Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 9

எரேமியா எப்போதும் யெகோவாவைப் பற்றிச் சொன்னார்

எரேமியா எப்போதும் யெகோவாவைப் பற்றிச் சொன்னார்

மக்கள் ஏன் எரேமியா மேல கோபமா இருக்காங்க?

எரேமியாவை யெகோவா காப்பாத்தினார்

யெகோவாவை பத்தி சொல்லும்போது சிலர் கேலி பண்ணுவாங்க. சிலர் திட்டுவாங்க. உடனே, ‘இனிமே கடவுளை பத்தி யார்கிட்டயும் சொல்லவே மாட்டேன்’னு நாம நினைக்கலாம். நீ அப்படி நினைச்சிருக்கியா?— யெகோவா மேல ரொம்ப அன்பு வச்சிருந்த ஒருத்தர்கூட அப்படித்தான் நினைச்சார். அவரோட பேரு எரேமியா. அவரை பத்தி படிக்க ஆசையா?

ஒரு சமயம் எரேமியாவுக்கு யெகோவா ஒரு வேலை கொடுத்தார். மக்கள்கிட்ட போய், ‘இனிமே தப்பு செய்யக்கூடாது’னு சொல்லச் சொன்னார். ஆனா, எரேமியாவுக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. ‘யெகோவாவே, நான் சின்னப் பையன். எனக்கு சரியா பேசக்கூட தெரியாது’னு சொன்னார். அப்போ யெகோவா அவர்கிட்ட, ‘பயப்படாத, எரேமியா. நான் உன்கூட இருக்கேன்’னு சொன்னார்.

அதனால எரேமியா மக்கள்கிட்ட போய், ‘நீங்க இப்படியே தப்பு செய்தா, யெகோவா உங்களுக்கு தண்டனை கொடுப்பார்’னு சொன்னார். எரேமியா பேச்சைக் கேட்டு மக்கள் திருந்திட்டாங்களா?— இல்லை. அவரைப் பார்த்து கேலி செய்தாங்க. அவரை திட்டினாங்க. சிலபேர் அவரை கொல்ல நினைச்சாங்க. எரேமியாவுக்கு எப்படி இருந்திருக்கும்?— அவருக்கு ரொம்ப பயமா இருந்தது. ‘நான் இனிமே யெகோவாவை பத்தி சொல்லவே மாட்டேன்’னு சொன்னார். யெகோவாவை பத்தி சொல்றத எரேமியா நிறுத்திட்டாரா?— இல்லவே இல்லை. எரேமியாவுக்கு யெகோவாவை ரொம்பப் பிடிக்கும். அதனால அவரை பத்தி சொல்லாம இருக்கவே முடியல. மறுபடியும் யெகோவாவை பத்தி மக்கள்கிட்ட சொல்ல ஆரம்பிச்சார். அதனால் யெகோவா அவரை நல்லா பார்த்துக்கிட்டார்.

ஒருநாள், கெட்டவங்க சிலபேர் எரேமியாவைத் தூக்கி ஆழமான குழியில போட்டுட்டாங்க. அதில ஒரே சேறா இருந்துச்சு. அவருக்குச் சாப்பாடு, தண்ணி எதுவுமே கிடைக்கல. ‘இங்கேயே கிடந்து சாகட்டும்’னு அந்தக் கெட்டவங்க நினைச்சாங்க. ஆனா எரேமியாவை யெகோவா காப்பாத்தினார்.

இந்தக் கதையில நீ என்ன கத்துகிட்ட?— எரேமியாவுக்கு சில சமயம் பயமா இருந்தாலும், எப்பவும் யெகோவாவை பத்தி சொன்னார். நீ யெகோவாவை பத்தி சொல்லும்போது சிலர் உன்னை கேலி செய்யலாம், திட்டலாம். அப்போ உனக்கு பயமா இருக்கும், கஷ்டமா இருக்கும். அதுக்காக, யெகோவாவை பத்தி சொல்லாம இருந்துடாத. யெகோவா எரேமியாகூட இருந்த மாதிரி, உன்கூடயும் இருப்பார்.

பைபிளில் படிங்க