைய அங்கீகாரத்தைக் கொண்டிருப்பதற்கு உண்மையில் தேவைப்பட்டதை விளங்கிக்கொண்டிராத சிலரைப்பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதினான்.—ரோமர் 10:2-4.

கடவுளுடைய கட்டளைகளைக் குறைந்த முக்கியத்துவமுடையவைப்போல் நாம் பாவித்தால் கடவுளுடன் நமக்குத் தனிப்பட்ட நல்ல உறவு இருக்கமுடியுமா? நாம் நம்முடைய உடன்-விசுவாசிகளுடன் தவறாமல் கூடிவரவேண்டுமென்பது இவற்றில் ஒன்றாகும்.—எபி. 10:24, 25.

நாமே தனிமையில் பைபிளை வாசித்துவந்தால், அது போதுமா?

தனிப்பட்டு பைபிளை வாசித்துவருவதால் பலர் மிக அதிகத்தைக் கற்கக்கூடுமென்பது உண்மையே. கடவுளையும் அவருடைய நோக்கங்களையும்பற்றிய சத்தியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது அவர்களுடைய நோக்கமென்றால், அவர்கள் செய்வது மிக உயர்வாய்ப் போற்றத்தக்கது. (அப். 17:11) ஆனால், நம்முடன் நாம் நேர்மையாயிருக்க, உதவி இல்லாமல் அதன் எல்லாவற்றின் முழு உட்கருத்தையும் நாம் உண்மையில் புரிந்துகொள்ளப்போகிறோமா? முதன்மை ஸ்னம் வகித்த ஆனால் பைபிள் தீர்க்ரிசனத்தைப் புரிந்துகொள்வதற்குத் தனக்கு உதவி தேவைப்பட்டதை ஒப்புக்கொள்ள போதிய மனத்தாழ்மையுடனிருந்த ஒரு மனிதனைப்பற்றி பைபிளில் சொல்லியிருக்கிறது. அந்த உதவி கிறிஸ்தவ சபையின் ஓர் உறுப்பினரால் அவனுக்கு அளிக்கப்பட்டது.—அப். 8:26-38; மேலும் அப். 6:1-6; 8:5-17 ஆகியவற்றில் பிலிப்புவைப்பற்றிக் கொடுத்துள்ள வசனங்களை ஒத்துப்பாருங்கள்.

ஒருவன் பைபிளை வாசித்து ஆனால் அதைத் தன் வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்தாவிடில், நிச்சயமாகவே அது அவனுக்கு அதிக நன்மை பயக்குவதில்லை. அவன் அதை விசுவாசித்து அதன்பேரில் செயல்படுவானாகில், தவறாமல் நடக்கும் சபை கூட்டங்களில் கடவுளுடைய ஊழியருடன் கட்டாயமாகக் கூட்டுறவு கொள்வான். (எபி. 10:24, 25) மேலும் மற்ற ஜனங்களுடன் “நற்செய்தியைப்” பகிர்ந்துகொள்வதிலும் அவன் அவர்களோடு சேர்ந்துகொள்வான்.—1 கொரி. 9:16; மாற்கு 13:10; மத். 28:19, 20.

எந்த மதம் சரியென ஒருவன் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?

(1) அதன் போ கங்கள் எதன்பேரில் ஆதாரங்கொண் டுள்ளன? அவை கடவுளிடமிருந்து வந்தனவா, அல்லது பெரும்பாலும் மனிதரிடமிருந்து வந்தனவா? (2 தீமோ. 3:16; மாற்கு 7:7) உதாரணமாக, இவ்வாறு கேளுங்கள்: கடவுள் ஒரு திரித்துவம் என பைபிள் எங்கே கற்பிக்கிறது? மனித ஆத்துமா அழியாததென அதில் எங்கே சொல்லியிருக்கிறது?

(2) கடவுளுடைய பெயரை அது தெரியப்ப டுத்துகிறதாவென கவனியுங்கள்.  இயேசு ஜெபத்தில் கடவுளிடம் பின்வருமாறு சொன்னார்: “நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்.” (யோவான் 17:6) அவர் அறிவித்ததாவது: “உன் கடவுளாகிய யெகோவாவையே நீ வணங்கவேண்டும், அவர் ஒருவருக்கே நீ பரிசுத்த சேவை செலுத்தவேண்டும்.” (மத். 4:10, NW) ‘யெகோவாவையே நீங்கள் வணங்கவேண்டு’மென உங்கள் மதம் உங்களுக்குக் கற்பித்ததா? இந்தப் பெயர் குறித்துக் காட்டும் அவரை—அவருடைய நோக்கங்களை, அவருடைய நடவடிக்கைகளை, அவருடைய குணங்களை—நீங்கள் அறியவந்திருக்கிறீர்களா? இவ்வாறு நீங்கள் அவரிடம் நம்பிக்கையோடு நெருங்கிவர முடியுமென உணருகிறீர்களா?

(3) இயேசு கிறிஸ்துவில் உண்மையான விசுவாசம் மெய்ப்பித்துக் காட்டப்ப டுகிறதா? இது இயேசு கிறிஸ்துவின் மனித உயிர்ப்பலியின் விலைமதிப்பையும் பரலோக அரசராக இன்று அவர் வகிக்கும் ஸ்னத்தையும் நன்றியோடு மதித்துணருவதை உட்படுத்துகிறது. (யோவான் 3:36; சங். 2:6-8) இத்தகைய மதித்துணர்வு இயேசுவுக்குக் கீழ்ப்படிவதால்—அவர் தம்மைப் பின்பற்றுவோருக்கு நியமித்த வேலையில் நாம்தாமே ஆர்வத்துடன் பங்குகொள்வதால்—காட்டப்படுகிறது. உண்மையான மதம் அவ்வாறு செயல்களோடுகூடிய விசுவாசத்தையுடையது.—யாக். 2:26.

(4) அது பெரும்பாலும் சடங்காசாரமானதா, விதிமுறை ஒழுங்கானதா, அல்லது அது ஒரு வாழ்க்கைமுறையாக இருக்கிறதா?  வெறும் ஒரு விதிமுறை ஆசாரமான மதத்தைக் கடவுள் கண்டிப்பாய் அங்கீகரிக்கிறதில்லை. (ஏசா. 1:15-17) உண்மையான மதம், பலர் விரும்பும் போக்குகளுடன் பலவீனமாய்ப் போய்க்கொண்டிராமல் அதற்கு மாறாக பைபிளின் ஒழுக்கத் தராதரத்தையும் சுத்தமான பேச்சையும் உறுதியாய்க் கடைப்பிடிக்கிறது. (1 கொரி. 5:9-13; எபே. 5:3-5) அதன் உறுப்பினர்கள் கடவுளுடைய ஆவியின் கனிகளைத் தங்கள் வாழ்க்கையில் காட்டுகிறார்கள். (கலா. 5:22, 23) ஆகையால், உண்மையான வணக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களை அடையாளங் கண்டுகொள்ளலாம் எப்படியெனில் அவர்கள் பைபிளின் தராதரங்களைத் தங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிக்கிறார்கள், தாங்கள் கூடும் இடங்களில்மட்டுமல்ல, தங்கள் குடும்ப வாழ்க்கையிலும், தாங்கள் வேலைசெய்யும் இடங்களிலும், பள்ளியிலும், ஓய்வுநேர பொழுதுபோக்குச் சமயங்களிலும் அவ்வாறு செய்கிறார்கள்.

(5) அதன் உறுப்பினர் ஒருவரையொருவர் உண்மையில் நேசிக்கிறார்களா?  இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) அத்தகைய அன்பு ஜாதி, சமுதாய, மற்றும் தேசீய வரம்புகளைத் தாண்டி எட்டி, ஆட்களை உண்மையான சகோதரத்துவத்தில் ஒன்றாய்க் கவர்ந்திழுத்து இணைக்கிறது. இந்த அன்பு அவ்வளவு உறுதியாயிருப்பதால் இது அவர்களை உண்மையில் வேறுபட்டவர்களாகத் தனியே ஒதுக்கிவைக்கிறது. தேசங்கள் போருக்குச் செல்கையில், மற்ற நாடுகளிலுள்ள தங்கள் கிறிஸ்தவ சகோதரரைக் கொல்வதற்குப் போயுதங்களை எடுக்க மறுக்கும்படி யாருக்குப் போதிய அன்பு இருக்கிறது? பூர்வ கிறிஸ்தவர்கள் இதையே செய்தார்கள்.

(6) அது ண்மையில் உலகத்திலிருந்து பிரிந்திருக்கிறதா?  தம்மை உண்மையாய்ப் பின்பற்றுவோர் ‘இந்த உலகத்தின் பாகமாயிரார்,’ என்று இயேசு சொன்னார். (யோவான் 15:19) கடவுள் அங்கீகரிக்கும் முறையில் அவரை வணங்குவதற்கு நாம் நம்மை “உலகத்தால் கறைபதபடிக்குக்” காத்து வைத்துக்கொள்கிறோம். (யாக். 1:27) அவற்றின் பாதிரிமாரும் மற்ற உறுப்பினரும் அரசியலில் உட்பட்டுள்ள, அல்லது அவர்களுடைய வாழ்க்கைப் பெரும்பாலும் பொருளாசை மற்றும் மாம்ச இச்சைகளைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள மதங்களைப்பற்றி இவ்வாறு சொல்லமுடியுமா?—1 யோவான் 2:15-17.

(7) அதன் உறுப்பினர் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி சுறுசுறுப்பாய்ச் சாட்சி கொ டுப்பவர்களா? இயேசு முன்னறிவித்ததாவது: “இராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி குடியிருப்புள்ள பூமி முழுவதிலும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” (மத். 24:14, NW) எந்த மதம் ஜனங்களைத் தங்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மனித ஆட்சியை நோக்கும்படி ஊக்கப்படுத்துவதற்குப் பதில் கடவுளுடைய ராஜ்யத்தையே மனிதவர்க்கத்தின் நம்பிக்கையென உண்மையில் அறிவித்துவருகிறது? இந்த நடவடிக்கையில் பங்குகொள்ளும்படியும், அதை இயேசு தம்முடைய அப்போஸ்தலருக்குக் கற்பித்தபடி வீடுவீடாய்ச் செய்யும்படியும் உங்கள் மதம் உங்களை ஆயத்தஞ்செய்திருக்கிறதா?—மத். 10:7, 11-13; அப். 5:42; 20:20.

தங்களுடையதே ஒரே சரியான மதமென யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்களா?

203, 204-ம் பக்கங்களில் “யெகோவாவின் சாட்சிகள்,” என்பதன்கீழ்ப் பாருங்கள்.

ஏன் சிலருக்கு விசுவாசம் இருக்கையில் மற்றவர்களுக்கு இல்லை?

“விசுவாசம்” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘எனக்கு மதத்தில் அக்கறை இல்லை’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘அது எனக்கு வியப்புண்டாக்குவதில்லை. பலர் உங்கள் கருத்தையுடையோராக இருக்கின்றனர். நான் உங்களைக் கேட்கலாமா, நீங்கள் எப்பொழுதுமே அவ்வாறு உணர்ந்தீர்களா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘என் கவனத்தைக் கவர்ந்த காரியங்களில் ஒன்றென்னவெனில், இன்று சர்ச்சுகளில் கற்பித்துள்ள முக்கிய கோட்பாடுகளில் பெரும்பாலும் எதுவும் பைபிளில் காணப்படுகிறதில்லையென கண்டுபிடித்ததேயாகும். (ஒருவேளை 203, 204-ம் பக்கங்களில், “யெகோவாவின் சாட்சிகள்” என்ற தலைப்பின்கீழ் காணப்படுகிறதை, ராஜ்யத்தின்பேரில் முக்கிய அழுத்தத்துடன் பயன்படுத்தலாம். அதற்கு எதிர்மாறாக யெகோவாவின் சாட்சிகள் நம்புவதைப்பற்றி 199, 200-ம் பக்கங்களில் கொடுத்துள்ளதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள்.)’

16, 17-ம் பக்கங்களையும் பாருங்கள்.

‘மதத்தில் மட்டுக்குமீறிய பாசாங்குத்தனம் உள்ளது’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘ஆம், நீங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன். பலர் பிரசங்கிப்பது ஒன்று ஆனால் அவர்கள் வாழும் முறை இன்னொன்று. ஆனால் எனக்குச் சொல்லுங்கள், பைபிளைப்பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? (சங். 19:7-10)’

‘நான் நல்ல வாழ்க்கை நடத்துகிறேன். என் அயலாரை நல்லமுறையில் நடத்துகிறேன். அதுவே எனக்குப் போதுமான மதம்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘நீங்கள் நல்ல வாழ்க்கை நடத்துகிறீர்களென சொல்வதால், நீங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதாகத் தெரிகிறது, சரிதானே? . . . இங்கே வெளிப்படுத்துதல் 21:4-ல் விவரித்துள்ள வகையான நிலைமைகளின்கீழ் வாழ எவ்வாறு விரும்புவீர்கள்? . . . அதில் பங்குகொள்வதற்குத் தேவைப்படுவதென்னவென யோன் 17:3-ல் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்.’

327-ம் பக்கத்தையும் பாருங்கள்.

‘ஒழுங்குபடுத்தியமைத்துள்ள மதத்தில் எனக்கு அக்கறையில்லை, கடவுளோடு தனிப்பட்ட உறவே முக்கியமென நான் நம்புகிறேன்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘அது என் அக்கறையைத் தூண்டுகிறது. நீங்கள் எப்பொழுதும் இவ்வாறே உணர்ந்தீர்களா? . . . முன் எப்போதாவது ஒரு மதத் தொகுதியோடு நீங்கள் கூட்டுறவு கொண்டதுண்டா? . . . (பின்பு பக்கங்கள் 326-328-ல் உள்ள குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.)’

‘என் சர்ச் கற்பிக்கும் எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொள்கிறதில்லை, ஆனால் மற்றொன்றுக்கு மாறும் தேவையை நான் காண்கிறதில்லை. என் சொந்த சர்ச்சுக்குள் முன்னேற்றத்துக்காக உழைப்பதையே மேலென எண்ணுகிறேன்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘நீங்கள் என்னிடம் இதைச் சொல்வதை நான் மதிக்கிறேன். கடவுளின் அங்கீகாரத்தைக் கொண்டிருப்பதே நம்மெல்லாருக்கும் உண்மையில் முக்கியமென நீங்கள் ஒப்புக்கொள்வீர்களென்று நான் நிச்சயமாயிருக்கிறேன். இல்லையா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘இங்கே வெளிப்படுத்துதல் 18:4, 5-ல் நாம் கவலையுடன் சிந்திப்பதற்குக் கடவுள் நம்மெல்லாருக்கும் ஒன்றைக் கொடுக்கிறார். . . . தவறான காரியங்களை நாம்தாமே பழக்கமாய்ச் செய்கிறதில்லையெனினும், இந்த அமைப்புகளை நாம் ஆதரிப்போமானால் அந்தக் குற்றத்தில் பங்குகொள்கிறோமென பைபிள் காட்டுகிறது. (“மகா பாபிலோன்,” என்ற முக்கிய தலைப்பின்கீழும் பாருங்கள்.)’ (2) (பக்கங்கள் 328-330-லுள்ள குறிப்புகளையும் ஒருவேளை பயன்படுத்தலாம்.) (3) ‘சத்தியத்தை நேசிக்கும் ஆட்களுக்காகக் கடவுள் தேடிக்கொண்டிருக்கிறார், ஒன்றுபட்ட வணக்கத்துக்காக அவர் அவர்களை ஒன்றாய்க் கொண்டுவருகிறார். (யோவான் 4:23, 24)’

‘எல்லா மதங்களும் நல்லவையே; உங்களுக்கு உங்களுடையதும், எனக்கு என்னுடையதும் உண்டு

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘நீங்கள் பரந்த மனப்பான்மையுடையவரெனத் தெரிகிறது. மேலும் கடவுளுடைய வார்த்தை அளிக்கும் வழிநடத்துதல் நம்மெல்லாருக்கும் தேவையெனவும் நீங்கள் கண்டுணருகிறீர்கள், இதன் காரணமாகவே உங்களுக்கு ஒரு மதம் இருக்கிறது, சரிதானே?’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘இங்கே மத்தேயு 7:13, 14-ல் பைபிள் இயேசுவின் வார்த்தைகளில் மிக மதிப்புவாய்ந்த வழிநடத்துதலை அளிக்கிறது. (அதை வாசியுங்கள்.) . . . அது ஏன் அவ்வாறு இருக்கவேண்டும்?’

பக்கங்கள் 322, 323-லும் பாருங்கள்.

‘இயேசுவில் உங்களுக்கு விசுவாசம் இருக்கும் வரையில், நீங்கள் எந்தச் சர்ச்சை சேர்ந்தவர்கள் என்பது உண்மையில் பெரிய காரியமல்ல’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘இயேசுவில் விசுவாசம் வைப்பது இன்றியமையாததே, இதைப்பற்றி எவ்விதச் சந்தேகமுமில்லை. இது அவர் கற்பித்த எல்லாவற்றையும் ஏற்பதென நீங்கள் கருதுகிறீர்களென்று நான் எண்ணுகிறேன். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் பலர் உண்மையில் அந்தப் பெயர் குறிப்பதன்படி வாழ்கிறதில்லையென்பதை நான் கவனித்திருப்பதுபோல் நீங்களும் கவனித்திருப்பீர்களென்பதில் சந்தேகமில்லை.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘இங்கே மத்தேயு 7:21-23-ல் இயேசு சொன்னதைக் கவனியுங்கள்.’ (2) ‘கடவுளுடைய சித்தம் என்னவென கண்டறிய போதிய அக்கறையெடுத்து பின்பு அதைச் செய்வோருக்கு அதிசயமான எதிர்காலம் இருக்கிறது. (சங். 37:10, 11; வெளி. 21:4)’

சரியான ஒரே ஒரு மதமே இருக்கிறதென நீங்கள் எண்ணும்படி செய்வதெது?’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘பெரும்பாலும் எல்லா மதங்களிலும் உண்மைமனமுள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உண்மையில் முக்கியமாயிருப்பது கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதே. எத்தனை உண்மையான விசுவாசங்களை அது குறிப்பிடுகிறது? இங்கே எபேசியர் 4:4, 5-ல் எழுதப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘இது மற்ற வசனங்கள் சொல்வதோடு ஒத்திருக்கிறது. மத். 7:13, 14, 21; யோன் 10:16; 17:20, 21)’ (2) ‘ஆகையால், நாம் எதிர்ப்படவேண்டிய சவாலானது அந்த மதத்தை அடையாளங் கண்டுபிடிப்பதேயாகும். இதை நாம் எவ்வாறு செய்யலாம்? (பக்கங்கள் 328-330-லுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.)’ (3) (பக்கங்கள் 199, 200-ல் “யெகோவாவின் சாட்சிகள்” என்ற தலைப்பின்கீழ் உள்ளதையும் பாருங்கள்.)

‘நான் வெறுமென என் பைபிளை வீட்டில் வாசித்து தெளிந்துணர்வுக்காகக் கடவுளிடம் ஜெபிக்கிறேன்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘முழு பைபிளையும் நீங்கள் இதற்குள் வாசிக்க முடிந்ததா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘நீங்கள் அதை வாசித்து வருகையில், மத்தேயு 28:19, 20-ல் வெகுவாய்க் கவனத்தைக் கவரும் ஒன்றைக் காண்பீர்கள். . . . இது குறிப்பிடத்தக்கது ஏனெனில், உண்மையான கிறிஸ்தவனாயிருப்பதில் உட்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்ய கிறிஸ்து மற்ற மனிதரைப் பயன்படுத்துகிறாரென இது காட்டுகிறது. இதற்குப் பொருந்த, யெகோவாவின் சாட்சிகள் ஆட்களை அவர்கள் வீட்டில் சந்தித்து, வாரத்துக்கு ஒருமணிநேரம்போல் இலவசமாய் பைபிளைக் கலந்தாலோசிப்பதற்கு முன்வருகிறார்கள். இதை நாங்கள் செய்யும் முறையை உங்களுக்குக் காட்ட ஒருசில நிமிடங்கள் மாத்திரமே நான் எடுக்கலாமா?’

328-ம் பக்கத்தையும் பாருங்கள்.

‘மதம் தனிப்பட்டவருடைய காரியமென நான் எண்ணுகிறேன்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘இந்நாட்களில் பொதுநோக்கு இதுவே, ஆட்களுக்கு பைபிளின் செய்தியில் உண்மையில் அக்கறையில்லையெனில் நாங்கள் மற்ற வீடுகளுக்குச் சந்தோஷமாய்ச் செல்கிறோம். ஆனால் உங்களைக் காண நான் வந்தக் காரணம் என்னவென உங்களுக்குத் தெரிகிறதா, அதென்னவெனில் தம்மைப் பின்பற்றுவோர் இதையே செய்யும்படி இயேசு கட்டளையிட்டார் . . . (மத். 24:14; 28:19, 20; 10:40)’