Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 19

உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?

உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?

கடவுளைப் பற்றி தெரிந்துகொள்வதால் நாம் நன்மை அடைகிறோம்.

இயேசு இறப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு, சீடர்கள் நான்கு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார். கடைசி நாட்களைப் பற்றி அந்த சமயத்தில் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது அவர்களிடம், “ஏற்ற வேளையில் தன்னுடைய வீட்டாருக்கு உணவு கொடுப்பதற்காக எஜமான் நியமித்த உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?” என்று கேட்டார். (மத்தேயு 24:3, 45; மாற்கு 13:3, 4) கடைசி காலத்தில் வாழ்கிறவர்களுக்கு “உணவு கொடுப்பதற்காக,” அதாவது ஆன்மீக உணவு கொடுப்பதற்காக, சிலரை கண்டிப்பாக ஏற்பாடு செய்வதாக இயேசு சொன்னார். இயேசுதான் அந்த “எஜமான்” என்று நமக்கு தெரியும். ஆனால் “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” என்று சொன்னாரே, அந்த அடிமை யார்?

பரலோகத்துக்குப் போகிற நம்பிக்கை இருக்கிறவர்களில் சிலர். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுதான் அந்த “அடிமை.” அந்த அடிமைதான் “போதுமான உணவை ஏற்ற வேளையில்” தருகிறார்கள். (லூக்கா 12:42) அதாவது, பைபிள் விஷயங்களை சரியான சமயத்தில் எங்களுக்கு சொல்லித்தருகிறார்கள்.

கடவுளுடைய வீட்டாரை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். (1 தீமோத்தேயு 3:15) யெகோவாவின் வேலையை கவனித்துக்கொள்கிற முக்கியமான பொறுப்பை அந்த அடிமைக்கு இயேசு கொடுத்திருக்கிறார். அதாவது, கடவுளுடைய வேலைக்காக பயன்படுத்துகிற எல்லா கட்டிடங்களையும் கவனித்துக்கொள்வது... பிரசங்க வேலையைப் பார்த்துக்கொள்வது... சபை மூலமாக நமக்கு சொல்லித்தருவது... இதுபோன்ற எல்லா பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறார். இயேசு சொன்னதைப் போலவே அந்த அடிமையும் சரியான நேரத்தில் நமக்கு ஆன்மீக உணவை கொடுக்கிறார்கள். அதாவது புத்தகங்கள், கூட்டங்கள், மாநாடுகள் மூலமாக பைபிள் சம்பந்தமான விஷயங்களைச் சொல்லித்தருகிறார்கள்.

பைபிளில் உள்ளதை உள்ளபடி சொல்கிறார்கள். பிரசங்க வேலையை சுறுசுறுப்பாக செய்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் உண்மையாக இருக்கிறார்கள். இயேசு எதையெல்லாம் கவனிக்கச் சொல்லி அவர்களிடம் சொன்னாரோ அதையெல்லாம் விவேகமாக கவனித்துக்கொள்கிறார்கள். (அப்போஸ்தலர் 10:42) யெகோவா அவர்களை ஆசீர்வதித்திருக்கிறார். எப்படி? அவர்கள் செய்கிற சேவையினால் நிறையப் பேர் யெகோவாவின் சாட்சிகளாக ஆகியிருக்கிறார்கள். அதோடு, கடவுளைப் பற்றி நமக்கு நிறைய சொல்லித்தருவதற்கு யெகோவா அவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.—ஏசாயா 60:22; 65:13.

  • சீடர்களுக்கு பைபிள் விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பதற்கு இயேசு யாரை ஏற்பாடு செய்திருக்கிறார்?

  • அவர்கள் எப்படி உண்மையாகவும் விவேகமாகவும் இருக்கிறார்கள்?