Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகம் எப்படி இருக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார்?

உலகம் எப்படி இருக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார்?

நியூஸ்பேப்பரில், டிவியில், ரேடியோவில், அல்லது இன்டர்நெட்டில் போர், குற்றச்செயல், தீவிரவாதம் போன்ற சம்பவங்களைப் பற்றித்தான் நாம் அதிகமாகக் கேள்விப்படுகிறோம். நீங்கள்கூட ஏதாவது வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கலாம். அல்லது யாரையாவது மரணத்தில் பறிகொடுத்து தவித்துக்கொண்டு இருக்கலாம்.

அதனால், உங்களுடைய மனதில் இந்தக் கேள்விகள் வரலாம்:

  • நானும் என் குடும்பமும் இப்படித்தான் வாழ வேண்டுமென்று கடவுள் விரும்புகிறாரா?

  • என்னுடைய பிரச்சினைகளைச் சமாளிக்க வழி இருக்கிறதா?

  • இந்த உலகத்தில் உண்மையான சமாதானம் எப்போதாவது வருமா?

இந்தக் கேள்விகளுக்கு பைபிளில் திருப்தியான பதில்கள் இருக்கின்றன.

கடவுள் இந்த உலகத்தில் அற்புதங்களைச் செய்யப்போவதாக பைபிள் சொல்கிறது.

  • மக்களுக்கு இனி வேதனையும் முதுமையும் சாவும் வராது.—வெளிப்படுத்துதல் 21:4

  • “நடக்க முடியாதவர்கள் மான்போல் துள்ளி ஓடுவார்கள்.”​—ஏசாயா 35:6

  • “கண் தெரியாதவர்களுக்குக் கண் தெரியும்.”​—ஏசாயா 35:5

  • இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள்.​—யோவான் 5:28, 29

  • யாருக்கும் எந்த வியாதியும் வராது.​—ஏசாயா 33:24

  • சாப்பிடுவதற்கு எல்லாருக்குமே நிறைய உணவு இருக்கும்.​—சங்கீதம் 72:16

பைபிள் சொல்லித் தரும் விஷயங்களிலிருந்து பயன் பெறுங்கள்

இந்தப் புத்தகத்தின் ஆரம்ப பக்கங்களில் பார்த்த விஷயங்களெல்லாம் கனவில் மட்டும்தான் நடக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், ரொம்பச் சீக்கிரத்தில் அதையெல்லாம் செய்யப் போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். அதை எப்படிச் செய்யப்போகிறார் என்று பைபிள் சொல்கிறது.

அதோடு, இப்போதே சந்தோஷமாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக்கூட பைபிள் சொல்கிறது. உங்களுக்கு இருக்கும் கவலைகளைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒருவேளை பணப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினை, வியாதி அல்லது அன்பானவரின் மரணம் உங்கள் கவலைக்குக் காரணமாக இருக்கலாம். இந்த எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்க பைபிள் உங்களுக்கு உதவும். அதோடு, இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தருவதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்:

பைபிள் சொல்லித் தரும் விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவதால்தான் இந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். ஒவ்வொரு பாராவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிற கேள்விகள், பைபிளை நன்றாகப் புரிந்துகொள்ள உதவும். லட்சக்கணக்கான மக்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்து பிரயோஜனம் அடைந்திருக்கிறார்கள். நீங்களும் பிரயோஜனம் அடைவீர்கள் என்று நம்புகிறோம். பைபிள் சொல்லித் தரும் விஷயங்களைத் தெரிந்துகொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சியைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!