Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 20

இன்று ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்?

இன்று ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்?

முதல் நூற்றாண்டில் இருந்த ஆளும் குழு

ஆளும் குழு எழுதிய கடிதத்தைப் படிக்கிறார்கள்

முதல் நூற்றாண்டில் இருந்த ஆளும் குழுவில் ‘அப்போஸ்தலர்களும் மூப்பர்களும்’ இருந்தார்கள். அந்த ஆளும் குழு எருசலேமில் இருந்தது. (அப்போஸ்தலர் 15:2) அந்த குழுவில் இருந்தவர்கள்தான் பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் சார்பாக முக்கியமான தீர்மானங்களை எடுத்தார்கள். தீர்மானம் எடுப்பதற்கு முன்பு பைபிள் என்ன சொல்கிறது என்று கலந்து பேசினார்கள், கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியை ஏற்றுக்கொண்டார்கள். இப்படித்தான் எல்லா தீர்மானங்களையும் ஒருமனதாக எடுத்தார்கள். (அப்போஸ்தலர் 15:26) அதேபோல்தான், இன்றும் ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் தீர்மானங்களை எடுக்கிறார்கள்.

கடவுள் அவருடைய வேலையை செய்வதற்கு ஆளும் குழுவைப் பயன்படுத்துகிறார். ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் பைபிளைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஊழிய வேலைகளை நன்றாக கவனித்துக்கொள்வதற்கும் பைபிள் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும் இவர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. இவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒன்றாகக் கூடி உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளின் தேவைகளைப் பற்றி பேசுகிறார்கள். முதல் நூற்றாண்டில் இருந்த ஆளும் குழுவைப் போலவே கடிதங்கள் மூலமாக, பயண கண்காணிகள் மூலமாக, மற்றவர்கள் மூலமாக பைபிளிலிருந்து அறிவுரைகளைக் கொடுக்கிறார்கள். அதனால்தான், யெகோவாவின் சாட்சிகள் எல்லாராலும் ஒரே மாதிரி யோசிக்கவும் நடந்துகொள்ளவும் முடிகிறது. (அப்போஸ்தலர் 16:4, 5) புத்தகங்களை தயாரிப்பது, வீடியோக்களை தயாரிப்பது... போன்ற நிறைய வேலைகளை ஆளும் குழு மேற்பார்வை செய்கிறார்கள், பிரசங்க வேலையை மும்முரமாக செய்ய உற்சாகப்படுத்துகிறார்கள். சில முக்கியமான பொறுப்புகளை செய்ய சகோதரர்களை நியமிக்க வேண்டியிருக்கிறது. அந்த வேலையையும் மேற்பார்வை செய்கிறார்கள்.

கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறார்கள். சர்வலோகத்தின் ராஜாவான யெகோவாவும், சபைக்குத் தலைவரான இயேசுவும் சொல்கிறபடி ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் செய்கிறார்கள். (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:23) ‘நாங்கதான் கடவுளோட மக்களுக்கு தலைவர்கள்’ என்று ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் நினைப்பது இல்லை. அந்த குழுவில் இருக்கிறவர்களும் சரி பரலோக நம்பிக்கையுள்ள மற்றவர்களும் சரி, ‘ஆட்டுக்குட்டியானவர் [இயேசு] போகிற இடங்களுக்கெல்லாம் அவர் பின்னாலேயே போகிறார்கள்.’ (வெளிப்படுத்துதல் 14:4) ஆளும் குழுவில் இருக்கிற சகோதரர்களுக்காக நாம் ஜெபம் செய்யும்போது அவர்கள் ரொம்ப சந்தோஷப்படுவார்கள்.

  • முதல் நூற்றாண்டில் இருந்த ஆளும் குழுவில் யாரெல்லாம் இருந்தார்கள்?

  • இன்று ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் கடவுள் சொல்வதை எப்படித் தெரிந்துகொள்கிறார்கள்?