Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 4

யூதேயாவில் இயேசு பிற்பாடு செய்த ஊழியம்

“அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பச் சொல்லி அறுவடையின் எஜமானிடம் கெஞ்சிக் கேளுங்கள்.”​—லூக்கா 10:2

யூதேயாவில் இயேசு பிற்பாடு செய்த ஊழியம்

இந்தப் பகுதியில்

அதிகாரம் 66

எருசலேமில் கூடாரப் பண்டிகை

இயேசுவுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று மக்கள் ஏன் சொல்கிறார்கள்?

அதிகாரம் 67

“அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை”

கிட்டத்தட்ட, யூத உயர் நீதிமன்றத்தில் இருக்கிற எல்லாருமே இயேசுவை எதிர்க்கிறார்கள். ஆனால், ஒருவர் மட்டும் தைரியமாக இயேசுவை ஆதரித்துப் பேசுகிறார்.

அதிகாரம் 68

கடவுளின் மகன் “உலகத்துக்கு ஒளியாக” இருக்கிறார்

“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொல்கிறார். எதிலிருந்து?

அதிகாரம் 69

அவர்களுடைய தகப்பன்​​—⁠ஆபிரகாமா, பிசாசா?

ஆபிரகாமின் பிள்ளைகள் யார் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது என்று இயேசு சொல்கிறார். தன்னுடைய தகப்பன் யார் என்பதையும் சொல்கிறார்.

அதிகாரம் 70

பிறந்ததிலிருந்தே பார்வை இல்லாதவனைக் குணமாக்குகிறார்

இந்த மனிதன் ஏன் பார்வை இல்லாதவனாகப் பிறந்தான் என்று சீஷர்கள் கேட்கிறார்கள். இவன் செய்த பாவத்தினாலா? இவனுடைய அப்பா-அம்மா செய்த பாவத்தினாலா? இயேசு அவனைக் குணமாக்கிய பிறகு, மக்கள் அவரைப் பற்றி ஒவ்வொரு விதமாகப் பேசுகிறார்கள்.

அதிகாரம் 71

பார்வை பெற்ற மனிதனைப் பரிசேயர்கள் விசாரிக்கிறார்கள்

இயேசுவினால் பார்வை பெற்ற மனிதனின் நியாயமான வாதத்தைக் கேட்டு பரிசேயர்கள் கோபப்படுகிறார்கள். அவனுடைய அப்பா-அம்மா பயந்தது போலவே அவனை ஜெபக்கூடத்திலிருந்து நீக்கிவிடுகிறார்கள்.

அதிகாரம் 72

பிரசங்கிப்பதற்காக 70 பேரை அனுப்புகிறார்

யூதேயாவில் பிரசங்கிப்பதற்கு இயேசு தன்னுடைய 70 சீஷர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்புகிறார். இந்தச் சீஷர்கள் மக்களை எங்கே போய்ப் பார்ப்பார்கள்? ஜெபக்கூடங்களிலா, வீடுகளிலா?

அதிகாரம் 73

ஒரு சமாரியர் அன்பு காட்டுகிறார்

‘நல்ல சமாரியரை’ பற்றிய கதையின் மூலம் இயேசு எப்படி ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறார்?

அதிகாரம் 74

உபசரிப்பதும் ஜெபம் செய்வதும்

மார்த்தாள்-மரியாளின் வீட்டுக்கு இயேசு போகிறார். உபசரிப்பதைப் பற்றி அவர் என்ன கற்றுக்கொடுக்கிறார்? பிறகு, ஜெபம் செய்ய தன்னுடைய சீஷர்களுக்கு எப்படிக் கற்றுக்கொடுக்கிறார்?

அதிகாரம் 75

எது உண்மையான சந்தோஷம்?

இயேசு தன்னை எதிர்க்கிறவர்களிடம் ‘கடவுளுடைய விரலை’ பற்றிச் சொல்கிறார். ‘கடவுளுடைய அரசாங்கம் வந்துவிட்டதை அவர்கள் எப்படிக் கவனிக்கவில்லை’ என்றும் சொல்கிறார். உண்மையான சந்தோஷம் எப்படிக் கிடைக்கும் என்றும்கூட சொல்கிறார்.

அதிகாரம் 76

பரிசேயனோடு விருந்து சாப்பிடுகிறார்

பரிசேயர்களும் வேத அறிஞர்களும் பக்திமான்களைப் போல் வெளிவேஷம் போடுவதாக இயேசு சொல்கிறார். மக்கள்மீது என்ன பாரமான சுமைகளை அவர்கள் சுமத்துகிறார்கள்?

அதிகாரம் 77

சொத்து சேர்ப்பதைப் பற்றிய ஆலோசனை

பெரிய பெரிய களஞ்சியங்களைக் கட்டிய பணக்காரனைப் பற்றிய உவமையை இயேசு சொல்கிறார். சொத்து சேர்ப்பதில் குறியாக இருப்பதைப் பற்றிய என்ன ஆலோசனையை அவர் மறுபடியும் கொடுக்கிறார்?

அதிகாரம் 78

உண்மையுள்ள நிர்வாகி தயாராக இருக்க வேண்டும்

தன் சீஷர்களின் ஆன்மீக நலனில் இயேசு அக்கறை வைத்திருக்கிறார். அவர்கள் ஆன்மீக ரீதியில் நன்றாக இருப்பதற்கு நிர்வாகி எப்படி உதவுவார்? தயாராக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

அதிகாரம் 79

ஏன் அவர்களுக்கு அழிவு?

மனம் திருந்தவில்லை என்றால் கண்டிப்பாக அழிந்துபோவார்கள் என்று மக்களிடம் இயேசு சொல்கிறார். கடவுள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று அவர்களை யோசிக்க வைக்க இயேசு முயற்சி செய்கிறார். மக்கள் அதைப் புரிந்துகொள்வார்களா?

அதிகாரம் 80

நல்ல மேய்ப்பனும் தொழுவங்களும்

மேய்ப்பனுக்கும் ஆடுகளுக்கும் இருக்கிற பந்தம், இயேசு தன் சீஷர்களை எப்படிக் கருதுகிறார் என்பதைக் காட்டுகிறது. அவர் கற்றுக்கொடுக்கிற விஷயங்களை அவர்கள் புரிந்துகொண்டு அவரைப் பின்பற்றுவார்களா?

அதிகாரம் 81

எந்த விதத்தில் இயேசுவும் கடவுளும் ஒன்றாயிருக்கிறார்கள்?

இயேசு தன்னைக் கடவுளுக்குச் சமமாக்கிக்கொள்வதாக அவரை எதிர்க்கிற சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அது பொய் என்பதை இயேசு எப்படித் திறமையாக நிரூபிக்கிறார்?