Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 15

யெகோவாவைப் பற்றி படிப்பதை ஏன் விட்டுவிடக் கூடாது?

யெகோவாவைப் பற்றி படிப்பதை ஏன் விட்டுவிடக் கூடாது?

1. பைபிளை தொடர்ந்து படிப்பதால் என்ன நன்மை?

இதுவரை பைபிளில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டீர்கள். இப்போது யெகோவாமீது உங்களுக்கு அன்பு அதிகமாகியிருக்கும். அந்த அன்பு இன்னும் அதிகமாக வேண்டுமென்றால் தொடர்ந்து பைபிளைப் படிக்க வேண்டும். (1 பேதுரு 2:2) அப்போதுதான், யெகோவாவோடு இருக்கும் உங்கள் நட்பை பலப்படுத்த முடியும், சாவில்லாத வாழ்க்கையும் உங்களுக்குக் கிடைக்கும்.​—யோவான் 17:3-ஐயும் யூதா 21-ஐயும் வாசியுங்கள்.

கடவுளைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளும்போது அவர்மீது இருக்கும் உங்கள் நம்பிக்கை அதிகமாகும். அப்போது, கடவுளுக்கு பிடித்ததைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். (எபிரெயர் 11:1, 6) நீங்கள் மனம் திருந்தி உங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள்.​—அப்போஸ்தலர் 3:19-ஐ வாசியுங்கள்.

2. நீங்கள் தெரிந்துகொண்ட விஷயங்களை யாரிடம் சொல்லலாம்?

யெகோவாவுக்கு மகனாக அல்லது மகளாக ஆகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்

நாம் ஏதாவது சந்தோஷமான விஷயத்தை கேள்விப்பட்டால் மற்றவர்களுக்கு அதைச் சொல்ல வேண்டும் என்று நினைப்போம். அதேபோல், நீங்களும் பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட சந்தோஷமான விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். பைபிளைப் படிக்கப் படிக்க யெகோவாவைப் பற்றியும் நீங்கள் கற்றுக்கொண்ட சந்தோஷமான விஷயங்களைப் பற்றியும் பைபிளிலிருந்து மற்றவர்களுக்கு எப்படி விளக்கலாம் என்று தெரிந்துகொள்வீர்கள்.​—ரோமர் 10:13-15-ஐ வாசியுங்கள்.

முதலில் நண்பர்களிடமும் சொந்தக்காரர்களிடமும் சொல்லுங்கள். அவர்களிடம் பக்குவமாகப் பேசுங்கள். அவர்கள் நம்புவது எல்லாம் தவறு என்று நேரடியாக சொல்லாதீர்கள். அதற்குப் பதிலாக, கடவுள் தரப்போகிற நல்ல வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள். எல்லாவற்றையும்விட நீங்கள் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்வதுதான் முக்கியம். அதுதான் அவர்கள் மனதை தொடும்.​—2 தீமோத்தேயு 2:24, 25-ஐ வாசியுங்கள்.

3. பைபிளைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கு என்ன வாய்ப்பு கிடைக்கும்?

பைபிளைப் படிக்கப் படிக்க கடவுளுக்காக இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். யெகோவாவுடைய மகனாக அல்லது மகளாக ஆகும் மிகப் பெரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் அவருடைய குடும்பத்தில் ஒருவராக ஆவீர்கள்.​—2 கொரிந்தியர் 6:18-ஐ வாசியுங்கள்.

4. தொடர்ந்து முன்னேறுவதற்கு என்ன செய்யலாம்?

தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆசைப்பட்டால், தவறாமல் பைபிளைப் படிக்க வேண்டும். (எபிரெயர் 5:13, 14) அதற்கு, பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது? புத்தகம் உதவியாக இருக்கும். அதிலிருந்து சொல்லித்தரும்படி யெகோவாவின் சாட்சிகளிடம் கேளுங்கள். நீங்கள் எந்தளவுக்கு பைபிளைப் படிக்கிறீர்களோ அந்தளவுக்கு உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.​—சங்கீதம் 1:1-3; 73:27, 28-ஐ வாசியுங்கள்.

யெகோவா சந்தோஷமுள்ள கடவுள். அவர் சொன்ன சந்தோஷமான செய்தியை இப்போது நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். அவருடைய நண்பராக வேண்டுமென்றால், அவரை வணங்குகிற ஜனங்களோடு பழகுங்கள். (எபிரெயர் 10:24, 25) அவருக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்ள நீங்கள் முயற்சி செய்தால் சாவில்லாத வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். கடவுளுக்கு நண்பராக இருப்பதைவிட வேறெந்த விஷயம் இந்த உலகத்தில் பெரியதாக இருக்க முடியும்?​—1 தீமோத்தேயு 1:11; 6:19-ஐ வாசியுங்கள்.