Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 6

நாம் ஏன் கூட்டங்களுக்குப் போக வேண்டும்?

நாம் ஏன் கூட்டங்களுக்குப் போக வேண்டும்?

மடகாஸ்கர்

நார்வே

லெபனான்

இத்தாலி

எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி, எவ்வளவு வெயில் அடித்தாலும் சரி, மழை கொட்டினாலும் சரி, நாங்கள் சபைக் கூட்டங்களுக்குத் தவறாமல் போவோம். என்னதான் கஷ்டம் இருந்தாலும், நாள் முழுவதும் வேலை செய்தாலும், களைப்பாக இருந்தாலும், அதையெல்லாம் பார்க்காமல் கூட்டங்களுக்குப் போய்விடுவோம். கூட்டங்களுக்குத் தவறாமல் போவதற்கு நாங்கள் ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறோம்?

பிரச்சினைகளை சமாளிக்க கூட்டங்கள் ரொம்ப உதவியாக இருக்கின்றன. கூட்டங்களுக்கு வரும் எல்லாரும் “ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்” என்று பவுல் சொன்னார். (எபிரெயர் 10:24) அதாவது, அவர்களைப் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது அவர்களுக்கு வந்த பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்கள் என்று தெரிந்துகொள்வோம். அந்த மாதிரி பிரச்சினைகள் நமக்கு வரும்போது அதை சமாளிக்க அவர்கள் உதவி செய்வார்கள்.

அங்கே நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். கூட்டங்களுக்கு வருகிறவர்களோடு நாங்கள் ஏதோ பெயருக்கென்று பழகாமல், உயிர் நண்பர்களைப் போல் பழகுகிறோம். கூட்டங்களுக்குப் போகும்போது மட்டுமல்ல மற்ற சமயங்களிலும் அவர்களோடு நேரம் செலவழிக்கிறோம். அதனால், அவர்கள் மேல் அன்பும் பாசமும் இன்னும் அதிகமாகிறது, அவர்களை மதித்து நடக்கவும் முடிகிறது. அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் உடனே போய் உதவி செய்கிறோம். (நீதிமொழிகள் 17:17) கூட்டங்களுக்கு வருகிற எல்லாரிடமும் உண்மையான அக்கறையை காட்டுகிறோம்.—1 கொரிந்தியர் 12:25, 26.

கடவுள் சொல்வதுபோல் நடக்கிறவர்களை உங்கள் நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள். எங்களுடைய கூட்டங்களுக்கு வந்தால் உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதனால், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு வருவதை நிறுத்திவிடாதீர்கள்.

  • கூட்டங்களுக்குப் போவது நமக்கு எப்படி உதவியாக இருக்கும்?

  • எங்கள் கூட்டங்களுக்கு நீங்கள் எப்போது வரப்போகிறீர்கள்?