Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 7

உன்னோடு யாருமே இல்லை என்று பயப்படுகிறாயா?

உன்னோடு யாருமே இல்லை என்று பயப்படுகிறாயா?

இந்தக் குட்டிப் பையனைப் பாரு. தனியா, பயந்துபோய் உட்கார்ந்திருக்கான். ‘என்கூட யாருமே இல்லை’னு நினைச்சு நீயும் எப்போவாவது பயந்திருக்கியா?— எல்லோருக்குமே சிலநேரம் இப்படிப் பயமா இருக்கும். யெகோவாவுக்கு நண்பர்களா இருந்த சிலர்கூட இப்படிப் பயந்திருக்காங்க. அதுல ஒருத்தர்தான் எலியா. அவரை பத்தி இப்போ படிக்கலாம்.

யேசபேல் எலியாவைக் கொல்லத் துடிக்கிறாள்

இயேசு பிறக்கிறதுக்கு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எலியா இஸ்ரவேல் நாட்டுல வாழ்ந்தார். அந்த நாட்டு ராஜா பேரு ஆகாப். ராணி பேரு யேசபேல். அவங்க ரெண்டு பேரும் யெகோவாவை வணங்கல. பாகால்னு ஒரு பொய்க் கடவுளை வணங்குனாங்க. அவங்களை பார்த்து இஸ்ரவேல் நாட்டுல நிறைய பேர் பாகாலை வணங்க ஆரம்பிச்சாங்க. யேசபேல் ராணி ரொம்பக் கெட்டவள். யெகோவாவை வணங்குற ஆட்களைக் கொல்ல பார்த்தாள். எலியாவையும் கொல்ல பார்த்தாள். இது தெரிஞ்சதும் எலியா என்ன செய்தார் தெரியுமா?—

எலியா அங்கே இருந்து தப்பிச்சு ரொம்ப தூரம் ஓடினார். யாருமே இல்லாத பாலைவனத்துக்கு போனார், ஒரு குகையில ஒளிஞ்சிக்கிட்டார். அவரு ஏன் ஓடிப்போனார்?— அவருக்கு ரொம்ப பயமா இருந்தது. ஆனா, எலியா தைரியமா இருந்திருக்கலாம். அவருக்கு உதவி செய்யத்தான் யெகோவா இருக்காரே! யெகோவாவுக்கு எவ்ளோ சக்தி இருக்குனு எலியாவுக்கு நல்லா தெரியும். ஏன்னா, ஒரு தடவை எலியா ஜெபம் செஞ்சப்போ யெகோவா வானத்தில இருந்து நெருப்பை அனுப்பி உதவி செய்தார். அப்போ உதவி செஞ்ச யெகோவா, இப்போ செய்ய மாட்டாரா?

எலியாவுக்கு யெகோவா எப்படி உதவி செய்றார்?

எலியா அந்தக் குகையில இருந்தப்போ, யெகோவா அவர்கிட்ட பேசினார். ‘எலியா, இங்க என்ன செய்ற?’னு கேட்டார். ‘நான் இப்போ தனியா இருக்கேன். உங்களை வணங்குற யாருமே உயிரோட இல்ல. என்னையும் கொலை பண்ணிடுவாங்களோனு பயமா இருக்கு’னு எலியா சொன்னார். யெகோவாவை வணங்குற எல்லாரையும் யேசபேல் கொன்னுட்டானு எலியா நினைச்சார். ஆனா, யெகோவா அவர்கிட்ட, ‘என்னை வணங்குற ஆட்கள் இன்னும் 7,000 பேர் உயிரோட இருக்காங்க. அதனால, தைரியமா இரு எலியா. நீ செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு’னு சொன்னார். அதைக் கேட்டதும் எலியாவுக்கு எப்படி இருந்திருக்கும்?—

இந்தக் கதையில நீ என்ன கத்துக்கிட்ட?— ‘என்கூட யாருமே இல்லை, ரொம்ப பயமா இருக்கு’னு நினைக்கவே நினைக்காத. உன்னை மாதிரியே யெகோவாவ வணங்குற நிறைய பேர் இருக்காங்க. அவங்க எல்லாரும் உன்மேல உயிரையே வச்சிருக்காங்க. அதோட, யெகோவா உன்கூட இருக்கிறார். அவருக்கு நிறைய சக்தி இருக்கு. யெகோவா எப்பவும் உன்கூடவே இருந்தா எப்படி இருக்கும்?—