Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 27

ராஜ்ய மன்றத்தில் இருக்கிற லைப்ரரி எப்படி உதவியாக இருக்கிறது?

ராஜ்ய மன்றத்தில் இருக்கிற லைப்ரரி எப்படி உதவியாக இருக்கிறது?

இஸ்ரேல்

செக் குடியரசு

பெனின்

கேமன் தீவுகள்

பைபிளை இன்னும் நன்றாக ஆராய்ச்சி செய்து படிக்க விருப்பமா? உங்களுடைய பிரச்சினையை சமாளிக்க பைபிளில் ஏதாவது ஆலோசனை இருக்கிறதா என்று யோசிக்கிறீர்களா? பைபிளில் உள்ள ஒரு நபர், இடம், பொருள், வசனம் பற்றி தெரிந்துகொள்ள ஆசையா? அப்படியென்றால், ராஜ்ய மன்றத்தில் இருக்கிற லைப்ரரிக்குப் போய் பாருங்கள்.

ஆராய்ச்சி செய்ய உதவியாக இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் தயாரித்த எல்லா புத்தகங்களும் ஒருவேளை உங்களிடம் இருக்காது. ஆனால், சமீப காலங்களில் வெளிவந்த புத்தகங்கள் ராஜ்ய மன்ற லைப்ரரியில் இருக்கும். வெவ்வேறு பைபிள்கள், நல்ல டிக்ஷ்னரி, மற்ற புத்தகங்களும்கூட அங்கு இருக்கும். கூட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்போ முடிந்த பின்போ நீங்கள் தாராளமாக இந்த லைப்ரரிக்குப் போய் படிக்கலாம். அங்கே கம்ப்யூட்டர் இருந்தால் அதில் உவாட்ச்டவர் லைப்ரரி இருக்கும். அதைப் பயன்படுத்தி யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகங்களைப் படிக்கலாம். இந்த புரோகிராமை பயன்படுத்தி, ஒரு விஷயத்தை, வார்த்தையை, வசனத்தைப் பற்றிய குறிப்புகளை உடனே கண்டுபிடிக்கலாம்.

வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் பேச்சுக்களை தயாரிக்க உதவியாக இருக்கிறது. பேச்சைத் தயாரிப்பதற்காக ராஜ்ய மன்றத்தில் இருக்கிற லைப்ரரியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த லைப்ரரியை வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் கண்காணி கவனித்துக்கொள்கிறார். சமீபத்தில் வெளிவந்த புத்தகங்கள் இருக்கிறதா, எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்துக்கொள்வார். உங்களுக்கு தேவையான தகவலை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? உங்களுக்கு படிப்பு நடத்துகிறவரையோ வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் கண்காணியையோ கேளுங்கள். லைப்ரரியில் இருக்கிற எந்தப் புத்தகத்தையும் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகக் கூடாது. புத்தகங்களை ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். அதில் கோடு போடவோ எழுதவோ கூடாது.

கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதை “புதையலை” தேடுவதைப் போல் தேட வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 2:1-5) ஆராய்ச்சி செய்வதற்கு ராஜ்ய மன்றத்தில் இருக்கிற லைப்ரரி உங்களுக்கு உதவியாக இருக்கும்.

  • ஆராய்ச்சி செய்வதற்கு ராஜ்ய மன்ற லைப்ரரியில் என்னென்ன இருக்கின்றன?

  • லைப்ரரியை எப்படி பயன்படுத்துவது என்று யாரிடம் கேட்க வேண்டும்?