Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 22

கிளை அலுவலகத்தில் என்னென்ன வேலைகள் நடக்கின்றன?

கிளை அலுவலகத்தில் என்னென்ன வேலைகள் நடக்கின்றன?

சாலமன் தீவுகள்

கனடா

தென் ஆப்பிரிக்கா

பெத்தேல் குடும்பத்தில் இருக்கிறவர்கள் நிறைய டிபார்ட்மெண்டில் வேலை செய்கிறார்கள். உதாரணமாக, மொழிபெயர்ப்பது, புத்தகங்களை அச்சடிப்பது, பைண்டிங் செய்வது, புத்தகங்களை சபைகளுக்கு அனுப்புவது, ஆடியோ-வீடியோ தயாரிப்பது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள். இவர்கள் செய்கிற இந்த எல்லா வேலையும் அந்தந்த நாட்டிலோ மற்ற நாடுகளிலோ நடக்கிற பிரசங்க வேலைக்கு உதவியாக இருக்கிறது.

பிரசங்க வேலை சம்பந்தமான எல்லா வேலைகளையும் கிளை அலுவலக குழுவினர் கவனித்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு கிளை அலுவலகத்தையும் கவனித்துக்கொள்ள கிளை அலுவலக குழு இருக்கிறது. அந்த குழுவில் குறைந்தது மூன்று மூப்பர்களாவது இருப்பார்கள். ஆளும் குழுவினர்தான் இவர்களை நியமிக்கிறார்கள். அந்தந்த நாட்டில் நடக்கிற பிரசங்க வேலையை கிளை அலுவலக குழுவினர் கவனித்துக்கொள்கிறார்கள். அதோடு, பிரசங்க வேலையைப் பற்றியும் அது சம்பந்தமாக வருகிற பிரச்சினைகளைப் பற்றியும் ஆளும் குழுவினருக்கு சொல்கிறார்கள். அவர்கள் கொடுக்கிற அறிக்கையை வைத்துத்தான் எந்த மாதிரி கட்டுரைகளைத் தயாரிக்கலாம், எந்த விஷயங்களைப் பற்றி கூட்டங்களில், மாநாடுகளில் கற்றுக்கொடுக்கலாம் என்று ஆளும் குழுவினர் முடிவு செய்கிறார்கள். இவர்கள்தான் ஒவ்வொரு கிளை அலுவலகத்துக்கும் சில பிரதிநிதிகளை அனுப்புகிறார்கள். கிளை அலுவலக குழுவில் இருக்கிறவர்கள் அவர்களுடைய பொறுப்பை நல்லபடியாக செய்வதற்கு இந்த பிரதிநிதிகள் உதவி செய்கிறார்கள். (நீதிமொழிகள் 11:14) அதுமட்டுமல்ல, அந்த நாட்டில் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளை உற்சாகப்படுத்த ஒரு விசேஷ பேச்சும் கொடுக்கிறார்கள்.

சபைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார்கள். கிளை அலுவலகத்தில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் சகோதரர்கள் புதிதாக சபைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். இன்னும் சில சகோதரர்கள் பயனியர்கள், மிஷனரிகள், வட்டார கண்காணிகளுக்கு தேவையான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள். மாநாடுகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். ராஜ்ய மன்றங்களை கட்டும் வேலையைப் பார்த்துக்கொள்கிறார்கள். சபைகளுக்குத் தேவையான பத்திரிகைகளையும் புத்தகங்களையும் அனுப்பும் வேலையை கவனித்துக்கொள்கிறார்கள். பிரசங்க வேலை நல்லபடியாக நடப்பதற்கு கிளை அலுவலகத்தில் இருக்கிற எல்லாரும் ரொம்ப உதவியாக இருக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 14:33, 40.

  • கிளை அலுவலக குழுவில் இருக்கிறவர்கள் ஆளும் குழுவுக்கு எப்படி உதவி செய்கிறார்கள்?

  • கிளை அலுவலகத்தில் இருக்கிறவர்கள் எதையெல்லாம் கவனித்துக்கொள்கிறார்கள்?