Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 17

வட்டார கண்காணிகள் எப்படி உதவி செய்கிறார்கள்?

வட்டார கண்காணிகள் எப்படி உதவி செய்கிறார்கள்?

மலாவி

ஊழியத் தொகுதி

வெளி ஊழியம்

மூப்பர்கள் கூட்டம்

பர்னபாவையும் அப்போஸ்தலன் பவுலையும் பற்றி பைபிளில் நிறைய இடங்களில் படிக்கிறோம். இவர்கள் பயண கண்காணிகளாக சேவை செய்தார்கள். ஒவ்வொரு சபைக்கும் போய், அங்கிருந்தவர்களை சந்தித்தார்கள். ஏன்? ஏனென்றால் அந்த சபைகளில் இருந்தவர்கள்மீது அவர்களுக்கு ரொம்ப அக்கறை இருந்தது. மற்ற ஊர்களில் இருந்த சகோதரர்களை மறுபடியும் சந்தித்து பேச ஆசையாக இருப்பதாக பவுலும் சொன்னார். அதற்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்தார். சகோதரர்களைப் பார்த்து உற்சாகமாக பேசி, பலப்படுத்தினார். (அப்போஸ்தலர் 15:36) அதேபோல், இன்று இருக்கிற வட்டார கண்காணிகளும் சபையில் இருக்கிறவர்களிடம் உற்சாகமாக பேசுகிறார்கள், அவர்களை பலப்படுத்துகிறார்கள்.

எங்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு வட்டார கண்காணியும் கிட்டத்தட்ட 20 சபைகளை வருஷத்திற்கு இரண்டு தடவை சந்திக்கிறார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சபைக்குப் போகிறார். இவரிடம் இருந்தும் இவருடைய மனைவியிடம் இருந்தும் நிறைய கற்றுக்கொள்ளலாம். சிறியவர்கள் பெரியவர்கள் என எல்லாரிடமும் இவர்கள் நன்றாகப் பழகுகிறார்கள். எங்களோடு சேர்ந்து ஊழியம் செய்கிறார்கள். நாங்கள் நடத்துகிற பைபிள் படிப்புக்கு வருகிறார்கள். மூப்பர்களோடு சேர்ந்து வட்டார கண்காணிகள் எங்கள் வீட்டுக்கு வந்து உற்சாகப்படுத்துகிறார்கள். அதோடு, கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பேச்சுகள் கொடுத்து எங்களை பலப்படுத்துகிறார்கள்.—அப்போஸ்தலர் 15:35.

எல்லார்மீதும் அக்கறை காட்டுகிறார்கள். சபையில் இருக்கிறவர்கள் கடவுளுக்கு இன்னும் நன்றாக சேவை செய்ய வட்டார கண்காணிகள் உதவி செய்கிறார்கள். சபையின் முன்னேற்றத்தைப் பற்றி மூப்பர்களிடமும் உதவி ஊழியர்களிடமும் பேசுகிறார்கள். அதோடு, அவர்களுடைய பொறுப்புகளை இன்னும் நல்லபடியாக செய்ய சொல்லித்தருகிறார்கள். ஊழியத்தை நன்றாகச் செய்வதற்கு பயனியர்களுக்கு உதவி செய்கிறார்கள். புதிதாக சபைக்கு வருகிறவர்களிடம் பேசுகிறார்கள். அவர்கள் எந்தளவுக்கு மாற்றங்களை செய்துவருகிறார்கள் என்று தெரிந்துகொள்கிறார்கள். வட்டார கண்காணிகள் நம் ‘நலனுக்காக உழைக்கிற சக வேலையாட்களாக’ இருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 8:23) கடவுள்மீது அவர்கள் பயபக்தியாக, நம்பிக்கையாக இருப்பது போல் நாமும் இருக்க வேண்டும்.—எபிரெயர் 13:7.

  • வட்டார கண்காணிகள் ஏன் சபைகளை சந்திக்கிறார்கள்?

  • வட்டார கண்காணியின் சந்திப்பிலிருந்து நன்மையடைய நீங்கள் என்ன செய்ய வேண்டும்?