Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இடது: கொரியாவில் ஒரு பயனியர் சகோதரி பிரசங்கிக்கிறார், 1931; வலது: கொரியாவில் இன்று சைகை மொழியில் பிரசங்கிக்கிறார்கள்

பகுதி 2

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிப்பது​—⁠நல்ல செய்தியை உலகம் முழுவதும் பரப்புவது

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிப்பது​—⁠நல்ல செய்தியை உலகம் முழுவதும் பரப்புவது

விடுமுறை நாளில் ஊழியத்துக்குப் போக காலையிலேயே தயாரிக்கிறீர்கள். ஆனால், கொஞ்சம் களைப்பாக உணர்வதால் போவதா வேண்டாமா என்று யோசிக்கிறீர்கள். ஓய்வெடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். ஆனாலும், அதைப் பற்றி ஜெபம் செய்துவிட்டு ஊழியத்துக்குப் போகத் தீர்மானிக்கிறீர்கள். வயதான ஒரு சகோதரியோடு அன்று ஊழியம் செய்கிறீர்கள். கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்கிற அந்தச் சகோதரியின் விசுவாசமும் சகிப்புத்தன்மையும் உங்கள் மனதைத் தொடுகிறது. ஊழியம் செய்யும்போது ஒரு விஷயம் உங்கள் மனதுக்கு வருகிறது: உலகம் முழுவதுமுள்ள சகோதர சகோதரிகள் இதே செய்தியைத்தான் சொல்கிறார்கள்... அவர்களிடம் இருப்பதும் இதே பிரசுரங்கள்தான்... எல்லாருக்கும் கிடைக்கிற பயிற்சியும் ஒன்றுதான்! அன்று ஊழியம் செய்த பிறகு, புதுத் தெம்போடு வீடு திரும்புகிறீர்கள். வீட்டிலேயே இருந்துவிடாமல் ஊழியத்துக்குப் போனதை நினைத்து ரொம்பச் சந்தோஷப்படுகிறீர்கள்.

இன்று, கடவுளுடைய அரசாங்கம் செய்யும் மிக முக்கியமான வேலை பிரசங்க வேலைதான். இந்தக் கடைசி நாட்களில் பிரசங்க வேலை பெரியளவில் செய்யப்படும் என்று இயேசு முன்னதாகவே சொன்னார். (மத். 24:14) அவர் சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியிருக்கிறது? ஊழியம் செய்த ஆட்களையும், அவர்கள் பயன்படுத்திய ஊழிய முறைகளையும், ஊழியத்தில் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்த கருவிகளையும் பற்றி இந்தப் பகுதியில் பார்ப்போம். கடவுளுடைய அரசாங்கம் நிஜமானது என்பதை உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் புரிந்துகொள்ள இந்தப் பிரசங்க வேலை உதவுகிறது.

இந்தப் பகுதியில்

அதிகாரம் 6

பிரசங்க வேலை செய்பவர்கள்​​—⁠தங்களை மனப்பூர்வமாக அர்ப்பணிக்கும் ஊழியர்கள்

இந்தக் கடைசி நாட்களில், மனப்பூர்வமாகப் பிரசங்க வேலை செய்கிறவர்களின் ஒரு படை இருக்கும் என்று இயேசு ஏன் உறுதியாக நம்பினார்? கடவுளுடைய அரசாங்கத்துக்கு நீங்கள் முதலிடம் கொடுப்பதை எப்படிக் காட்டலாம்?

அதிகாரம் 7

ஊழிய முறைகள்​—⁠மக்களைச் சென்றெட்ட எல்லா முறைகளையும் பயன்படுத்துவது

முடிவு வருவதற்குள் ஏராளமான மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல, கடவுளுடைய மக்கள் பயன்படுத்திய புதுப் புது வழிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 8

பிரசங்கிப்பதற்கான கருவிகள்​—⁠உலகெங்குமுள்ள மக்களுக்காகப் பிரசுரங்களைத் தயாரித்தல்

ராஜாவான இயேசுவின் ஆதரவு நமக்கு இருப்பதை நம் மொழிபெயர்ப்பு வேலை எப்படிக் காட்டுகிறது? நம் பிரசுரங்களைப் பற்றிய என்ன விஷயங்கள் கடவுளுடைய அரசாங்கம் நிஜமானது என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்துகிறது?

அதிகாரம் 9

பிரசங்க வேலையின் பலன்கள்—‘வயல்கள் . . . அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன’

மிகப்பெரிய அறுவடை சம்பந்தமான இரண்டு முக்கியமான பாடங்களைத் தன் சீஷர்களுக்கு இயேசு கற்றுக்கொடுத்தார். இந்தப் பாடங்கள் நம்மை என்ன செய்யத் தூண்டுகின்றன?