Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இடது: 1945-ல் நெதர்லாந்திலுள்ள, ஐன்ட்ஹோவனில் ஊழியம் செய்ததற்காக ஒரு சகோதரர் கைது செய்யப்படுகிறார்; வலது: உங்கள் நாட்டில் ஊழியம் செய்வதற்கு சட்டப்பூர்வ உரிமை இருக்கிறதா?

பகுதி 4

கடவுளுடைய அரசாங்கத்தின் வெற்றிகள்​—⁠நல்ல செய்தியை அறிவிக்க சட்டப்பூர்வ உரிமை பெறுவது

கடவுளுடைய அரசாங்கத்தின் வெற்றிகள்​—⁠நல்ல செய்தியை அறிவிக்க சட்டப்பூர்வ உரிமை பெறுவது

நீங்கள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருக்கும்போது போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் தூரத்தில் கேட்கிறது. கொஞ்ச நேரத்தில் அந்தச் சத்தம் உங்களுக்குப் பக்கத்திலேயே கேட்கிறது. அடுத்த வீட்டில் நீங்கள் பேசும்போது அந்த போலீஸ் வண்டி அந்த வீட்டுக்கு எதிரில் வந்து நிற்பதை உங்களோடு ஊழியம் செய்கிறவர் பார்க்கிறார். ஒரு போலீஸ் அதிகாரி, வண்டியிலிருந்து இறங்கி வந்து, “வீடுவீடாகப் போய் பைபிளைப் பற்றிப் பேசுகிறவர்கள் நீங்கள்தானா? உங்களைப் பற்றி எங்களுக்கு நிறைய புகார் வந்துகொண்டிருக்கிறது” என்று சொல்கிறார். நீங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதை அவரிடம் மரியாதையோடு சொல்கிறீர்கள். அடுத்து என்ன நடக்கும்?

இந்த மாதிரி சூழ்நிலைகளில் முன்பு அந்த இடத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதை வைத்தே இதைச் சொல்ல முடியும். நீங்கள் வாழும் நாட்டில் இதற்கு முன்பு யெகோவாவின் சாட்சிகளை அரசாங்கம் எப்படி நடத்தியிருக்கிறது? இப்போது, ஓரளவுக்கு மதச் சுதந்திரம் இருக்கிறதா? அப்படியென்றால், ‘நல்ல செய்திக்காக வழக்காடி, அதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெற’ உங்கள் சகோதர சகோதரிகள் பல வருஷங்களாகப் பாடுபட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. (பிலி. 1:7) நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, யெகோவாவின் சாட்சிகளுக்குக் கிடைத்த வெற்றிகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பது உங்கள் விசுவாசத்தை ரொம்பவே பலப்படுத்தும். இந்தப் பகுதியில், நமக்குக் கிடைத்த சில குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பற்றிப் பார்க்கலாம். கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது என்பதற்கு இது வியக்கவைக்கும் ஆதாரமாக இருக்கிறது. ஏனென்றால், நம்முடைய பலத்தால் இதை ஒருபோதும் சாதித்திருக்க முடியாது!

இந்தப் பகுதியில்

அதிகாரம் 13

நல்ல செய்தியை அறிவிப்பவர்கள் வழக்குத் தொடுக்கிறார்கள்

இன்றுள்ள சில உயர் நீதிமன்ற நீதிபதிகள் பழங்காலத்தில் வாழ்ந்த திருச்சட்டப் போதகரான கமாலியேலைப் போல நடந்துகொள்கிறார்கள்.

அதிகாரம் 14

கடவுளுடைய அரசாங்கத்தை மட்டுமே உண்மையோடு ஆதரிப்பது

அரசியல் விவகாரங்களில் யெகோவாவின் சாட்சிகள் நடுநிலையோடு இருந்ததால் அவர்கள்மேல் துன்புறுத்தல்கள் “ஆறுபோல்” பாய்ந்து வந்தன. எதிர்பாரா விதத்தில், அந்தத் துன்புறுத்தல்களிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைத்தது.

அதிகாரம் 15

வணக்கச் சுதந்திரத்துக்காகப் போராடுதல்

கடவுளுடைய மக்கள் அவருடைய அரசாங்கத்தின் சட்டத்துக்குக் கீழ்ப்படிவதற்கான உரிமையைப் பெற போராடியிருக்கிறார்கள்.