Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 6

நோவா காலத்தில் வந்த வெள்ளத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

நோவா காலத்தில் வந்த வெள்ளத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

கெட்டவர்களைக் கடவுள் அழித்தார், ஆனால் நோவாவின் குடும்பத்தை மட்டும் காப்பாற்றினார். ஆதியாகமம் 7:11, 12, 23

40 நாட்களுக்கு விடாமல் மழை கொட்டியது. பூமியில் இருந்த எல்லாமே தண்ணீரில் மூழ்கியது. கெட்டவர்கள் எல்லாரும் செத்துப்போனார்கள்.

ஆனால், பூமிக்கு வந்த கெட்ட தூதர்கள் தங்கள் மனித உடல்களை விட்டுவிட்டு பரலோகத்துக்குத் திரும்பி போனார்கள். அவர்களைத்தான் பேய்கள் என்று பைபிள் சொல்கிறது.

பேழையில் இருந்தவர்கள் மட்டும்தான் தப்பித்தார்கள். பல வருஷம் கழித்து அவர்களும் இறந்துபோனார்கள், ஆனால் அவர்களுக்குக் கடவுள் மறுபடியும் உயிர் கொடுப்பார். பிறகு, அவர்கள் என்றென்றும் உயிரோடு வாழலாம்.

கெட்டவர்களைச் சீக்கிரத்தில் கடவுள் அழிப்பார், நல்லவர்களைக் காப்பாற்றுவார். மத்தேயு 24:37-39

இன்றைக்குக்கூட, தப்பு செய்வதற்கு சாத்தானும் பேய்களும் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள்.

நோவா காலத்தில் இருந்த ஜனங்கள் மாதிரியே, இன்றைக்கும் நிறைய பேர் யெகோவா சொல்வதைக் கேட்பதில்லை. அவர்கள் எல்லாரையும் சீக்கிரத்தில் அவர் அழிக்கப்போகிறார். —2 பேதுரு 2:5, 6.

நோவா மாதிரியே இன்றும் சிலர் கடவுள் சொல்வதைக் கேட்டு நடக்கிறார்கள். அவர்கள்தான் யெகோவாவின் சாட்சிகள்.