Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 24

உலகம் முழுவதும் நாங்கள் செய்கிற வேலைக்கு எப்படி பணம் கிடைக்கிறது?

உலகம் முழுவதும் நாங்கள் செய்கிற வேலைக்கு எப்படி பணம் கிடைக்கிறது?

நேபாளம்

டோகோ

பிரிட்டன்

ஒவ்வொரு வருடமும் பைபிளையும் பைபிள் சம்பந்தமான புத்தகங்களையும் கோடிக்கணக்கில் அச்சடித்து, ஜனங்களுக்கு இலவசமாக கொடுக்கிறோம். ராஜ்ய மன்றங்களையும் கிளை அலுவலகங்களையும் கட்டுகிறோம், அதையெல்லாம் பராமரிக்கிறோம். மிஷனரிகளையும் பெத்தேலில் சேவை செய்கிற ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளையும் கவனித்துக்கொள்கிறோம். பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறோம். இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.

நாங்கள் தசமபாகம் வாங்குவதில்லை, காணிக்கை வசூல் செய்வதில்லை. மேலே சொன்ன அனைத்து வேலைகளுக்கும் நிறைய பணம் தேவைப்பட்டாலும், நாங்கள் யாரிடமும் பணத்துக்காக கெஞ்சுவதும் கிடையாது, யாரையும் வற்புறுத்துவதும் கிடையாது. நூறு வருடங்களுக்கு முன்பு வந்த காவற்கோபுர பத்திரிகையில் எங்களுக்கு யெகோவா உதவி செய்வார் என்று சொல்லியிருந்தோம். அதோடு, “பணத்துக்காக நாங்கள் யாரிடமும் கையேந்த மாட்டோம், உதவி கேட்டு கெஞ்ச மாட்டோம்” என்றும் சொல்லியிருந்தோம். சொன்ன மாதிரியே இதுவரைக்கும் நாங்கள் யாரிடமும் பணத்துக்காக கெஞ்சினதில்லை.—மத்தேயு 10:8.

இந்த வேலைக்காக ஜனங்கள் விருப்பப்பட்டு நன்கொடை கொடுக்கிறார்கள். உலகம் முழுவதும் நடக்கிற கடவுளுடைய வேலைக்காக எங்களுடைய நேரத்தையும் பணத்தையும் சக்தியையும் தாராளமாக கொடுக்கிறோம். (1 நாளாகமம் 29:9) உலகம் முழுவதும் இருக்கிற ஜனங்களுக்கு பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுக்க நிறைய புத்தகங்களைத் தயாரிக்கிறோம். இந்த வேலையைப் பாராட்டி மற்றவர்களும் நன்கொடை கொடுக்கிறார்கள். நன்கொடை கொடுக்க ஆசைப்படுகிறவர்களுக்காக ராஜ்ய மன்றங்களிலும் மாநாடு நடக்கிற இடங்களிலும் நன்கொடை பெட்டிகள் இருக்கின்றன. jw.org வெப்சைட் மூலமாகவும் நன்கொடைகளை கொடுக்கலாம். இயேசு வாழ்ந்த காலத்தில், ஆலயத்தில் இருந்த காணிக்கை பெட்டியில் ஒரு ஏழை விதவை இரண்டு சின்ன காசுகளை போட்டார். அதைப் பார்த்து இயேசு பாராட்டி பேசினார். (லூக்கா 21:1-4) இன்றும்கூட, பெரும்பாலும் சாதாரண ஜனங்கள்தான் இந்த வேலைக்காக நன்கொடை தருகிறார்கள். அதனால் யாராவது தவறாமல் நன்கொடை கொடுக்க விரும்பினால் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று ‘இதயத்தில் தீர்மானித்து’ அதை ‘சேமித்து வைக்கலாம்.’—1 கொரிந்தியர் 16:2; 2 கொரிந்தியர் 9:7.

‘யெகோவாவை மகிமைப்படுத்த’ அவர்களிடம் இருக்கிற “பொருள்களை” கொடுக்க வேண்டும் என்று யாரெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களுடைய மனதை யெகோவா தொடர்ந்து தூண்டுவார் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால் அவருடைய வேலை தொடர்ந்து நடக்கும், இதில் எந்த சந்தேகமும் இல்லை.—நீதிமொழிகள் 3:9.

  • மற்ற மதங்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்?

  • நன்கொடைகளை எதற்காகப் பயன்படுத்துகிறோம்?