Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 12

தைரியமான பையன் பவுலை காப்பாற்றினான்

தைரியமான பையன் பவுலை காப்பாற்றினான்

ஒரு பையன் அவனோட மாமா உயிரை காப்பாத்தினான். அந்த தைரியமான பையனை பத்தி இப்போ படிக்கப் போறோம். அவன் பேரு பைபிள்ல இல்லை. அவனோட மாமாதான் அப்போஸ்தலன் பவுல். சரி, அவன் எப்படிப் பவுலை காப்பாத்தினான்? தெரிஞ்சிக்க ஆசையா இருக்கா?—

எருசலேம் ஊர்ல இருந்த ஜெயில்ல பவுல் இருந்தார். ஏன் தெரியுமா? இயேசுவை பத்தி மக்கள்கிட்ட பவுல் சொன்னார். அதனால அவரை தூக்கி ஜெயில்ல போட்டுட்டாங்க. பவுலை கொல்ல கெட்டவங்க சில பேர் திட்டம் போட்டாங்க. ‘பவுலை விசாரிக்கணும், கூட்டிட்டு வாங்கனு தளபதிகிட்ட சொல்லலாம். கூட்டிட்டு வரும்போது வழியிலயே அவங்களை மடக்கி, பவுலை கொலை பண்ணிடலாம்’னு பேசிகிட்டாங்க.

கெட்டவங்க போட்ட திட்டத்தை அந்தப் பையன் பவுல்கிட்டயும் தளபதிகிட்டயும் சொல்கிறான்

பவுலோட சொந்தக்காரப் பையனுக்கு இது எப்படியோ தெரிஞ்சிடுச்சி. அவன் என்ன செய்தான் தெரியுமா? நேரா ஜெயிலுக்குப் போனான். விஷயத்தைப் பவுல்கிட்ட சொன்னான். ‘உடனே தளபதிகிட்ட இதை சொல்லு’னு பவுல் சொன்னார். தளபதினா ரொம்ப முக்கியமான ஆள். தளபதிகிட்ட போய் சொல்ல அந்தப் பையனுக்குப் பயமா இருந்துச்சா?— ஆமா. பயமா இருந்தாலும், அவன் தைரியமா போய் சொன்னான்.

அன்னிக்கு ராத்திரியே அந்தத் தளபதி செசரியா-னு ஒரு ஊருக்குப் பவுலை அனுப்பி வைச்சார். பவுலுக்குத் துணையா கிட்டத்தட்ட 500 வீரர்களை அனுப்பினார். பவுல் பத்திரமா ஊருக்குப் போனாரா?— ஆமா, கெட்டவங்களால பவுலை கொல்ல முடியல. அவங்க திட்டம் போட்ட மாதிரி எதுவுமே நடக்கல.

இந்தக் கதையில நீ என்ன கத்துக்கிட்ட?— நீயும் அந்தப் பையன் மாதிரி தைரியமா இருக்கணும். யெகோவாவை பத்தி எல்லார்கிட்டயும் தைரியமா பேசணும். நீ எப்பவும் யெகோவாவை பத்தி தைரியமா பேசுவியா?— அப்படிச் செய்தா, நீயும் மத்தவங்க உயிரை காப்பாத்தலாம்.