Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் செய்தி—ரத்தினச் சுருக்கமாக

பைபிளின் செய்தி—ரத்தினச் சுருக்கமாக
  1. பசுஞ்சோலையில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்புடன் ஆதாம் ஏவாளை யெகோவா படைக்கிறார். கடவுள்மீது சாத்தான் பழிதூற்றுகிறான். மனிதர்களை அரசாள கடவுளுக்கு உரிமையில்லை என வாதாடுகிறான். சாத்தானுடைய கலகத்தில் ஆதாமும் ஏவாளும் சேர்ந்துகொள்கிறார்கள். கடைசியில் அவர்களுக்கும் அவர்களுடைய சந்ததிக்கும் பாவமும் மரணமும்தான் மிஞ்சுகிறது!

  2. கலகக்காரர்களுக்கு யெகோவா தண்டனை விதிக்கிறார்; இரட்சகர், அதாவது வாரிசு, தோன்றி கலகத்தினால் மற்றும் பாவத்தினால் வந்த எல்லா விளைவுகளையும் ஒழித்து, சாத்தானை நசுக்குவார் எனக் கடவுள் வாக்குறுதி அளிக்கிறார்

  3. என்றென்றும் அரசாளப்போகும் அந்த வாரிசுக்கு, அதாவது மேசியாவுக்கு, ஆபிரகாமும் தாவீதும் முன்னோர்களாய் இருப்பார்களென யெகோவா அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்

  4. பாவத்தையும் மரணத்தையும் மேசியா ஒழித்துக்கட்டுவார் என தீர்க்கதரிசிகள் வாயிலாக யெகோவா முன்னறிவிக்கிறார். கடவுளுடைய அரசாங்கத்தில் துணை அரசர்களுடன் இயேசு அரசாளுவார். போர்களுக்கும் வியாதிகளுக்கும், ஏன், மரணத்திற்கும் அந்த அரசாங்கம் முடிவுகட்டும்

  5. யெகோவா தமது மகனை இந்தப் பூமிக்கு அனுப்பி, இயேசுவே மேசியா என அடையாளம் காட்டுகிறார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு அறிவிக்கிறார், தமது உயிரையே பலியாகக் கொடுக்கிறார். பின்பு யெகோவா அவரை விண்ணுலகத்திற்கு உயிர்த்தெழுப்புகிறார்

  6. யெகோவா தமது மகனை விண்ணுலகத்தில் அரசராக அமர்த்துகிறார்; அதுமுதல் இந்தப் பொல்லாத உலகத்தின் கடைசி நாட்கள் ஆரம்பமாயின. இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி உலகெங்கும் அறிவிக்கிறார்கள், இயேசு அவர்களை வழிநடத்துகிறார்

  7. பூமியை ஆளும்படி யெகோவா தமது மகனுக்குக் கட்டளையிடுகிறார். அவருடைய அரசாங்கம் தற்போதைய பொல்லாத அரசாங்கங்களை ஒழித்துக்கட்டி, இப்பூமியை பசுஞ்சோலையாய் மாற்றுகிறது, நல்லவர்களைப் பரிபூரணராக்குகிறது. மனிதர்களை ஆளும் உரிமை தமக்கே இருக்கிறது என்பதை யெகோவா நிரூபித்துக் காட்டுகிறார், அவரது பெயர் மீதுள்ள களங்கம் நீக்கப்பட்டு புனிதமாக்கப்படுகிறது