Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 21

பெத்தேல் என்றால் என்ன?

பெத்தேல் என்றால் என்ன?

ஆர்ட் டிபார்ட்மெண்ட், அமெரிக்கா

ஜெர்மனி

கென்யா

கொலம்பியா

பெத்தேல் என்ற எபிரெய வார்த்தைக்கு ‘கடவுளுடைய வீடு’ என்று அர்த்தம். (ஆதியாகமம் 28:17, 19) யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகங்களை பெத்தேல் என்று சொல்கிறோம். இந்த அலுவலகங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. பிரசங்க வேலையைச் செய்வதற்கு தேவையான அறிவுரைகள், புத்தகங்கள் எல்லாம் இங்கிருந்துதான் எங்களுக்கு கிடைக்கிறது. எங்களுடைய தலைமை அலுவலகம் அமெரிக்காவில் இருக்கிறது. ஆளும் குழுவைச் சேர்ந்தவர்கள் அங்குதான் இருக்கிறார்கள். மற்ற நாடுகளில் இருக்கிற கிளை அலுவலகங்களை அவர்கள்தான் கவனித்துக்கொள்கிறார்கள். இங்கே வேலை செய்கிறவர்களை பெத்தேல் குடும்பம் என்று சொல்கிறோம். அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் தங்கி... ஒன்றாக வேலை செய்து... ஒன்றாக சாப்பிட்டு... ஒன்றாக பைபிள் படித்து... ஒரே குடும்பம் போல் இருக்கிறார்கள்.—சங்கீதம் 133:1.

இது ஒரு அருமையான இடம். பெத்தேல் குடும்பத்தில் இருக்கிறவர்கள் மற்றவர்களுக்காக சேவை செய்கிறார்கள். கடவுளுடைய வேலையை செய்வதற்காக பெத்தேலில் இருக்கிறவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். நாள் முழுவதும் அங்கேயே வேலை செய்கிறார்கள். (மத்தேயு 6:33) அவர்கள் யாருமே சம்பளத்திற்கு வேலை செய்வதில்லை. ஆனால், அவர்களுக்கு சாப்பாடும் தங்க இடமும் செலவுக்கு கொஞ்சம் பணமும் கிடைக்கும். பெத்தேலில் இருக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்கிறார்கள். உதாரணமாக, ஆஃபீஸ் வேலை செய்வது, சமையல் செய்வது, சாப்பாடு பரிமாறுவது, புத்தகங்களை அச்சடிப்பது, பைண்டிங் செய்வது, அறைகளை சுத்தம் செய்வது, துணி துவைப்பது, ரிப்பேர் ஆனதை சரி செய்வது... என பல வேலைகளைச் செய்கிறார்கள்.

பிரசங்க வேலை நடப்பதற்கு பெத்தேலில் இருக்கிறவர்கள் உதவுகிறார்கள். எல்லா வேலையையும்விட பிரசங்க வேலைதான் முக்கியம். அந்த வேலை சரியாக நடந்தால்தான் பைபிளில் இருக்கிற உண்மைகளை எல்லாரும் தெரிந்துகொள்ள முடியும். (மாற்கு 13:10) பிரசங்க வேலைக்கு தேவையான எல்லா உதவியையும் பெத்தேலில் இருக்கிறவர்கள் செய்கிறார்கள். நீங்கள் படித்துக்கொண்டிருக்கிற இந்தப் புத்தகம்கூட பெத்தேலில் இருந்துதான் வந்திருக்கிறது. ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் எல்லா புத்தகங்களையும் ஆங்கிலத்தில் தயாரிக்கிறார்கள். அதை உலகம் முழுவதும் இருக்கிற மொழிபெயர்ப்பு அலுவலகங்களுக்கு கம்ப்யூட்டர் மூலமாக அனுப்புகிறார்கள். அதை மொழிபெயர்த்த பிறகு பெத்தேலில் இருக்கிற அதிவேக பிரிண்டிங் மெஷினில் அச்சடிக்கிறார்கள். கடைசியில் 1,10,000-க்கும் அதிகமான சபைகளுக்கு அந்தப் புத்தகங்களை அனுப்பி வைக்கிறார்கள்.

  • எப்படிப்பட்டவர்கள் பெத்தேலில் வேலை செய்கிறார்கள், அவர்களுடைய தேவைகளை கவனித்துக்கொள்ள என்ன செய்யப்படுகிறது?

  • பெத்தேலில் இருக்கிறவர்கள் எந்த வேலைக்கு முக்கியமாக உதவி செய்கிறார்கள்?