Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 7

கூட்டங்களில் என்ன கற்றுக்கொள்கிறோம்?

கூட்டங்களில் என்ன கற்றுக்கொள்கிறோம்?

நியுசிலாந்து

ஜப்பான்

உகாண்டா

லிதுவேனியா

ஆரம்ப காலத்தில் நடந்த கிறிஸ்தவ கூட்டங்களில் பாட்டு பாடினார்கள், ஜெபம் செய்தார்கள், பைபிளை வாசித்து அதற்கு விளக்கம் கொடுத்தார்கள். ஆனால், எந்த சடங்கு சம்பிரதாயமும் செய்யவில்லை. (1 கொரிந்தியர் 14:26) அதேபோல்தான் இன்றும் எங்களுடைய கூட்டங்கள் நடக்கின்றன.

வாழ்க்கைக்குத் தேவையான பைபிள் ஆலோசனைகளைக் கற்றுக்கொள்கிறோம். பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமையில் ஒரு கூட்டம் நடக்கும். முதலில் 30 நிமிடங்களுக்கு பைபிள் பேச்சு இருக்கும். அதில், வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களையும் உலக நிலைமைகளையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். பேச்சு கொடுக்கிறவர் வசனங்களை வாசிக்கும்போது நாமும் பைபிளை திறந்து பார்க்கலாம். அதற்குப் பிறகு, ஒரு மணி நேரத்திற்கு “காவற்கோபுர” படிப்பு இருக்கும். காவற்கோபுர படிப்பு இதழில் இருக்கிற ஒரு கட்டுரையை படிப்போம். கூட்டத்திற்கு வந்திருக்கிற எல்லாரும் பதில் சொல்லலாம். இப்படி படிப்பதால் பைபிள் சொல்கிறபடி வாழ்வதற்குக் கற்றுக்கொள்கிறோம். உலகம் முழுவதும் இருக்கிற 1,10,000-க்கும் அதிகமான சபைகளிலும் அதே கட்டுரையைத்தான் படிப்பார்கள்.

மற்றவர்களுக்கு நன்றாக சொல்லிக்கொடுப்பது எப்படி என்று கற்றுக்கொள்கிறோம். ஞாயிற்றுக்கிழமை தவிர இன்னொரு நாள் சாயங்காலம் நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் என்ற கூட்டம் நடக்கும். வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகத்தில் இருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி மூன்று பகுதிகளாக இந்தக் கூட்டம் நடக்கும். முதல் பகுதியின் தலைப்பு, பைபிளில் இருக்கும் புதையல்கள். இந்தப் பகுதியில், அந்தந்த வாரத்துக்கான பைபிள் வாசிப்பு பகுதியில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வோம். இரண்டாவது பகுதியின் தலைப்பு, ஊழியத்தை நன்றாக செய்யுங்கள். இந்தப் பகுதியில், பைபிளில் இருக்கும் விஷயங்களை ஊழியத்தில் எப்படி நன்றாக பேசலாம் என்பதை நடிப்புகள் மூலமாக கற்றுக்கொள்வோம். கூட்டத்தை நடத்தும் சகோதரர், பைபிளை நன்றாக வாசிப்பதற்கும் ஊழியத்தில் நன்றாக பேசுவதற்கும் ஆலோசனைகளை கொடுப்பார். (1 தீமோத்தேயு 4:13) மூன்றாவது பகுதியின் தலைப்பு, கிறிஸ்தவர்களாக வாழுங்கள். இந்தப் பகுதியில், பைபிள் தரும் ஆலோசனைகளை வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கலாம் என்பதை கற்றுக்கொள்வோம். பைபிளில் இருக்கும் விஷயங்களை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள கேள்வி-பதில் முறையில் சில கட்டுரைகள் இருக்கும்.

எங்கள் கூட்டங்களுக்கு வந்தால், பைபிளிலிருந்து நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள், அதற்காக ரொம்ப சந்தோஷப்படுவீர்கள்.—ஏசாயா 54:13.

  • யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் கூட்டத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • நீங்கள் எந்தக் கூட்டத்திற்கு வர ஆசைப்படுகிறீர்கள்?