Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 2

உண்மையான கடவுள் யார்?

உண்மையான கடவுள் யார்?

உண்மையான கடவுள் ஒருவர்தான். அவர் பெயர் யெகோவா. (சங்கீதம் 83:18) அவர் பரலோகத்தில் இருக்கிறார், நாம் அவரைப் பார்க்க முடியாது. அவர் நம்மேல் அதிக அன்பு வைத்திருப்பதால் நாமும் அவரிடம் அன்பு காட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். மற்றவர்களிடமும் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார். (மத்தேயு 22:35-40) அவர் எல்லாரையும்விட உயர்ந்தவர். அவர்தான் எல்லாவற்றையும் படைத்தார்.

யெகோவா முதன்முதலில் மிகவும் சக்தியுள்ள ஒரு தேவதூதரைப் படைத்தார். அந்தத் தேவதூதர்தான், பிற்பாடு இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்டார். அவரைப் படைத்த பிறகு இன்னும் நிறைய தேவதூதர்களை யெகோவா படைத்தார்.

பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற . . . எல்லாவற்றையும் யெகோவா படைத்தார். வெளிப்படுத்துதல் 4:11

வானத்தில் இருக்கிற நட்சத்திரங்களையும் பூமியில் இருக்கிற எல்லாவற்றையும் யெகோவா படைத்தார்.—ஆதியாகமம் 1:1.

முதல் மனுஷனை மண்ணிலிருந்து கடவுள் படைத்தார். அவன் பெயர் ஆதாம்.—ஆதியாகமம் 2:7.