Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இடது: 1946-ல் சுவிட்சர்லாந்திலிருந்து ஜெர்மனிக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன; வலது: 2011-ல் ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு ராஜ்ய மன்றம் திரும்பக் கட்டப்படுகிறது

பகுதி 6

கடவுளுடைய அரசாங்கத்துக்கு ஆதரவு​—⁠வழிபாட்டு இடங்களைக் கட்டுவதும் நிவாரண உதவிகளை அளிப்பதும்

கடவுளுடைய அரசாங்கத்துக்கு ஆதரவு​—⁠வழிபாட்டு இடங்களைக் கட்டுவதும் நிவாரண உதவிகளை அளிப்பதும்

நீங்கள் உங்களுடைய ராஜ்ய மன்றத்துக்குள் போகிறீர்கள். ஆனால் உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியாதளவுக்கு அது மாறியிருக்கிறது. சில வருஷங்களுக்கு முன் அதன் கட்டுமான வேலை நடந்தபோது நீங்கள் அதில் பங்கெடுத்த இனிய நினைவுகள் உங்கள் மனதில் இருக்கலாம். அந்தக் கட்டிடத்தைப் பார்த்து நீங்கள் எப்போதுமே பெருமைப்பட்டிருக்கிறீர்கள். இப்போது, அந்த ராஜ்ய மன்றம் தற்காலிக நிவாரண மையமாக மாறியிருக்கிறது. அதை நினைத்து நீங்கள் இன்னும் பெருமைப்படுகிறீர்கள். சமீபத்தில், ஒரு சூறாவளி அடித்ததால், நீங்கள் வாழும் பகுதி வெள்ளக்காடாக மாறியிருக்கிறது, நிறைய சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை, சுத்தமான தண்ணீர் ஆகியவற்றை வழங்குவதற்காகவும் மற்ற உதவிகளைச் செய்வதற்காகவும் கிளை அலுவலகக் குழு உடனடியாக ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. நன்கொடையாகக் கிடைத்த பொருள்களும் அங்கே நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சகோதர சகோதரிகள் வரிசையில் வந்து தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு போகிறார்கள். அவர்களில் நிறைய பேருடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதுதான் தன்னைப் பின்பற்றுகிற மக்களின் முக்கியமான அடையாளம் என்று இயேசு சொன்னார். (யோவா. 13:34, 35) யெகோவாவின் சாட்சிகள், கட்டுமான பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் ஈடுபடும்போது அவர்களுடைய கிறிஸ்தவ அன்பு எப்படிப் பளிச்சிடுகிறது என்பதை இந்தப் பகுதியில் பார்ப்போம். நாம் இயேசுவின் ஆட்சியின் கீழ் வாழ்கிறோம் என்பதற்கு இந்த அன்பு மிகச் சிறந்த அத்தாட்சி.

இந்தப் பகுதியில்

அதிகாரம் 18

கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்குப் பணம் கிடைக்கும் விதம்

பண உதவி எப்படிக் கிடைக்கிறது? அது எப்படிப் பயன்படுத்தப்படுகிறது?

அதிகாரம் 19

யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் கட்டுமான வேலைகள்

வழிபாட்டுக்கான இடங்கள் கடவுளுக்கு மகிமை சேர்த்தாலும் அவர் வேறொரு விஷயத்தைத்தான் உயர்வாகக் கருதுகிறார்.

அதிகாரம் 20

நிவாரண ஊழியம்

நிவாரணப் பணி, நாம் யெகோவாவுக்குச் செய்யும் பரிசுத்த சேவையின் பாகம் என்று நமக்கு எப்படித் தெரியும்?