Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 28

எங்கள் வெப்சைட்டில் என்ன இருக்கிறது

எங்கள் வெப்சைட்டில் என்ன இருக்கிறது

பிரான்சு

போலந்து

ரஷ்யா

“உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்” என்று சீடர்களிடம் இயேசு சொன்னார். (மத்தேயு 5:16) தொழில்நுட்பம் முன்னேறி இருக்கிற இந்தக் காலத்தில் கடவுளைப் பற்றி எல்லாருக்கும் சொல்வதற்கு இன்டர்நெட்டையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். எங்களுக்கென்று ஒரு வெப்சைட் இருக்கிறது. அதுதான் jw.org. நாங்கள் என்ன நம்புகிறோம், என்ன செய்கிறோம் என்று இந்த வெப்சைட்டில் இருந்து தெரிந்துகொள்ளலாம். எங்களுடைய வெப்சைட்டில் வேறென்ன இருக்கிறது தெரியுமா?

ஜனங்கள் கேட்கிற கேள்விகளுக்கு பைபிள் தருகிற பதில்கள். ஜனங்கள் மனதில் இருக்கிற முக்கியமான கேள்விகளுக்கு எங்கள் வெப்சைட்டில் பதில் இருக்கிறது. உதாரணத்துக்கு, கஷ்டங்களுக்கு முடிவு வருமா? இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? என்ற துண்டுப்பிரதிகள் எங்களுடைய வெப்சைட்டில் 600-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது. புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை 130-க்கும் அதிகமான மொழிகளில் எங்கள் வெப்சைட்டில் படிக்கலாம். பைபிளைப் புரிந்துகொள்ள உதவி செய்கிற புத்தகங்களும் கிடைக்கும். உதாரணத்துக்கு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தை நீங்கள் இந்த வெப்சைட்டில் பார்க்கலாம். ஒவ்வொரு மாதமும் வருகிற புதுப்புது காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை படிக்கலாம். இது போன்ற புத்தகங்களை ஆடியோ பதிவாகவும் கேட்கலாம். MP3, PDF, EPUB வடிவில் டவுன்லோட் செய்யலாம். இந்த வெப்சைட்டில் இருக்கிற விஷயங்களை யாராவது அவருடைய சொந்த மொழியில் படிக்க ஆசைப்பட்டால், அதை பிரிண்ட் எடுத்து கொடுக்கலாம். நிறைய சைகை மொழிகளில் தயாரித்த வீடியோக்களும் இந்த வெப்சைட்டில் இருக்கிறது. உயிரோட்டமுள்ள பைபிள் வாசிப்பு, நாடகம், இசை... இதையெல்லாம் டவுன்லோட் செய்து, நேரம் கிடைக்கும்போது நிதானமாக கேட்கலாம்.

யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி உண்மையான தகவல்கள். உலகம் முழுவதும் நடக்கிற எங்களுடைய வேலை சம்பந்தமான செய்திகளைப் படிக்கலாம், வீடியோக்களை பார்க்கலாம். யெகோவாவின் சாட்சிகள் சம்பந்தமாக என்னென்ன தீர்ப்புகள் வந்திருக்கின்றன... பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் எப்படி உதவி செய்தோம்... இதையெல்லாம்கூட தெரிந்துகொள்ளலாம். எங்களுடைய மாநாடுகள் எங்கெல்லாம் நடக்கப்போகிறது என்று தெரிந்துகொள்ளலாம். கிளை அலுவலகங்களின் விலாசத்தையும் பார்க்கலாம்.

இந்த உலகத்தில் ஜனங்கள் எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும் சரி, அவர்கள் எல்லாருமே பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்த வெப்சைட்டை உருவாக்கி இருக்கிறோம். அண்டார்டிகாவில் இருக்கிறவர்களும்கூட பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த வெப்சைட் உதவி செய்திருக்கிறது. உலகம் முழுவதும் ‘யெகோவாவின் வார்த்தை வேகமாக பரவ வேண்டும்,’ அவரை எல்லாரும் புகழ வேண்டும். இதற்காகத்தான் நாங்கள் ஜெபம் செய்கிறோம்.—2 தெசலோனிக்கேயர் 3:1.

  • பைபிளை சரியாக புரிந்துகொள்ள jw.org வெப்சைட் எப்படி நிறையப் பேருக்கு உதவி செய்கிறது?

  • எங்களுடைய வெப்சைட்டில் நீங்கள் எதைப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள்?