Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆத்துமா

ஆத்துமா

ஆத்துமா

சொற்பொருள் விளக்கம்:  பைபிளில் “ஆத்துமா” என்பது எபிரெய நேபெஷ் மற்றும் கிரேக்க சைக்கீ என்றச் சொற்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆத்துமா என்பது ஓர் ஆள் அல்லது ஒரு மிருகம் அல்லது ஓர் ஆளோ மிருகமோ அனுபவிக்கும் உயிர் என பைபிள் இதைப் பயன்படுத்தியுள்ள முறை காட்டுகிறது. எனினும், “ஆத்துமா” என்பது மாம்ச உடலின் மரணத்தின்போது சாவாமல் தொடர்ந்து வாழும் மனிதனின் உடலற்ற அல்லது ஆவி பாகமென பலர் கருதுகின்றனர். மற்றவர்கள் அதை உயிரின் மூலத்தத்துவமென விளங்கிக்கொள்கின்றனர். ஆனால் இந்தப் பிற்பட்டக் கருத்துக்கள் பைபிள் போதகங்களல்ல.

பைபிளில் சொல்லியுள்ள எது, ஆத்துமா என்னவென்று புரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்கிறது?

ஆதி. 2:7: “தேவனாகிய கர்த்தர் [யெகோவா, தி.மொ.] மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” (மனிதனுக்கு ஓர் ஆத்துமா கொடுக்கப்பட்டது என்று இது சொல்கிறதில்லை, ஆனால் அவன் ஓர் ஆத்துமா, உயிர்வாழும் ஆள் ஆனான் என்றே சொல்லியிருக்கிறதைக் கவனியுங்கள்.) (“ஆத்துமா” என்று இங்கே மொழிபெயர்த்துள்ள எபிரெயச் சொல்லின் பாகம் நேபெஷ் என்பதாகும். KJ, AS, மற்றும் Dy இந்த மொழிபெயர்ப்போடு ஒத்திருக்கின்றன. RS, JB, NAB என்பவற்றில் “ஜீவி” என்றுள்ளது, NE-ல் “பிராணி” என்று சொல்லியிருக்கிறது. Kx-ல் “ஆள்” என்று இருக்கிறது.)

1 கொரி. 15:45: “அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.” (ஆகவே ஆத்துமா என்னவென கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்கள் எபிரெய வேத எழுத்துக்களோடு ஒத்திருக்கின்றன.) (இங்கே “ஆத்துமா” என மொழிபெயர்த்துள்ள கிரேக்கச் சொல் சைக்கீ என்பதன் இரண்டாம் வேற்றுமைச்சொல்லாகும். KJ, AS, Dy, JB, NAB, மற்றும் Kx ஆகிய மொழிபெயர்ப்புகளிலும் “ஆத்துமா” என்றிருக்கிறது. RS, NE, மற்றும் TEV என்பவற்றில் “ஜீவி” என்று சொல்லியிருக்கிறது.)

1 பேதுரு 3:20, தி.மொ.: “நோவா[வின்] . . . நாட்களிலே . . . பேழையில் சிலர் மாத்திரம், எட்டுப்பேரே [ஆத்துமாக்களே, NW], பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.” (இங்கே “ஆத்துமாக்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கச் சொல் சைக்காய் என்பதாகும், இது சைக்கீ என்பதன் பன்மை. KJ, AS, Dy, மற்றும் Kx ஆகியவற்றிலும் “ஆத்துமாக்கள்” என குறிப்பிடுகின்றன. JB மற்றும் TEV-ல் “மக்கள்” என்றிருக்கிறது; RS, NE, மற்றும் NAB “ஆட்கள்” என்பதைப் பயன்படுத்துகின்றன.)

ஆதி. 9:5: “உங்களுக்கு உயிராயிருக்கிற [ஆத்துமாக்களின், NW; எபிரெயு, நேபெஷ் என்பதிலிருந்து] உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்.” (இங்கே ஆத்துமா இரத்தத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது.)

யோசு. 11:11, NW: “அதிலிருந்த ஒவ்வொரு ஆத்துமாவையும் [எபிரெயுவில், நேபெஷ்] பட்டயக் கருக்கினால் வெட்டி சங்கரித்தனர்.” (ஆத்துமா பட்டயத்தால் தொப்படக்கூடிய ஒன்றென இங்கே காட்டப்படுகிறது, ஆகையால் இந்த ஆத்துமாக்கள் ஆவிகளாக இருந்திருக்க முடியாது.)

மிருகங்கள் ஆத்துமாக்களென பைபிளில் எங்கே சொல்லியிருக்கிறது?

ஆதி. 1:20, 21, 24, 25: “பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும் [உயிருள்ள ஆத்துமாக்களையும், NW]*, . . . ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும் [ஆத்துமாக்களையும், NW], சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; . . . பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்க[ளை] [உயிருள்ள ஆத்துமாக்களை, NW] . . . ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார். . . . தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்.” (*எபிரெயுவில் இங்கேயுள்ள சொல் நேபெஷ் ஆகும். Ro-ல் “ஆத்துமா” என்றிருக்கிறது. சில மொழிபெயர்ப்புகள் “சிருஷ்டி[கள்]” என்ற மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துகின்றன.)

லேவி. 24:17, 18: “ஒரு மனிதனைக் [மனிதவர்க்கத்தின் எந்த ஆத்துமாவையாவது, NW; எபிரெயுவில், நேபெஷ்] கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும். மிருகத்தைக் [நாட்டு மிருகத்தின் ஆத்துமா, NW; எபிரெயுவில், நேபெஷ்] கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் [ஆத்துமாவுக்கு ஆத்துமா, NW] கொடுக்கக்கடவன்.” (ஆத்துமா என்பதற்கான அதே எபிரெயச் சொல் மனிதவர்க்கத்துக்கும் மிருகங்களுக்கும் பயன்படுத்தியிருப்பதைக் கவனியுங்கள்.)

வெளி. 16:3: “அது செத்தவனுடைய இரத்தம் போயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் [உயிருள்ள ஆத்துமாக்கள், NW]* யாவும் மாண்டுபோயின.” (இவ்வாறு கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களும் மிருகங்களை ஆத்துமாக்களெனக் காட்டுகின்றன.) (*கிரேக்கில் இங்கேயுள்ள சொல் சைக்கீ என்பதாகும். KJ, AS, மற்றும் Dy இதை “ஆத்துமா” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. சில மொழிபெயர்ப்பாளர்கள் “சிருஷ்டி” அல்லது “பொருள்” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.)

ஆத்துமாவைப்பற்றி பைபிளில் சொல்லியிருப்பது இதுவேயென யெகோவாவின் சாட்சிகளாயிராத மற்ற நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்களா?

“ப[ழைய] ஏ[ற்பாட்டில்] உடல் ஆத்துமா என்ற இரு பிரிவு இல்லை. இஸ்ரவேலன் காரியங்களை ஒன்றாக, அவற்றின் முழுமையிலே கண்டான், இவ்வாறு அவன் மனிதர்களை ஆட்களெனக் கருதினான், பலசேர்ந்தமைந்த பொருட்களாக அல்ல. நெபெஸ் [நேபெஷ்] என்றச் சொல் ஆத்துமா என்ற நம்முடைய சொல்லாக மொழிபெயர்த்திருக்கிறபோதிலும், உடலிலிருந்து அல்லது அந்த ஆளிலிருந்த வேறொன்றாகத் தனிப்பட்டுவிளங்கும் ஆத்துமாவாக ஒருபோதும் பொருள்படுகிறதில்லை. . . . இந்தச் சொல் [சைக்கீ] நெபெஸ் என்பதுடன் ஒத்திருக்கும் பு[திய] ஏ[ற்பாட்டு] சொல்லாகும். இது உயிரின் தத்துவத்தை, உயிரைத்தானே, அல்லது உயிருடனிருக்கும் ஒன்றைக் குறிக்கலாம்.”—நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா (1967), புத். XIII, பக். 449, 450.

“‘ஆத்துமா’ என்பதற்கு எபிரெயச் சொல் [நெஃபெஷ், சுவாசிக்கிற ஒன்று] மோசயால் பயன்படுத்தப்பட்டது . . . , ‘உயிருள்ள ஒன்றைக்’ குறிக்கிறது மனிதனல்லாத பிராணிகளுக்கும் சமமாய்ப் பயன்படுத்தக்கூடியது. . . . சைக்கீ (‘ஆத்துமா’) என்பதன் புதிய ஏற்பாட்டின் உபயோகம் நெஃபெஷ்-க்கு ஒப்பாயிருந்தது.”—தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (1976), மக்ரோபீடியா, புத். 15, பக். 152.

“உடல் செத்தப் பின் ஆத்துமா தொர்ந்து உயிருடனிருந்துகொண்டிருக்கிறதென்ற நம்பிக்கை எளிதில் விளங்கும் விசுவாசத்துக்கு மாறாக தத்துஞானத்தின் அல்லது இறைமையியலின் ஊகிப்புக்குரிய காரியமேயாகும், மேலும் இவ்வாறு பரிசுத்த வேத எழுத்துக்களில் ஓரிடத்திலும் திட்டமாகக் கற்பித்தில்லை.”—தி ஜூயிஷ் என்ஸைக்ளோபீடியா (1910), புத். VI, பக். 564.

மனித ஆத்துமா சாகுமா?

எசே. 18:4: “இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே* சாகும்.” (*எபிரெயுவில் “நேபெஷ்” என்றிருக்கிறது. KJ, AS, RS, NE, மற்றும் Dy “அந்த ஆத்துமா” என்று இதை மொழிபெயர்த்திருக்கின்றன. சில மொழிபெயர்ப்புகள் “அந்த மனிதன்” அல்லது “அந்த ஆள்” என்று குறிப்பிடுகின்றன.)

மத். 10:28: “ஆத்துமாவைக் [அல்லது, “உயிரை”] கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும்* சரீரத்தையும் நரகத்திலே [கெஹென்னாவில், NW] அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.” (*கிரேக்கு சைக்கீ-யின் இரண்டாம் வேற்றுமைச் சொல்லைக் கொண்டிருக்கிறது. KJ, AS, RS, NE, TEV, Dy, JB, மற்றும் NAB ஆகிய இவை யாவும் அதை “ஆத்துமா” என்று மொழிபெயர்த்திருக்கின்றன.)

அப். 3:23, NW: “அந்தத் தீர்க்கதரிசிக்குச் செவிகொடாத எந்த ஆத்துமாவும் [கிரேக்கில், சைக்கீ] அந்த ஜனத்துக்குள்ளிருந்து முற்றிலும் அழிக்கப்படும்.”

மனித ஆத்துமாக்கள் (ஆட்கள்) என்றென்றும் வாழ முடியுமா?

பக்கங்கள் 243-247-ல், “உயிர்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

ஆத்துமாவும் ஆவியும் ஒன்றேதானா?

பிர. 12:7: “மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி [அல்லது, உயிர்ச்-சக்தி; எபிரெயுவில், ரூஅக்] தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகிறது. (ஆவி என்பதற்கு எபிரெயச் சொல் ரூஅக் என்பதைக் கவனியுங்கள்; ஆனால் ஆத்துமா என்று மொழிபெயர்க்கப்பட்ட சொல் நேபெஷ் ஆகும். மரணத்தின்போது இந்த ஆவி கடவுளுடைய நேர் முன்னிலை வரையாகப் பயணப்பட்டுச் செல்கிறதென இந்த வசனம் பொருள்கொள்கிறதில்லை; அதற்கு மாறாக, அந்த ஆள் மறுபடியும் உயிர்வாழ்வதற்கான எந்த எதிர்பார்ப்பும் கடவுள் பொறுப்பில் இருக்கிறது என்பதேயாகும். இத்தகைய முறையில் பயன்படுத்துவதில், நாம் பின்வருமாறு சொல்லலாம், ஒரு சொத்தை வாங்குபவன் தேவைப்பட்ட பணத் தொககளைச் செலுத்தாவிடில், அந்தச் சொத்து அதன் சொந்தக்காரரிடம் “திரும்புகிறது.”) (KJ, AS, RS, NE, மற்றும் Dy ஆகிய இவையாவும் இங்கே ரூஅக் என்பதை “ஆவி” என மொழிபெயர்த்திருக்கின்றன. NAB-ல் “உயிர் சுவாசம்” என்றிருக்கிறது.)

பிர. 3:19: “மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் [“ஆவி,” NW; எபிரெயுவில், ரூஅக்] ஒன்றே.” (இவ்வாறு மனிதவர்க்கத்துக்கும் மிருகங்களுக்கும் அதே ரூஅக், அல்லது ஆவி இருக்கிறதென காட்டப்பட்டுள்ளது. 20, 21-ம் வசனங்களின்பேரில் விளக்கக் குறிப்புகளுக்கு, பக்கம் 383-ஐ பாருங்கள்.)

எபி. 4:12: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் [கிரேக்கில், சைக்கீஸ்; “உயிர்,” NE] ஆவியையும் (கிரேக்கில், ப்னியூமேட்டாஸ்), கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (“ஆவி” என்பதற்குரிய கிரேக்கச் சொல், “ஆத்துமா” என்பதற்குரிய அதே சொல்லாக இல்லை என்பதைக் கவனியுங்கள்.)

ஆவி உடலைவிட்டு நீங்கினபின் ஒருவனுக்கு உணர்வுள்ள வாழ்க்கை தொருகிறதா?

சங். 146:4: “அவனுடைய ஆவி [எபிரெயு, ரூஅக்-லிருந்து] பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோனைகள் அழிந்துபோம்.” (NAB, Ro, Yg, மற்றும் Dy [145:4] இங்கே ரூஅக் என்பதை “ஆவி” என மொழிபெயர்த்திருக்கின்றன. சில மொழிபெயர்ப்புகளில் “சுவாசம்” என்றிருக்கிறது.) (மேலும் சங்கீதம் 104:29)

உடலற்ற, சாவாமையுடைய ஆத்துமா கொள்கையில் கிறிஸ்தவமண்டலத்தின் நம்பிக்கையின் மூலத்தொக்கம் என்ன?

“கருத்தரிக்கையில், மனிதனை உயிருள்ள முழுமையாக்குவதற்கு ஆவிக்குரிய ஓர் ஆத்துமா கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டு உடலுக்குள் செலுத்தப்படுகிறது என்ற இந்தக் கிறிஸ்தவக் கொள்கை, கிறிஸ்தவ தத்துவஞானத்தில் நெடுங்காலம் வளர்ச்சியடைந்தக் கனியாகும். [பொ.ச. சுமார் 254-ல் மரித்த] கிழக்கிலிருந்த ஆரிஜனாலும் [பொ.ச. 430-ல் மரித்த] மேற்கிலிருந்த புனித அகஸ்டீனாலுமே ஆத்துமா ஓர் ஆவிக்குரிய பொருள் என ஸ்பிக்கப்பட்டது மற்றும் அதன் இயல்பின் தத்துவஞான கோட்பாடு உருவாக்கப்பட்டது. . . . இவருடைய [அகஸ்டீனுடைய] கோட்பாடு . . . (சில குறைபாடுகளும் உட்பட) நியோபிளேட்டோவின் கலவைக்கோட்பாடுகளின்பேரில் அதிகம் சார்ந்திருந்தது.”—நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா (1967), புத். XIII, பக்கங்கள் 452, 454.

“உயிர்த்தெழுதலின் நம்பிக்கை யூத எண்ணத்துக்குரியதாயிருக்கையில், சாவாமையைப்பற்றிய இந்தக் கொள்கை கிரேக்க எண்ணத்தின் ஒரு விளைவேயாகும். . . . அலெக்ஸாந்தரின் வெற்றிகளைப் பின்தொடர்ந்து யூதமதம் படிப்படியாய்க் கிரேக்கக் கொள்கைகளைக் கிரகித்துக்கொண்டது.”—டிக்‍ஷனேரி என்ஸைக்ளோபீடிக் டி ல பைபிள் (வாலென்ஸ், ஃபிரான்ஸ்; 1935), அலெக்ஸான்டிர் உவெஸ்ட்பல் பதிப்பித்தது, புத். 2, பக். 557.

“ஆத்துமா சாவாமையுடையதென்பது பூர்வ இரகசிய மத வழிபாட்டு முறைகளில் உருவாக்கப்பட்டு தத்துவஞானி பிளேட்டோவால் விரிவாக்கப்பட்ட ஒரு கிரேக்கக் கோட்பாடாகும்.”—பிரெஸ்பிட்டேரியன் லைஃப், மே 1, 1970, பக். 35.

“மரணம் என்ற அத்தகைய ஒன்று உண்டென்று நாம் நம்புகிறோமா? . . . அது ஆத்துமாவும் உடலும் பிரிவதே அல்லவா? மரிப்பது இது முடிவாவதே; ஆத்துமா அவளில் இருக்கையிலும், அந்த உடலிலிருந்து விடுடுகையிலும் அந்த உடல் அந்த ஆத்துமாவிலிருந்து விடுடுகையிலும், அது மரணமேயல்லாமல் வேறு என்ன? . . . அந்த ஆத்துமா மரணமடைந்ததை ஒப்புக்கொள்கிறதா? இல்லை. அப்படியானால் அந்த ஆத்துமா சாவாமையுடையதா? ஆம்.”—பிளேட்டோவின் “பீடோ,” பிரிவுகள் 64, 105, மேற்கத்திய உலகத்தின் பெரும் புத்தகங்கள் (1952), என்பதில் பிரசுரிக்கப்பட்டபடி, R. M. ஹட்சின்ஸ் பதிப்பித்தது, புத். 7, பக். 223, 245, 246.

“சாவாமையைப்பற்றிய இந்தப் பிரச்னை, பாபிலோனிய இறைமையியல் வல்லுநர்களின் ஊக்கமான கவனத்தை ஈடுடுத்தியதை நாம் கண்டோம். . . . மத எண்ணத்தையுடைய மக்களோ அல்லது தலைவர்களோ, ஒருமுறை உயிருடனிருக்க அழைக்கப்பட்டது முழுமையாய் அழிந்துபோகும் சாத்தியத்தை ஒருபோதும் எதிர்ப்படவில்லை. மரணம் மற்றொரு வகையான வாழ்க்கைக்குச் செல்லும் வழியாக இருந்தது.”—பாபிலோனியா மற்றும் அசீரியாவின் மதம் (பாஸ்டன், 1898), M. ஜஸ்ட்ரோ, இளையவர், பக். 556.

மேலும் பக்கங்கள் 100-102, “மரணம்” என்ற தலைப்பின் கீழ்ப் பாருங்கள்.