Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 3

பைபிளில் இருக்கும் உண்மைகளை மறுபடியும் எப்படி கண்டுபிடித்தோம்?

பைபிளில் இருக்கும் உண்மைகளை மறுபடியும் எப்படி கண்டுபிடித்தோம்?

1870-களில் பைபிள் மாணாக்கர்கள்

முதல் காவற்கோபுரம், 1879

இன்று காவற்கோபுரம்

இயேசு இறந்த பிறகு சபையில் இருந்த சிலர் பைபிளில் இருக்கும் உண்மைகளை மாற்றி சொல்வார்கள் என்று பைபிள் முன்பே சொல்லியிருந்தது. (அப்போஸ்தலர் 20:29, 30) பைபிள் சொன்னது போலவே நடந்தது. இயேசு கற்றுக்கொடுத்த விஷயங்களோடு பொய் மதத்தில் இருக்கிற விஷயங்களை சிலர் கலப்படம் செய்தார்கள். இப்படித்தான் பொய்யான கிறிஸ்தவ மதம் ஆரம்பமானது. (2 தீமோத்தேயு 4:3, 4) ஆனால், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்று நாம் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?

யெகோவா சரியான நேரத்தில் உண்மைகளைத் தெரியப்படுத்தினார். ‘முடிவு காலத்தில் உண்மையான அறிவு பெருகும்’ என்று யெகோவா ஏற்கெனவே சொல்லியிருந்தார். (தானியேல் 12:4) பைபிளில் ஆர்வம் இருக்கும் சிலர் சர்ச் சொல்லிக்கொடுக்கிற நிறைய விஷயங்கள் தவறு என்று 1870-ல் தெரிந்துகொண்டார்கள். அதனால் பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்க ஆரம்பித்தார்கள். பைபிளில் இருக்கும் உண்மைகளை புரிந்துகொள்ள யெகோவா அவர்களுக்கு உதவி செய்தார்.

பைபிள் மாணாக்கர்கள் பைபிளை நன்றாக படிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து பைபிளில் இருக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ச்சி செய்தார்கள். கடவுளுடைய பெயர், கடவுளுடைய அரசாங்கம், பூமியை அவர் எதற்காக படைத்தார், மனிதனை எதற்காக படைத்தார், இறந்தவர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது, இறந்தவர்களை கடவுள் உயிரோடு எழுப்புவாரா... இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பைபிளில் ஆராய்ச்சி செய்தார்கள். அப்படி ஆராய்ச்சி செய்யும்போது ஒரு வசனம் புரியவில்லை என்றால், அதற்கான பதிலை பைபிளிலேயே தேடினார்கள். அதாவது, அது சம்பந்தமான மற்ற வசனங்களை எடுத்து பார்த்தார்கள். அந்த வசனங்களோடு ஒத்துப்போகிற பதிலை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு அதை எழுதி வைத்தார்கள். எதற்குமே அவர்கள் சொந்தமாக விளக்கம் கொடுக்கவில்லை, பைபிள் கொடுக்கிற விளக்கத்தைதான் ஏற்றுக்கொண்டார்கள். இப்படி படித்ததால், பொய் போதனையில் இருந்தும் சடங்கு சம்பிரதாயத்தில் இருந்தும் ஒரு பெரிய விடுதலை கிடைத்தது. அவர்கள் படித்ததைப் போலவே இன்று நாங்களும் பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்கிறோம்.—யோவான் 8:31, 32.

பைபிளில் இருக்கும் உண்மைகளை எல்லாருக்கும் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பைபிள் மாணாக்கர்கள் புரிந்துகொண்டார்கள். அதனால், 1879-ல், காவற்கோபுரம் என்ற பத்திரிகையை வெளியிட ஆரம்பித்தார்கள். அந்த பத்திரிகையை இன்றுவரை நாங்கள் வெளியிடுகிறோம். இன்று 240 நாடுகளில்... 750-க்கும் அதிகமான மொழிகளில்... பைபிளில் இருக்கும் உண்மைகளை எல்லாருக்கும் சொல்கிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பைபிள் அறிவு அதிகமாகியிருக்கிறது!

  • கிறிஸ்து இறந்த பிறகு பைபிளில் இருக்கும் உண்மைகளுக்கு என்ன ஆனது?

  • பைபிளில் இருக்கும் உண்மைகள் எங்களுக்கு எப்படித் தெரிந்தது?